search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "godown"

    • ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    • பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா?

    சென்னை:

    சென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள், கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களை கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், இப்ராகிம் மற்றும் சென்னையை சேர்ந்த மன்சூர் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத்தாம்பெட்டமைன்' போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

    சென்னை அருகே செங்குன்றம் பகுதியில், குடோன் ஒன்றில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 7 கிலோ மதிப்பிலான மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அதன் பின்னணிகளை பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் தி.மு.க. பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது.

    இவர் அந்த கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளார். இந்த கும்பல் ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களை இங்கிருந்து பஸ் மற்றும் கார்களில் ராமநாதபுரத்துக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தியதையும் கண்டுபிடித்துள்ளனர்.

    டெல்லியிலிருந்து போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் இருந்து மெத்தா பொட்டமைன் போதைப் பொருள்தான் சிக்கியது என்றும் இதையடுத்து சென்னையில் தற்போது பிடிபட்டுள்ள 3 பேருக்கும், ஜாபர்சாதிக்குக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது செய்யப்பட்டார்.
    • அதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும்.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இரும்பு பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் திருவள்ளூரை சேர்ந்த பத்மநாபன் (வயது 55) என்பவர் தனக்கு சொந்த மான டிராக்டர் தொழிற்சா லைக்கு பயன்படுத்தும் இரும்பு டிஸ்க் பொருட்களை வைத்திருந்தார்.

    அந்த குடோனுக்கு மேலாளர் கணேசன் ஆய்வு செய்தபோது, இரும்பு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு

    ரூ.60 ஆயிரமாகும். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அந்த குடோனில் திருடிய பொருட்களை இரும்பு கடைகளில் சானாம் பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் எடைக்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.
    • கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் மூலம் ஏராளமான உணவு பொருட்களும் மற்றும் பல்வேறு பொருட்களும் கொண்டு வரப்படுகிறது. அவைகளை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் தினசரி குடோன்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.

    இதில் கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும், இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவியாக இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ரஷியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் டன் பொட்டாஷ் உரத்தை பல்வேறு குடோன்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.

    இதனை முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் பறிமுதல் செய்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர் சுந்தர் மகாராஜன், தனிப்பிரிவு காவலர்கள் ஜான்சன், செல்வின் ராஜா, மற்றும் அருணாச்சலம் உள்ளிட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மாதவன், மதியழகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி டி.எஸ்.பி. சத்யராஜ் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றார். இதற்கிடையே கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ள செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஆக.16 -

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (55). இவர் சத்தியமங்கலம்- கோபிசெட்டிபாளையம் சாலையில் அரியப்பம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே கிரானைட் மற்றும் டைல்ஸ் கற்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    கடைக்கு பின்புறம் பணியாளர்கள் தங்குவதற்கான குடோன் மற்றும் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    மேலும் அதே பகுதியில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ள செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகைகள் வெளியேறுவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் செட்டில் வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது.

    நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரத்தில் வேலை செய்த குடோனில் 134 மூட்டை விதை நெல் திருடிய மானேஜர் கைது செய்யப்பட்டார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொளத்து பாளையம் மேட்டுவலசு பகுதியை சேந்தவர் சிவக்குமார் (வயது 43). பல இடங்களில் விதை நெல் குடோன் நடத்தி வருகிறார்.

    பால்சொசைட்டி அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமாக இடத்தில் ஒரு குடோன் உள்ளது. இதன் மானேஜராக காளிப்பாளையம் காந்திஜி நகரை சேர்ந்த விஜயராஜ் (43) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளார்.

    நேற்று காலை நெல்குடோனில் இருந்து அவசர அவசரமாக ஆட்கள் மூலம் மானேஜர் விஜயராஜ் வேனில் நெல் மூட்டைகளை ஏற்றினார். இதில் சந்தேகம் அடைந்த இட உரிமையாளரின் மனைவி குடோன் உரிமையாளர் சிவக்குமாருக்கு போன் செய்து விபரத்தை கூறினார்.

    தகவல் அறிந்து குடோன் உரிமையாளர் மானேஜரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டார். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து அவர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மானேஜரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிமையாளருக்கு தெரியாமல் 134 நெல் மூட்டைகளை திருடி சோளக்கடை வீதியில் உள்ள விஸ்வநாதன் என்பவருக்கு விற்றதாக கூறினார்.

    நெல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து நெல் மூட்டைகளை திருடிய விஜயராஜை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விதை நெல்லின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று குடோன் உரிமையாளர் தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில், சுமார் 10 கோடி மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. #UP
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை அமோகமான நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகையை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமீபத்தில் பட்டாசு கிடங்கு ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், உன்னாவோ பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் மூலம் கிடங்கில் அளவுக்கு அதிகமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், முறையான ஆவணங்களை ஊழியர்கள் சமர்ப்பிக்காத நிலையில், அந்த கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. #UP
    கரூர் அருகே குடோனில் பீடியை பற்ற வெல்டிங் தொழிலாளி தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே குடோனினுள் வீசியதால் தீப்பிடித்தது. இதில் சிக்கி அவர் பலியானர்.
    கரூர்:

    சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 50), வெல்டிங் தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற வேலைக்காக வந்திருந்தார். அங்கு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தங்கி இருந்த பணிபுரிந்து வந்தார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த குடோனில் தங்கியுள்ளார். அந்த குடோனில் பெயிண்டு டப்பாக்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் இருந்தது. 

    புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய ஜெகநாதன், வழக்கம் போல் பீடியை பற்ற வைத்துள்ளார். பின்னர் தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே குடோனினுள் வீசி எறிந்துள்ளார். இதனால் எளிதில் தீபற்றும் தன்மையுடைய பெயிண்டு உள்ளிட்ட பொருட்களில் தீ வேகமாக பரவியது. 

    இந்த நெருப்புகளில் ஜெகநாதன் சிக்கிக்கொண்டு கூக் கூரல் எழுப்பியுள்ளார். இதனை கேட்ட சக தொழிலாளர்கள் தண்ணீர், மணலை வீசி தீயை அணைக்க முயன்றதோடு, ஜெகநாதனை? காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஜெகநாதன் தீயில் வைத்து கருகி பலியாகினார்.

    இது குறித்து வாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்த ஜெகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    தருமபுரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை குடோனில் பதுக்கி விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி சந்தைப் பேட்டையில் தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்சில் ஒரு ஆலை குடோனில் குட்கா பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் போலீசார் அந்த குடோனில் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 30 அட்டை பெட்களில் 3 லட்சத்து 500 பாக்கெட்டுகளில் குட்கா, பான்பராக் போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் என்றும் தெரியவந்தது.

    உடனே போலீசார் பிடிப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். குடோனில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் ராஜாஸ்தான் மாநிலம் தளியான ஜாலூரைச் சேர்ந்தவர் குபராம் சவுதாரியா கவாஸ். இவரது மகன் ஜீவாராம் (வயது 18) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் சேர்ந்து குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து வேன் மூலம் கடத்தி வரப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தருமபுரியில் குடோனை வாடகை எடுத்து சப்ளை செய்தது தெரியவந்தது.

    இதில் ஜீவாராமை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சங்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அரிசி குடோன் வைத்திருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சம்பவம் சந்தைபேட்டை பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×