என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundam Festival"

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டா–டப்படும்.

    அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவில்களின் முன் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது.

    கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவை–யொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கோவில் கரகம் எடுத்தலும், 13-ந் தேதி கோவில் முன் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பின்னர் 14-ந் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும், 15-ந் தேதி மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி சந்தன காப்பு அலங்காரமும், நேற்று பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் காலை 8 மணி அளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதன் முதலில் தலைமை பூசாரி ராஜ கோபால் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கை குழந்தைகளுடன் குண்டம் மிதித்தனர்.

    இந்த குண்டம் திருவிழாவை–காண கோபி மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம், வடுகபாளையம்புதூர், நாகர்பாளையம், நாகதேவன் பாளையம், நாதிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வரும் 1-ந் தேதி தெப்பத்தேர்உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 2-ந் தேதி மறுபூஜையும், 6-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பச்சை அம்மன் கோவிலும் குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    • பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
    • இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையத்தில் புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

    பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கிய நிலையில் இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

    இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 9-ந் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 11 ம் தேதி இரவு குண்டம் திறப்பு நிகழ்ச்சியும், 12-ந் தேதி அதிகாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துதல் நடைபெற உள்ளது.

    இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், 24 மணி நேரம் மருத்துவ குழுவினர், திருவிழா நடைபெறும் ஒரு வார காலத்திற்கு 24 மணி நேரமும் அரசு பஸ் போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகளான குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பொது சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையினர், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், கோவில் விழாக்குழுவினர், பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது.
    • நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 30-ந் தேதி காலை 6 மணிக்கு நந்தா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கடந்த 3-ந் தேதி காலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், கிராம சாந்தியும் நடந்தது. 4-ந் தேதி கொடியேற்று விழாவும், இரவு அம்மை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி செந்தில்குமார் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.

    தொடர்ந்து நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், பரிவேட்டையும், தெப்பத்தேர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம், ஸ்ரீ அம்மன் சிறப்பு தரிசனம், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் பங்கேற்றனர்.
    • வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

    ஊட்டி,

    குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் ெஹத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடி வருகின்றனர். ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, ேபரட்டி, மல்லிெகாரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதையொட்டி பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.

    இதனை முன்னிட்டு நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், அமப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தாண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட கோசணம் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி கூத்தாண்ட மாரியம்மன் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பச்சை பழம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி 11-ந் தேதி இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை குண்டம் விழா நடந்தது.

    இதில் நம்பியூர், கோசணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தா ண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு எருமைக்கிடாய் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொத்தப்பாளையம் மாகாளிஅம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 20-ந் தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 18-ந் தேதி கொடியேற்றமும், 19-ந் தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    அவினாசி :

    அவினாசி காந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு 20-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக 16-ந் தேதி அம்மன் சாட்டு விழா, 18-ந் தேதி கொடியேற்றமும், 19-ந் தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    20-ந் தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு ரிஷப வாகன காட்சியும், 21-ந் தேதி பரிவேட்டை தெப்பத்தேர் நிகழ்ச்சி, 22-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அங்காளபரமேஸ்வரி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    • எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி முத்தூர் ரோடு அருகே அமைந்துள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல், பூச்சாட்டு, குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சிவகிரி நான்கு ரத வீதி வழியாக வந்து எல்லை மாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து குண்டம் அமைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு அம்மன் சிங்க வாகனத்தில் சிவகிரி நான்கு ரத வீதி வழியாக மேளதாளம், கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெறும்.

    இதனையடுத்து நாளை அதிகாலை முதல் மாவிளக்கு பூஜை மற்றும் அக்னி சட்டி, கும்ப ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளைமறுநாள் அம்மன் திருமஞ்சன திருவீதி உலா நடைபெற உள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் 48வது குண்டம் திருவிழா கடந்த 17-ந் ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.

    இந்தநிலையில் நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில்,வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது. இதில் இன்று காலை 7 மணிமுதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள்,மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர்.

