search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guidelines"

    • உணவு மாசுபாடு கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
    • சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    உணவு மாசுபாடு மற்றும் உணவில் எச்சில் துப்புவதை தடுக்க உத்தரகாண்ட் அரசு கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், உணவு மாசுபாடு கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஓட்டல் மற்றும் தாபா ஊழியர்களை போலீசார் சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதை அவர் "தூக் ஜிஹாத்" என்று குறிப்பிட்டார்.

    சமீபத்தில், சுற்றுலா பயணிகளுக்கு பழச்சாற்றில் எச்சில் துப்பியதற்காக முசோரியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    டேராடூனில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ரொட்டிக்கு மாவை தயார் செய்யும்போது சமையல்காரர் எச்சில் துப்பிய வீடியோ சமீபத்தில் வைரலானது.

    இது தொடர்பாக சுகாதார அமைச்சர் தன் சிங் ராவத், வர இருக்கும் பண்டிகை காலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்வதே முதன்மையானது என்று கூறினார்.

    • மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே வெளியிட்டு இருப்பதாக கூறியிருந்தது.
    • தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மனஅமைதியின்றி இருப்பதாக மனுதாரரின் வக்கீல் பூல்கா வாதிட்டார்.

    புதுடெல்லி:

    பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 2021-ம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. அந்த நெறிமுறைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

    இதற்கிடையே, 'பச்பன் பச்சோவா அந்தோலன்' என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே வெளியிட்டு இருப்பதாக கூறியிருந்தது.

    இந்த மனு, நீதிபதிகள் நாகரத்னா, கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பாதுகாப்பு இல்லாததால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மனஅமைதியின்றி இருப்பதாக மனுதாரரின் வக்கீல் பூல்கா வாதிட்டார்.

    அதையடுத்து, பள்ளி பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான்.
    • பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

    கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது.

    இந்நிலையில் கேரள மாநிலம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான்.

    அங்கு அவனது நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான்.


    இதையடுத்து நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    • காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநல பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.

    • ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்.

    • அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    • பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

    • பரிசோதனை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத்துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.

    • நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெள்ள நிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

    • காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

    • கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழுந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    • அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.

    போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி.கூரையுடன் கூடிய வீடு கட்டித்தரப்படும்.

    கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி.கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இ்த்திட்டத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின.

    இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை இயககுனர் பி.பொன்னையா வெளியிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார்.

    அதன்படி தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதையடுத்து, இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

    * வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.

    * 300 சதுரடி ஆர்சிசி கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட வேண்டும்.

    * ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக்கூடாது.

    * ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    * வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

    * மண்ணால் கட்டப்படும் சுவர்கள் கூடாது. செலவை குறைக்கும் தொழில்நுட்பங்கள், விரைவான கட்டுமானம் போன்றவை அனுமதிக்கபடுகிறது.

    * குடிசையில் வாழ்பவர்கள், கேவிவிடி மறு சர்வே பட்டியலி்ல் உள்ளவர்கள் அனைவருக்கும் வீடு சர்வே பட்டியலில் உள்ள குடிசை வீட்டு பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    * கேவிவிடி சர்வே மற்றும் புதிய குடிசைகள் சர்வே விவரங்கள், வரும் 31-ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    * இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.

    * இந்த குழு அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதிகள் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தகுதியானவர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களே சேர்க்க வேண்டும். விடுபட்டவர்கள் பட்டியலுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின், பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    * பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் (ஊரகம்) 25 முதல் 50 வீடுகள் நிலுவையில் இருந்தால் அந்த ஊராட்சி இந்த ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்ல திட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படாது.

    * எந்த ஒரு ஊராட்சியில் 50க்கு மேற்பட்ட வீடுகள் ஊரக வீடுகள் திட்டத்தின் கீழ் பழுதுபார்ப்புக்கு எடுக்கப்பட்டிருந்தால் அந்த ஊராட்சிகளும் இதில் சேர்க்கப்பட வேண்டியதில்லை.

    * வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை வட்டம் மற்றும் கிராம அடிப்படையில் தயாரித்து ஊரக வளர்ச்சி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேணடும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.
    • அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.

    சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.

    ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது.

    இந்த நடைமுறை மே 7 முதல் மே 30 வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

    அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும், உள்நாட்டு மக்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்தும் இபாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது.
    • 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைத்துள்ள சிலைகளை ஆங்காங்கே உள்ள காவிரி ஆற்றில் கரைக்கின்றனர்.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் உள்ள பரமத்தி, ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர், நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது.

    அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைத்துள்ள சிலைகளை ஆங்காங்கே உள்ள காவிரி ஆற்றில் கரைக்கின்றனர். இந்து முன்னணி சார்பில் வைக்கப்படும் சிலைகள் வரும் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்து பரமத்தி வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும். பின்னர் விநாயகர் சிலையை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள காவிரி ஆற்றில் இரவு சுமார் 7 மணி அளவில் கரைக்க உள்ளனர்.இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் நடைபெற்றது. பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற உள்ள ஊர்வலம் ஆகியவற்றின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி காவல்துறையினர் தெரிவித்தனர் .

    மேலும் சிலை வைக்கும் போதும், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் போதும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடாது. தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்க வேண்டும் .மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது காவல்துறை வழங்கி உள்ள அறிவுறுத்தல் படி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மேற்படி வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படு வதாக கூறினார்கள்.

    • இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை வழங்குவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து தவறு செய்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

    நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு,  தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய, வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்கின்றன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை வழங்குவது குறித்து இதில் வரையறுக்கப்பட்டுள்ளது.

    சரியான தகவல் பெறும் உரிமை தெரிவு செய்யும் உரிமை, பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்து கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மீறும், உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர், தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து தவறு செய்வோருக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனம், இத்தகைய விளம்பர தயாரிப்புக்கும், ஒப்புதல் அளிப்பதற்கும் முதலில் ஓராண்டு வரையும் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் 3 ஆண்டு வரையும் ஆணையத்தால் தடை விதிக்க முடியும் என்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×