search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "group 4 exam"

    • தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது 2வது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    20 லட்சம் பேர் எழுதியுள்ள இத்தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது. முன்னதாக, இத்தேர்வுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.
    • எக்ஸ் சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை செயல் பணியாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், வனக்காப்பாளர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை, தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 தேர்வர்கள் எழுதினர்.

    இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில், குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதற்கான, அறிவிப்பை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, வெளியிட்டுள்ளது.

    • சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது.
    • 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 38 மையங்களை உள்ளடக்கி 7 ஆயிரத்து 247 தேர்வு அறைகளில் நடைபெறுகிறது. தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும்.

    தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 276 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து கொடுக்கிறது.

    அந்த வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 6,244 காலி பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர் 2442 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    விண்ணப்பத்தினை அளிப்பதற்கு மார்ச் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் 441 பணியிடங்கள், தட்டச்சர்-1653, வனக் காவலர்-526, பல்வேறு துறை பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.

    கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்வர்கள் 1.7.2024 அன்று 18 வயது நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
    • ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டன.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

    அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் எவ்வளவு?, அறிவிப்புகள் எப்போது வரும்?, தேர்வு எப்போது நடக்கும்?, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்கள் அடங்கிய ஆண்டு திட்டங்களை அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்.

    இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

    இதற்காக விண்ணப்பம் செய்வோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாகப் படித்து கொள்ள வேண்டும். அவர்கள் தேர்வுக்கான அனைத்து தகுதிவாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.

    விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது.

    தேர்வுக்கான நாள் 09.06.2024 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

    விண்ணப்பம் செய்யும் நபர் முதலில், அதற்குரிய இணையதளத்திற்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    04.03.2024 முதல் 06.03.2024 வரையிலான 3 நாட்களில், தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். அதன்பின் எந்த அனுமதியும் கிடையாது.

    அவர்கள், தமிழக வனத்துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    மொபைல் போன்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தங்களுடன் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    பல்வேறு துறைகளில் மொத்தம் 6,244 காலி பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

    3 மணிநேரம் நடைபெறும் தேர்வானது 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.

    பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும்.

    பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெறும்.

    அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது. அதற்குரிய இணையதளத்தில் சென்று பிற விவரங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

    • கடந்த 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவை அறிவித்தது.
    • குரூப்-4 பணியிடங்களுக்கு 2022 ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது.

    சென்னை :

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 10 ஆயிரத்து 117 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தாமதமாகி 8 மாதங்களுக்கு பிறகு, கடந்த 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. முடிவை அறிவித்தது.

    18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதிய இந்த தேர்வு முடிவில், தட்டச்சர் பணியிடங்களுக்கு வெளியான முடிவில், குளறுபடி இருந்ததாக தேர்வர்கள் புகார்கள் தெரிவித்தனர். அதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'அதுபோல் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தட்டச்சர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு எந்த அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என்பது குறித்த விவரங்களையும் தெரிவித்தனர். இந்த குளறுபடி குறித்த சர்ச்சை புகாருக்கு பதில் கிடைப்பதற்குள், தென் மாவட்டத்தில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த குரூப்-4 தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடவில்லை என்றும், அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. கூறியபடி தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 மதிப்பெண் பெறாத தேர்வர்களுடைய தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. அந்தவகையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தேர்வு எழுதிய பலர் ஏற்கனவே பலமுறை குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் என்பதால், அவர்கள் எளிதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்ற வகையில், டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த தகவலும் தேர்வர்களால் ஏற்றுக்கொள்வதாக இல்லாமல் போனது.

    இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 1,089 நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.

    அதாவது தேர்வு எழுதியவர்களில், காரைக்குடி தேர்வு மையத்தில் மட்டும் எழுதிய சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு இதேபோல் கீழக்கரை, ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றது விஸ்வரூபம் ஆன நிலையில், தற்போது அரங்கேறி இருப்பதாக கூறப்படும் இந்த முறைகேடும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுவும் இந்த முறைகேடு கருவூல அலுவலர்களின் உதவியுடன் நடந்ததாக ஒரு குற்றச்சாட்டும் பரவலாக எழுந்து வருகிறது.

