என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance redressal camp"

    • பொதுமக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவான தீர்வு காண வேண்டும்
    • மழைக்காலங்களில் மின்விபத்து ஏற்படாத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது

    கடையநல்லூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கடையநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் பிரேமலதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி, பொதுமக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவான தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மழைக்காலங்களில் மின்விபத்து ஏற்படாத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உதவிசெயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமா்ப்பிக்கலாம்.
    • விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 24-ந்தேதி நடக்கிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை 23-ந்தேதி ( வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம்.

    மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமா்ப்பிக்கலாம். இக்கூட்டரங்கில் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • தென்மண்டல தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம் மதுரையில் 20-ந் தேதி நடக்கிறது.
    • தபால் கவரின் முன் பக்கத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- டிசம்பர் 2022 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    மதுரை

    தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலக உதவி இயக்குநர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலகத்தின்

    கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியா குமரிமாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் தொடர்பாக வாடிக்கையா ளர்களின் குறைதீர்க்கும் முகாம் வருகிற 20-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தென்மண்டல தபால் துறைத்தலைவர் அலுவலகத் தில் நடக்கும் இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள புகார்தாரர்கள், தங்களது புகார் மனுக்களை வருகிற 13-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மனுவில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் பெயர், முகவரி, ரசீது எண், மணியார்டர், ஸ்பீடுபோஸ்ட், பதிவுத்தபால் ஆகிய விவரங் களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி, தபால்

    காப்பீடு, கிராமிய தபால் காப்பீடு உள்ளிட்ட புகார் மனுக்களில், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம், பணம் செலுத்திய தபால் அலுவலகத்தின் பெயர், தபால்துறையில் பெறப்பட்ட கடிதங்கள் இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.

    இந்த முகாமை பொறுத்த மட்டில் சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களில் ஏற்கனவே மனு கொடுத்து கோட்ட தபால் கண்காணிப் பாளர் கொடுத்த பதிலில் திருப்தி இல்லாதவர்கள் மட் டும் தங்களது குறைகளை அனுப்ப வேண்டும். புதிய புகார்களின் மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

    அதேபோல, தனியார் கூரியர் மூலம் அனுப்பும் புகார் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புகார் மனுக்களை உதவி இயக்குநர், தபால் துறைத்தலைவர் அலுவலகம், தென் மண்டலம், மதுரை-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தபால் கவரின் முன் பக்கத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- டிசம்பர் 2022 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • ரேசன்கடை பொறுப்பாளர் கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 9 கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராம ரேசன் கடையில் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் தலைமையில் நடந்தது. தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) தமிம்ராசா முன்னிலை வகித்தார். ரேசன் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 6 மனுக்களும், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் உட்பட 28 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார் ஆதி, ரேசன்கடை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • 26-ந் தேதி நடக்கிறது
    • அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப் பாளர் மு.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் கோட்ட அஞ் சலக கண்காணிப்பாளர் அலு வலகத்தில் அஞ்சல் குறைத் தீர்வு முகாம் வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    எனவே, திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் பதிவுத்த பால், விரைவுத்தபால், மணி யார்டர், சேமிப்பு கணக்குகள், சேமிப்பு பத்திரங்கள், சாதா ரண தபால் பட்டுவாடா அஞ்சலக ஆயுள் காப்பீடு மற் றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அஞ்சல் சேவை குறித்த தங்களின் புகாரினை முழு விவரங்களுடன் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளர், திருப்பத் தூர் கோட்டம், திருப்பத்தூர் என்ற முகவரிக்கு நேரடியா கவோ அல்லது தபால் மூலமா கவோ வருகிற 21-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மேலும் அஞ்சல் குறை தீர்வு முகாமில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • மதுரை மண்டல அளவிலான தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை தென் மண்டல அஞ்சல்துறை அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலக பணியிட கணினி பயிற்சி மையத்தில் நடக்கிறது.

    அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம்,ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்களின் குறைகள், ரெயில்வே மற்றும் தொலைபேசி துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதா ரர்களின் குறைகள் இந்த முகாமில் பரிசீலிக்கப்படும்.

    மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணி ப்பாளர் அளித்த பதிலில் திருப்திய டையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். நேரடியாக இந்த முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

    குறைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 16.3.2023 ஆகும். குறைகளைஅனுப்ப வேண்டிய முகவரி:- ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம், ச.பொற்கொடி, கணக்கு அதிகாரி, அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், தென் மண்டலம்(தமிழ்நாடு), மதுரை- 625002'' ஆகும்.

    மின்னஞ்சல் accts.madurai@indiapost.gov.in-மூலமாகவும் அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம்-2023'' என்று தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

    குறைகளை சாதாரண தபால், பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப் படும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரில் வரமுடியாத ஓய்வூதியர்கள் 19.4.2023 அன்று மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடத்தப்படும் முகாயில் கலந்து கொள்ளலாம். காணொலி காட்சி 'கூகுள் மீட்' மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, அலைபேசி எண் மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை தென் மண்டல அஞ்சல்துறை அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    • உசிலம்பட்டியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், நாளை (5-ந்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி மற்றும் மாதாந்திர உதவித் தொகை ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே அந்தப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்கு முட்டியங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் கிளாங்குண்டல் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் கீரனூர் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் ராமேகவுண்டன்புதூர் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் கே.அய்யம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    இதுபோல் திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் தும்பலப்பட்டி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வருவாய் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற மனுக்களை பதிவு செய்யலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை அருகே காவல்துறை சார்பில் மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • முகாமில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகர், வட்டத்தை சேர்ந்த 7காவல் நிலையங்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி திருக்கோஷ்டியூர் கீழச்சிவல்பட்டி எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய்,பெரியசாமி, கலையரசன், சாமுண்டீசுவரி, சேதுபாமா மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்–ப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய 5 உட்கோட்டங்களிலும் காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 22 மனுக்கள் மற்றும் உட்கோட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 15 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மத்திய மண்டலஅலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமார் தெரு, கிருஷ்ண ராயர் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரெயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்க லிங்கநகர், துரைச்சாமி நகர், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணிய புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

    குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
    • DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திருப்பூர் ரெயில் நிலையம் முன் தலைமை தபால் நிலைய கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ளது. தபால் சேவையை பற்றி விவாதிக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரியில் DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    ×