என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gun shot"
- தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு அதிகாரி உள்பட ஐந்து பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
குல்காம் மாவட்டத்தின் தேவ்சர் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது,
இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (போக்குவரத்து) மும்தாஜ் அலி உள்பட 4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.
இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழுவின் தொடர்பு கண்டறியப்பட்டு வருகிறதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி பிடிபட்டான்.
- ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.
திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.
போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த ரவுடி மனோ நிர்மல்ராஜ்க்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
- சுட்டுக்கொன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
- சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜை போலீசார் தேடி வந்தனர்.
- போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார்.
சென்னை:
சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர்.
ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.
கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.
போலீசார் எச்சரித்தும் தப்பி ஓடுவதிலேயே குறியாக இருந்த ரவுடி ரோகித் ராஜ் போலீசாரை தாக்கியதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான்.
இதையடுத்து எஸ்.ஐ. கலைச்செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த டி.பி. சத்திரம் எஸ்.ஐ. கலைச்செல்வியை நேரில் அழைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார்.
- போலீசாரை பார்த்ததும் ரோகித்ராஜ் தப்பி ஓட முயற்சித்தான்.
- ரவுடிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தால் மேலும் கலக்கம் அடைந்து பீதியில் தவித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாககம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.
கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.
போலீசாரை பார்த்ததும் ரோகித்ராஜ் தப்பி ஓட முயற்சித்தான். இதனால் உஷாரான போலீசார் "டேய் தப்பி ஓட நினைக்காதே... போலீஸ் விசாரணைக்கு எங்களோடு வந்து விடு. இல்லையென்றால் நடப்பதே வேறு" என்று எச்சரித்துள்ளனர்.
ஆனால் ரோகித் ராஜோ, போலீசார் சொல்வதை கேட்காமல் தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தான். இதைத் தொடர்ந்து போலீஸ் ஏட்டுகள் சரவணகுமார், பிரதீப் இருவரும் ரவுடி ரோகித் ராஜை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது ரோகித் ராஜ் திடீரென தாக்குதலில் ஈடுபட்டான். மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினான். இதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதில் நரம்பு துண்டிக்கப்படும் அளவுக்கு கொடுங்காயம் ஏற்பட்ட போதிலும் ஏட்டுகள் இருவரும் ரவுடி ரோகித்ராஜை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்து மல்லுக்கட்டினார்கள்.
அப்போது அவர்களோடு கத்தியை வைத்துக் கொண்டே கட்டிப்புரண்டு சண்டை போட்ட ரோகித் ராஜ் போலீஸ் பிடியில் இருந்து நழுவி தப்பி ஓடினான்.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தனது துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ரவுடி ரோகித்ராஜின் பின்னால் ஓடினார். "ஓடாதே... நில்..." என்று அவர் எச்சரித்தார். ஆனால் ரவுடி ரோகித் ராஜோ போலீசில் சிக்கி விடக் கூடாது. தப்பி ஓடி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓட்டம் பிடித்தான். கல்லறை தோட்டத்துக்கு வெளியே உள்ள கல்லறை சாலையில் தலைதெறிக்க ஓடிய ரவுடி ரோகித்தை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
ரவுடி ரோகித் ராஜை சுட்டுப் பிடிக்க முடிவு செய்த அவர் ரோகித்தை நோக்கி குறி பார்த்து சுட்டார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலையில் நடந்ததால் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். டி.பி.சத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவுடி ரோகித் ராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரோகித் ராஜ் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். காலில் கட்டு போடப்பட்டு ரோகித்ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் இருவரும் கீழ்ப்பாக் கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பிறகு கடந்த மாதம் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த நிலையில் ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே என்கவுண்டர் பீதியில் தவிக்கும் ரவுடிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தால் மேலும் கலக்கம் அடைந்து பீதியில் தவித்து வருகிறார்கள்.
- பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது.
- பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்டர் எம்.பி. தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
பிஜப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் சிக்குர்பட்டி மற்றும் புஸ்பகா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்களும், நக்சல் எதிர்ப்பு படையினரும் இணைந்து நடத்திய இந்த என்கவுண்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இதில் ஒரு பெண் நக்சலைட்டும் அடங்குவார். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்டர் எம்.பி. தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
- ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரத்தில் இன்று மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்று வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், இன்று காந்தி சாலை பகுதியில் மேலும் 6 குண்டுகள் சிதறி கிடந்துள்ளன.
துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
- தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததா என போலீசார் விசாரணை.
சென்னை தாம்பரம் மீனாம்பாள் தெருவில் வழக்கிறஞர் தியாகராஜன் என்பவர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது வீட்டின் கண்ணாடி உடைந்ததால் வீட்டிற்குள் இருந்த தியாகராஜன் மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
விமானப்படை அலுவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
- ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை.
- வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்ட ஆயுதப்படை காவலர்.
தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் நரேஷ், சித்தபேட்டை ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நரேஷ் தனது மொத்த சம்பளத்தையும் பல மாதங்களாக சூதாட்டத்தில் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இழந்த பணத்தை பிடிக்கலாம் என்ற ஆர்வத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி நரேஷ் சூதாடியுள்ளார்
வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.
இந்நிலையில், மன விரக்தியில் இருந்து வந்த நரேஷ் மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்.
- அதிரடிப்படையின் பதில் தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர்.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும் மாவோயிஸ்டுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில், பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிரடிப்படையின் பதில் தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர்.
- துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- தாதியா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் காவலில் வைத்தனர்.
- பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் அந்த பெண் நெடுஞ்சாலையின் நடுவே கத்தியுடன் காரில் இருந்து இறங்கி கத்த ஆரம்பித்துள்ளார். பின்னர், அந்த பெண் மீண்டும் காரில் ஏறி சிறிது தூரம் சுங்கச்சாவடி அருகே நிர்வாணமாகி துப்பாக்கியுடன் மீண்டும் காரில் இருந்து இறங்கி அவ்வழியாக சென்ற கார்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த கலிப்போர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் காவலில் வைத்தனர்.
மேலும், அந்த பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து வெளிவந்தவுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்