    இவ்வாறாக குரூப்-4 தேர்வு முடிவு வெளியானது முதல் தொடர்ந்து குளறுபடி, நில அளவையர், வரைவாளர் தேர்வு முடிவுகள் முறைகேடு என சர்ச்சை புகார்கள் நீடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் சட்டசபையிலும் நேற்று எதிரொலித்திருக்கிறது.

    எனவே டி.என்.பி.எஸ்.சி. இந்த குரூப்-4 தேர்வு முடிவு குளறுபடி விவகாரம் மற்றும் நில அளவையர், வரைவாளர் பணியிடங்களில் வெளியாகிவரும் முறைகேடு குறித்த தகவல்களுக்கும் உரிய விளக்கத்தை வெளியிட்டு, குளறுபடி, முறைகேடு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தேர்வர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பலத்த குரலாக ஒலித்து வருகிறது.

    • ஒரு பணியிடத்துக்கு 253 பேர் போட்டியிட்டு இருக்கின்றனர்.
    • தங்களுடைய ஆதங்கத்தை ‘மீம்ஸ்’ மூலமும் தெரிவிக்கின்றனர்.

    சென்னை :

    397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 22-ந் தேதி தேர்வு நடந்தது.

    இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். அதாவது ஒரு பணியிடத்துக்கு 253 பேர் போட்டியிட்டு இருக்கின்றனர். தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதே தேர்வு முடிவு அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பை பின்பற்றி தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் முடிவு வெளியிடப்படவில்லை.

    அதைத் தொடர்ந்து தேர்வாணையம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவை வெளியிட வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்படியும் கடந்த மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கடந்த மாதம் 14-ந் தேதி இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில், மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக இடங்கள் சேர்க்க டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

    இது ஓரளவுக்கு ஆறுதலான செய்தியாக இருந்தாலும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பதே தேர்வை எழுதிய 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி தேர்வை எழுதிய தேர்வர்கள் டுவிட்டரில் 'வி வான்ட் குரூப்4 ரிசல்ட்' என்பதை 'ஹேஷ்டேக்'காக 'டிரெண்டிங்' செய்து வருகின்றனர்.

    இதுமட்டுமல்லாது, தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருப்பதற்கு தேர்வர்கள் 'மீம்ஸ்' மூலம் நகைச்சுவை கலந்த ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில், தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி.யிடம் சொல்வதுபோல, 'வீட்டுல எவ்வளவு நாள்தாண்டா சோறு சாப்பிடுவனு கேக்குறாங்க. சொந்தக்காரங்க இன்னும் உனக்கு வேலை கிடைக்கலையாடா வீட்லயே இருக்கனு சொல்றாங்க', 'எக்சாம் நல்லா பண்ணிருக்கேன், இந்த மாதம் ரிசல்ட் மட்டும் விட்டீங்கனா வேலைக்கு போய்டுவேன்' என பதிவிட்டுள்ளனர்.

    இதேபோல் மற்றொரு மீம்சில், 'குரூப்-1 எழுதினவன் எப்போ ரிசல்ட் வரும்னு காத்திருக்கான், குரூப்-2 முதன்மைத் தேர்வு எழுதினவன் எப்படி திருத்துவாங்களோ, எந்த வருசம் ரிசல்ட் போடுவாங்கனு இருக்கான், குரூப்-4 எழுதினவன் ரிசல்ட்ன்னு ஒண்ணு இருக்கானு தேடிட்டு இருக்கான்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    • குருப் 4 தேர்விற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,026 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    • கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் 93 தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாகசிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தா ல்நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றாக கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-4 தேர்வு 93 தேர்வு மையங்களில் 143 தேர்வு அறைகளில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 42,600 நபர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 36,574 ேபர் மட்டும் தேர்வு எழுதினர். இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 6,026 பேர் தேர்விற்கு வரவில்லை.

