search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance Day"

    • திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    • 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • 15-ந் தேதி காலை 11 மணிக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 15-ந் தேதி காலை 11 மணிக்கு அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

    தாலுகா அளவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த கூட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இந்த முறை அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது.

    அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் தாங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தின் எண்களை பதிவு செய்து கொண்டு வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.
    • துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பதிவு செய்ய இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை, அரசு தென்னை நாற்று பண்ணையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வைகை அணை, அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் தேனி மாவட்ட த்தல் விவசாயி களுக்கு தென்னையில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து முன்னேற்பாடாக தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர்கள் எடுத்துரை த்தனர்.

    கூட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு உழவு மானியம் கிடைக்க வழிவகை செய்திடவும், தேங்காய்க்கு உலர்களம் மற்றும் மா விவசாயிகளுக்கு சிப்பம் கட்டும் அறை அமைத்திடவும், கெங்குவார்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடவும், மேகமலை விவசாயிகளுக்கு பட்டா வழங்கிடவும், பெரியகுளம் சோத்து ப்பாறை அணையில் மீன் வளர்ப்பு செய்திடவும், குன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெற ராஜவாய்க்காலில் தடுப்பணை அமைத்து தரவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், விவசாயிகளுக்கு தேவை யான உரம் இருப்பு வைத்திட வும், செங்குளத்துப்பட்டி பகுதியில் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட செயல்படாமல் இருக்கும் தொகுப்பு இயந்திரங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் சரி செய்திடவும்,

    மேலும் ஆண்டிபட்டி பகுதியில் காளவாசல் மற்றும் கனிம வளங்கள் அதிகளவில் எடுக்கப்படுவ தால் விவசாய நிலம் மற்றும் விளை பொருட்கள் உற்பத்தி குறைவதால் இதனை தடுத்திட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், முருக மலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்ல தார்சாலை மற்றும் விவசாய நிலங்களில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலை மாற்றி அமைத்துதரவும், குப்பைகளை விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டுவதினை தடுத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள வும், ஆண்டிபட்டி கோழி க்காரன் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றி வரைபடத்துடன் புலத்தணிக்கை அறிக்கை வழங்கிட வேண்டும்.

    மேலும் கண்டமனூர், புதுக்குளம் தூர்வார வேண்டும், பஞ்சாயத்து கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதினை தடுத்திடவும், ஆண்டிபட்டி பகுதியில் வறட்சி அதிகமாக இருப்ப தால் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரவும், தடுப்பணை அமைத்து தரவும் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முருங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையை 6 மாதத்திலிருந்து 1 வருடமாக உயர்த்தி டவும், வெடி வைத்து கனிம வளங்கள் எடுக்கப்படுவதால் போர்வெல் பாதிப்படைவ தாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் இதனை கனிம வளத்துறை அலுவ லர்கள் ஆய்வு செய்து தடுத்திடவும், மொட்ட னூத்து, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் கண்மா ய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவ சாயிகள் முன் வைத்தனர்.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்கு மாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்த தாவது:-

    கோட்ட அளவில் விவசாயிகளுக்கு விவசாயி கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கூட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் தாங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தின் எண்களை பதிவு செய்து கொண்டு வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.

    விவசாயிகள் தங்களின் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை இணைய தளத்தில் இம்மாத இறுதி க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால் துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பதிவு செய்ய இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி இணையதளத்தில் பதிவு செய்து பயனடைய வேண்டும் என தெரி வித்தார்.

    • இக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான மாதாந்திர குறைதீா்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை ) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 31-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

    ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் புகாா்கள், குறைபாடுகள் இருந்தால் தங்களது எரியாவு இணைப்புப் புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகைளில் நடைபெற்று வருகிறது.
    • சுமார் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகைளில் நடைபெற்று வருகிறது.

    இதில் மாநகர பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாதத்தில் 3-வது புதன்கிழமையான இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராமானோர்கள் கமிஷனர் அவினாஷ்குமாரிடம் நேரடியாக மனு கொடுத்தனர். ஏற்கனவே மனு கொடுத்து 15 நாட்களில் தீர்வு காணாத மனுக்களுக்கு மீண்டும் நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டனர்.

    இன்று இடப்பிரச்சினை, அடி தடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகார் மனுகொடுத்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. அவற்றை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அறிவுறுத்தினார்.

    முகாமில் மேற்குமண்டல துணை கமிஷனர் சரவணகுமார், கிழக்கு மண்டல துணைகமிஷனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 414 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத் திறனாளி களுக்கான உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 414 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்து றையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79 ஆயிரத்து 740 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பின்முனை வட்டி மானியத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலான மானியத் தொகைக்கான ஆணையையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிக்கான ஆணைக ளையும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 79 ஆயிரத்து 740 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்துமனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களைச் சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டரால் முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
    • வருகிற 21-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களைச் சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டரால் முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    எனவே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம். சிறப்பு முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்பதால், விவசாயிகள் விவசாயம் தொடா்பான குறைகளை தெரிவித்து, அதனை நிவா்த்தி செய்துகொள்ளலாம்.
    • வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் 30-ந்தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அறை எண் 20ல் ஆகஸ்ட் 30ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்பதால், விவசாயிகள் விவசாயம் தொடா்பான குறைகளை தெரிவித்து, அதனை நிவா்த்தி செய்துகொள்ளலாம். மேலும் கூட்டத்தில் வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன வேளாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை மற்றும் வேளாண் சாா்ந்த துறைகளால் அமைக்கப்பட்டுள்ள கருத்து காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு ரூ.21.27 லட்சம் மதிப்பீட்டில் கலெக்டர் மோகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். 

    இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 427 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர் களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, மாவட்ட தாட்கோ மூலம், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக 10 பயனாளிகளுக்கு ரூ.21,15,000-க்கான காசோலையினையும், 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.12,000-க்கான காசோலையினையும், 20 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டையும் என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.21.27 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்களுக்கு மாவட்ட மகளிர் திட்ட துறையின் மூலம், இலவசமாக மனுக்கள் எழுதிக்கொடுக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பொதுமக்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், மகளிர் குழுக்கள் மூலம், உற்பத்தி செய்யும் பொருட்கள் பொதுமக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், மக்களை கவர்ந்திடும் வண்ணம் அழகு சாதனப் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்திட வேண்டும் என மகளிர் குழுக்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் யசோதா, மாவட்ட தாட்கோ மேலாளர் குப்புசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

    தாராபுரம் :

    அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளது.

    இது குறித்து அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் விஜயஈஸ்வரன் கூறியதாவது:- அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய உள்ளாா்.எனவே, இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.

    பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை நடைபெறுகிறது.இது குறித்து தாராபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் தாராபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.இக்கூட்டத்துக்கு பல்லடம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமை வகிக்கிறாா்.இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வழங்கல் அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பார்கள்.
    • ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு, மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் சேவூர் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் வெள்ளகோவில் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் பாப்பான்குளம் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கும் நடக்கிறது.

    திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் விஜயாபுரம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் பெரியவாளவாடி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் வடமுகம் காங்கயம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாராபுரம் கிராமத்துக்கு தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பார்கள். ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு, மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×