    பின்னர் ஓம்சக்தி,பாரசக்தி என்று கோஷமிட்டபடி கைகுழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள், உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர். பின்னர் காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம்,பொங்கல் வைத்தல்,பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு முப்பெரும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர். குண்டம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பல்லடம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
    • கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    ஆனைமலை,

    ஆனைமலையில் தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று காலை ஆழியாற்றங்கரைக்கு பக்தர்கள் கம்பத்தை எடுத்து சென்று, அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையம் வீதி வழியாக ஊர்வலமாக வாண வேடிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்துகோவிலுக்கு கொண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து அம்மன் அருளாளி பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த விபூதியை பக்தர்களுக்கு வழங்கினார். பின்னர் கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.

    பின்னர் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கட்டப்பட்டது. தொடர்ந்து மேள, தாளம், சேகண்டி முழங்க, சங்கு நாதம், ஆலய மணி ஒலிக்க வாண வேடிக்கையுடன் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கம்பம் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதை கண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர்.

    வருகிற 25- ந்தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு, குண்டத்து காட்டில் விஸ்வரூப தரிசனம், 6-ந் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு, 7-ந் தேதி காலை குண்டம் கட்டுதல், அலங்கார திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபடுதல் 8-ந் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. பின்னர் 9-ந் தேதி திருத்தேர் நிலை நிறுத்துதல், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம், 10-ந்தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு ஆகியவை நடக்கிறது.

    • கொண்டத்து காளியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கொண்டத்து காளியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடக்கிறது.

    முன்னதாக வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி சகுனம் கேட்டலும், மார்ச் 24-ந்தேதி தேர்முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல், மார்ச் 29-ந்தேதி கிராமசாந்தி, கொடியேற்றம், ஏப்ரல் மாதம் 2-ந்தேதி மஞ்சள் நீர் மற்றும் பொங்கல், 3-ந்தேதி குண்டம திறந்து பூ போடுதல், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் 4-ந்தேதி அதிகாலை 4 மணிக்கும், மாலை 3.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்ரல் 8-ந்தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது. இத்தகவலை கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • 100-க்கும் ேமற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஊர் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் இருந்து ஜெடையலிங்கா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஊர் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த நவம்பர் மாதத்தில் ஜக்கனாரை ஊர் பிரமுகர்கள் ஜெடையலிங்க சுவாமி கோவிலுக்கு சென்று, அங்குள்ள வளாகத்தில் வளர்ந்திருந்த நகா மரத்தை வெட்டி, பூக்குண்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அதே பகுதியில் காய வைத்துவிட்டு வந்தனர். இந்த மரத்தின் விறகை மட்டுமே குண்டம் திருவிழாவிற்கு பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

    இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே குண்டத்தில் இறங்குவதற்காக கோவில் பூசாரி உள்பட பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடும் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து விழாவை நடத்த சுவாமியிடம் அனுமதி பெற்று ஜக்கனாரை கிராமத்தில் உள்ள தெவ்வமனை ஹிரியோடையா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 8 ஊர்களுக்கு சுவாமி ஊர்வலமாக உலா சென்றார்.

    அங்கு வீடு, வீடாக பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் நேற்று அதிகாலை ஜெடையலிங்கா சுவாமி கோவில் மற்றும் அதன் அருகே உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு விரதம் இருந்த பக்தர்கள் சென்று சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் நகா மரத்தின் விறகுகளை வைத்தனர். இதைத்தொடர்ந்து குரும்பர் இன மக்கள் ஜெடையலிங்கா சுவாமி கோவிலுக்கு வந்து, குண்டம் இறங்க உள்ள இடத்தில் கற்களை உரசி விறகுகளில் தீ மூட்டினர். அதாவது குண்டத்திற்கு தீ மூட்டுவதற்கு தீப்பெட்டியை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் குரும்பர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தயாராக இருந்தனர். அப்போது காலநிலை சற்று மாறி சில நிமிடங்கள் மட்டும் பலத்த காற்று வீசினால் மட்டுமே சுவாமி குண்டம் இறங்க அனுமதி அளித்ததாக ஐதீகம். அதன்படி பலத்த காற்று வீசியது. தொடர்ந்து முதலில் பூசாரியும், அவரை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

    ×