    மேலும் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக தூய்மை, ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு மற்றும் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடு பணிகளுடன் தேர்வு நடைப்பெற்றது.

    தேர்வுக்கு 7 பறக்கும்படை, 5 நபர்கள் கொண்ட 32 சுற்று குழுக்கள் கண்காணிப்பு பணிகளிலும், 180 காவலர்கள் பாதுகாப்பு பணிகளிலும்வி ண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து முன்னேற்பாடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் 93 தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாகசிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் விஐயபிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர்.
    • பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகஅரசின்பல்வேறு துறைகள் மற்றும்நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்வகையில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையர் போன்ற பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர். 9 மணிக்கு அவர்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தேர்வு சரியாக 9.30 மணிக்கு தொடங்கிமதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. 12.45 மணிக்கு பிறகே அவர்கள் மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றனர். தேர்வை முன்னிட்டு மாவட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டன.

    • 7,180 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    • தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

    வேலூர்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 பல்வேறு பதவிகளுக்கான தேர்வு இன்று நடந்தது.

    வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    வேலூர் மையத்தில் 65, அணைக்கட்டு 13, குடியாத்தம் 27, கே.வி.குப்பம் 8, காட்பாடி 25, பேர்ணாம்பட்டு 4 தேர்வு கூடங்களில் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டம் முழுவதுமாக 41,307 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

    ஒவ்வொரு தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுத 41,307 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 34,127 பேர் தேர்வு எழுதினர். 7,180 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை)நடக்கிறது.
    • நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8 தாலுகாக்களில் நடைபெறுகிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை)நடக்கிறது.

    நெல்லை மாவட் டத்தில் நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8 தாலுகாக்களில் 191 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதனை 61, 086 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் தலா ஒரு துணைகலெக்டர் வீதம் 8 துணை கலெக்டர்களும், தேர்வெழுதுவோரை கண்காணிக்க 230 ஆய்வு அலுவலர்களும், 11 பறக்கும்படை அலுவலர்களும் தேர்வு பணிகள் மேற்கொள்ள தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 59 சுற்றுக்குழு அலுவலர்களும், தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்திடும் வகையில் 238 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், வீ.கே.புதூர், செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகாக்களில் 237 மையங்களில் தேர்வுகள் நாளை நடக்கிறது.

    இந்த தேர்வில் 59,700 பேர் கலந்து கொண்டு எழுத உள்ளனர். 8 துணை கலெக்டர்கள், 237 ஆய்வு அலுவலர்கள், 8 பறக்கும் படையினர், 44 துணை தாசில்தார்கள், 237 வீடியோ கிராபர்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்.

    மாவட்டங்களில் நடை–பெறும் தேர்வுக்காக அனைத்து மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் தேர்வர்களுக்கு பஸ் வசதியும், தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர்கள் விஷ்ணு, ஆகாஷ் ஆகியோர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • காலை 9 மணிக்கு பிறகு வந்தால் அனுமதி இல்லை
    • முகக்கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாளை காலை நடைபெற உள்ளது.

    வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் தேர்வமைப்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மையத்தில் 65, அணைக்கட்டு 13, குடியாத்தம் 27, கே.வி.குப்பம் 8, காட்பாடி 25, பேர்ணாம்பட்டு 4 தேர்வு கூடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் முழுவதுமாக 41,307 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    இது தவிர, ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு போலீஸ் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் செல்போன் கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது.

    கொரோனா காலமாக இருப்பதால் கொரோனா விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும், முகக்கவசம் கட்டாயம் அணியுமாறும், சிறிய அளவிலான கை சுத்தம் செய்யும் திரவத்தினை எடுத்து செல்லுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    தேர்வர்கள் 8.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக தேர்வுக் கூடத்திற்குள் சென்றிருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வுக் கூடங்களிலும் விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இன்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×