என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "General secretary"
- ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
- பிஜு ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அரிந்தம் ராய் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அரிந்தம் ராய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரிந்தம் ராய் அக்கட்சியின் நிறூவனரான நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
- சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.
முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை தந்திரம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு சுவாமிகள், சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதர்சுவாமி, செல்வ முத்துக்குமார சுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் ஆகிய சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல். ஏ, அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள் உடன் இருந்தனர்.
- சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.
- அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவர் உயிரோடு இருக்கும் வரை அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானங்களும் இயற்றப்பட்டன.
இந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும் கட்சியில் காட்சிகள் மாறியது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. அதற்கு பதிலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதை எதிர்த்து தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் சசிகலா தான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி வந்தார்.
இதற்கிடையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
இதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டம் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. கட்சி முற்றிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்தது.
சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினார்கள்.
அதில் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதும், கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
- எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
- அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ராமநாதபுரம்
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.
இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ. முனியசாமி வழிகாட்டு தலின்படி நகர் செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் சாமி நாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் ராமநாத புரம் அரண்மனை, புதிய பஸ் நிலையம், கேணிக்கரை உள்பட பல பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் அண்ணா தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் ரத்தினம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வீரபாண்டியன், எஸ்.எஸ்.செல்வம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், நகர் நிர்வாகிகள் கமலக் கண்ணன், காளீஸ்வரன், சசிகுமார், மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி.
துணைச் செயலாளர் நாகஜோதி, நகர் செயலாளர் வாசுகி, பொருளாளர் மணிகண்டன், துணைச்செயலாளர் ஆரிபு ராஜா, டாஸ்மாக் தொழிற் சங்க நிர்வாகி ராபர்ட், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன், வன்னிய ராஜ், மாவட்ட பிரதிநிதி தனசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜா, இணை செயலாளர் முத்துக் குமார் மற்றும் வார்டு செயலாளர்கள் சண்முகம், முருகன், அய்யனார், ராம கிருஷ்ணன், முத்து முருகன், செந்தில், பழனி, ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
தஞ்சாவூர்:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது.
இதனை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி தஞ்சை ரயில் நிலையம் முன்பு முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் முன்னாள் பகுதி செயலாளரும் அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி முன்னிலையில் அ.தி.மு.க. வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளர் ஐயப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுப்பட்டி முத்துமாறன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, மாணவரணி துணை செயலாளர் ராஜாராமன், நீலகிரி ஊராட்சி அ.தி.மு.க பிரதிநிதி சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகேந்திரன், வட்டப் பிரதிநிதி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி. ராமையா இன்று அதிகாலை காலமானார்.
- 19 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் அன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.
மதுரை
மதுரை சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி. ராமையா இன்று அதிகாலை காலமானார். இவர் ஆர்.வி.டி. டூல்ஸ், ஆர்.வி.டி. இன்டஸ்ட்ரீஸ், பாரத் டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார்.
காலமான ஆர்.வி.டி. ராமையா பல்வேறு சமுதாய பணிகளை ஆற்றி வந்தார். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் அன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.
ஆர்.வி.டி. ராமையாவின் உடல் சிம்மக்கல் தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள், சமுதாய பெருமக்கள், நண்பர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்.வி.டி. ராமையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் நடக்கிறது. சிம்மக்கல்லில் உள்ள அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி, தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
- அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்.
- 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே காரைமே ட்டில் அமைந்துள்ளது ஒளிலாயம் சித்தர் பீடம்.இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இன்று பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா சிறப்பு பவுர்ணமி யாகம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி.பழனிசாமி நிரந்தர பொது செயலா ளராக பொறுப்பேற்க வேண்டும், அனைத்து வழக்கு களும் நீங்கி இரட்டை இலை மற்றும் கட்சி அலுவலகம் அனைத்தும் பெற்று அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என வேண்டி இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து 108 வேதிகை, மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு பெளர்ணமி யாகம் நடைபெற்று,பூர்ணா ஹூதி, மகா தீபாரதனை கட்டப்பட்டது. யாகத்திற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவை மீட்பதாக கூறி தொடர் சட்டப்போராட்டம் நடத்தியதால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார்.
சமீபத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொது சின்னம் ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டது. அமமுக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
தற்போது, நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், இன்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர், அவர் அமமுக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் சிஆர் சரஸ்வதி தெரிவித்தார். #AMMK #TTVDhinakaran #Sasikala
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்