என் மலர்
நீங்கள் தேடியது "happiness"
- மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு விற்பனையானது.
- விலை உயர்வால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் இனி வரும் நாட்களில் விற்பனைக்கு வரும்.
ஈரோடு:
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.
கடந்த மாதம் ஈரோடு சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ. 7 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இதனிடையே மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிக மழை பெய்ததன் காரணமாக மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டு தரம் குறைந்ததோடு, விலையும் குறைந்தது. இதன் காரணமாக வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் கிடைக்கவில்லை.
ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் விளையும் மஞ்சள் தரமாக இருப்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் மேலும் விலை உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.10 ஆயிரத்து 500க்கு விற்பனை ஆனது.
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 568 முதல் ரூ.9 ஆயிரத்து 919 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 236 முதல் ரூ.9 ஆயிரத்து 779 வரைக்கும் விற்பனை ஆனது. இங்கு 962 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 909 மூட்டைகள் ஏலம் போனது.
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயித்து 550 முதல், ரூ.10 ஆயிரத்து 500 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 119 முதல் ரூ.9 ஆயிரத்து 980 வரையும் ஏலம் போனது. இங்கு 1,246 மஞ்சள் மூட்டைகளில் 1,067 மூட்டைகள் ஏலம் போனது.
ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 400 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 789 முதல் ரூ.9 ஆயிரத்து 999 வரையும் விற்பனை ஆனது. இங்கு கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்து 508 மஞ்சள் மூட்டைகளில் 1,482 மூட்டைகள் ஏலம் போனது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 569 முதல் ரூ.9 ஆயிரத்து 459 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 529 முதல், ரூ.9 ஆயிரத்து 499 வரைக்கும் விற்பனையானது. இங்கு 182 மூட்டைகள் மஞ்சளில் 88 மூட்டைகள் ஏலம் போனது.
கடந்த 2011-ம் ஆண்டு மஞ்சள் விலை குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது. அதன்பிறகு 12 ஆண்டுகளில் சராசரியாக குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டும் விற்பனையானது. மராட்டியம், தெலுங்கானா மாநிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரித்து, தரத்திலும் ஈரோடு மஞ்சளோடு போட்டிபோட்டதால் மஞ்சள் விலை கடந்த 12 ஆண்டுகளாக உயரவில்லை. இந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து தரமான மஞ்சள் சந்தைக்கு வராததால் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது.
மஞ்சள் விலை உயராததால் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 10 ஆண்டுகளாக இருப்பு வைத்துள்ளனர். விலை உயர்வால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் இனி வரும் நாட்களில் விற்பனைக்கு வரும். இருப்பினும் தரத்தில் வேறுபாடு இருக்கும் என்பதால் புதிய மஞ்சளுக்கு கிடைக்கும் விலை பழைய மஞ்சளுக்கு கிடைக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
- ஆடிப்பட்டதுக்கு நெல் நாற்று நடுவதாக நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசி இரவு நேரங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இரவு முழுவதும் பெய்தது. மழை பெய்யும் பொழுது விழுப்புரம் மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கும். ஆனால் தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால் மூலம் மழைநீர் தேங்காத வண்ணம் உள்ளது.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் அதிக அளவில் மழை பெய்தாலும் மழைநீர் பஸ் நிலையத்தை சூழ்ந்து கொள்ள முடியாது. நேற்று விழுப்புரத்தில் பெய்த மழை பெரும்பாக்கம், தோகைபாடி, நன்னாரு, காணை, சாலமேடு, வழுதரெட்டி, அரசூர், சாலை அகரம், கோலியனூர், வளவனூர், நன்நாட்டாம்பாளையம், வழுதரெட்டிபாளையம், அய்யம்கோவில்பட்டு, முண்டியம்பாக்கம், அய்யூர்அகரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. மேலும் நேற்று ஆடிக்கிருத்திகை யொட்டி பெய்த மழையால் ஆடிப்பட்டதுக்கு நெல் நாற்று நடுவதாக நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- காலை முதல் திரண்டு வந்தபடியே இருந்த நிலையில் சில்வர் கடற்கரை முழுவதும் கோலகலமாக காட்சியளித்தது.
- அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் போதை பொருட்களுக்கு எதிர்ப்பாக பன் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள் ,இளம் பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் திரண்டு வந்தனர், இந்த பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கண் கவரும் விதமாக நாய் கண்காட்சி ,மள்ளர் கம்பம், மல்லர் கயிர் காவல் துறை சார்பில் நாய் சாகச நிகழ்ச்சி, கயிறு இழுக்கும் போட்டி பீச் வாலிபால், சிலம்பம், கபடி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பொதுவெளியில் மேடை அமைத்து பாடல்கள் ஒளிபரப்பியதன் மூலம் இளம்பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சாலையில் ஆரவாரமாக குத்தாட்டம் போட்டுக் ஆடி பாடி கொண்டாடினார்கள்.. மேலும் ஒவ்வொரு கேளிக்கை நிகழ்ச்சியையும் அனைவரும் ஆர்வமாக கண்டுகளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியானது கடலூரில் புதுமையாக இருந்ததால் ஏராளமான பொதுமக்கள் ,இளைஞர்கள் காலை முதல் திரண்டு வந்தபடியே இருந்த நிலையில் சில்வர் கடற்கரை முழுவதும் கோலகலமாக காட்சியளித்தது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் , அய்யப்பன் எம்.எல்.ஏ.,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த மக்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசும் போது, கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு 30 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் 30 என்ற தலைப்பில் 10நாட்கள் ஏராளமான நிகழ்ச்சிகள் புதுவிதமாகவும் அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
- சில இடங்களில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிர்கள் காய்ந்து போனது.
- பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
கடலூர்:
பண்ருட்டி பங்களா தெரு பிள்ளையார் கோவில் அருகில் பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து புதுப்பேட்டை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் முருகன் (வயது 20) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து தங்கம், நல்ல நேரம், குமரன், விஷ்ணு உள்ளிட்ட 91 லாட்டரி சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
- 8.30 மணியிலிருந்து 9.30மணி வரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.
- வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர், அவலூர்பேட்டை, வளத்தி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30மணி வரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மணிலா உள்ளிட்ட பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- திருச்சியில் ரூ.1000 வாங்கிய குடும்ப தலைவிகள்
- சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படு கிறது.
திருச்சி,
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அதன்படி 2023- 24 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அந்த திட்டத்தி ற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறப்பு முகாம்கள் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் தகுதியான விண்ண ப்பங்கள் தேர்வு செய்யப்ப ட்டன.
தற்போது இந்த திட்ட த்தில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அண்ணா பிறந்த நாளான இன்று காஞ்சிபுர த்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதா னத்தில் உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை தொ டங்கி வைப்பதாக முதலமை ச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது.
தமிழகத்தில் பெரும்பா லான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.
திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி விஜயலட்சுமி கூறும்போது,
எனது கணவர் மரக்க டையில் மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார். வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகையாக ரூ. 3000 கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மகன் பத்தாம் வகுப்பு, இன்னொரு மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறா ர்கள். நான் எந்த வேலை க்கும் செல்லாமல் குழந்தைக ளை பராமரித்து வருகிறேன்.
சில நேரங்களில் குழந்தை களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு கூட கையில் பணம் இருக்காது.
கலைஞர் உரிமை த்தொகை என்னை போன்று வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.
சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படு கிறது. முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி நதியா,
நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு எனது வங்கி கணக்குக்கு ரூ. 1000 வந்தது. அதை பார்த்ததும் சந்தோ ஷமாக இருந்தது.
எனது மகளின் எதிர்கால தேவைக்கு இனிமேல் இந்த கலைஞர் உரிமைத் தொகையை சேமிக்கலாம் என இருக்கிறேன். முதலமை ச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
- கோடை மாதமான மே, ஜூன் மாதம் போல கடுமையான வெயில் சுட்டெரித்தது.
- மழை பெய்ய தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை மாதமான மே, ஜூன் மாதம் போல கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வியர்வை மழையில் நனைந்தபடி சாலையில் நடந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்த தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மேலும் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் இரு புறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இது விழுப்புரம் நகரம் வழுதரெட்டி, சாலா மேடு, நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பழப்பட்டு, முகையூர், திருக்கோவிலூர், அரசூர், திருவெண்ணைநல்லூர், அரியூர், அகரம், விக்கிர வாண்டி, கண்டமங்கலம், உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்டங்களில் மரக்காணம், செஞ்சி, திண்டிவனம், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. நேற்று இரவு பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மகிழ்ச்சிதான் வாழ்வின் பிரதான அங்கம்.
- புன்னகையில் வெளிப்படுவது மட்டுமே மகிழ்ச்சி அல்ல.
வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒருசேர எதிர்கொள்ளும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். மகிழ்ச்சிதான் வாழ்வின் பிரதான அங்கமாக இடம்பிடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். புன்னகையில் வெளிப்படுவது மட்டுமே மகிழ்ச்சி அல்ல. உள் மனம் நிம்மதியை அனுபவிப்பது வெளிப்பட வேண்டும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...
* நன்றி உணர்வுடன் இருங்கள். ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்காதீர்கள். அதுபோல் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு தயங்காதீர்கள். மற்றவர் உதவி நாடி வந்தால் அவர் கேட்கும் முன்பே குறிப்பறிந்து உதவி செய்ய முன் வாருங்கள்.
* நன்றி உணர்வை கடைப்பிடிப்பது மனதை பூரிப்படைய செய்யும். பிறருக்கு செய்த உதவி பயனுள்ளதாக அமைவதை கண்கூடாக காணும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
* அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை தொடருங்கள். ஆர்வமுள்ள செயல்களில் ஈடுபடுவது மன திருப்தியை அளிக்கும்.
* எதிர்மறை சிந்தனைகள் மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனதை திசை திருப்பும் செயல்களில் இருந்தும் விலகி இருங்கள். நேர்மறையான மன நிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். மனம் நிம்மதி அடைந்தாலே மகிழ்ச்சி எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.
* கடந்த கால நிகழ்வுகளையோ, நடந்து முடிந்த சம்பவங்களையோ திரும்பத்திரும்ப நினைவுக்கு கொண்டு வராதீர்கள். அது இறுக்கமான மனநிலைக்கு இட்டுச்செல்லும். நிம்மதியை தொலைத்து மகிழ்ச்சியை சீர்குலைத்துவிடும்.
* மன அழுத்தத்தைக் குறைக்கவும், நினைவாற்றல் திறனை மேம்படுத்தவும் தியானத்தில் ஈடுபடுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க இது உதவும்.
* குடும்பம், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவை வலுப்படுத்துங்கள். அவர்களுடனான பிணைப்பு உணர்வுப்பூர்வமானதாக அமையும் பட்சத்தில் மகிழ்ச்சியான மனநிலையை தக்கவைக்க துணைபுரியும்.
* குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலாவுக்கு திட்டமிடுங்கள். பயணங்கள் மனதை இலகுவாக்கும். சுற்றுலா இடங்கள் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக்கொடுக்கும். குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிக்க வழிவகை செய்யும்.
* சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். உடற்பயிற்சி, சீரான உணவுப்பழக்கம், போதுமான தூக்கம் என உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
* தெளிவான, அடையக்கூடிய, அர்த்தமுள்ள இலக்குகளை அமைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான இலக்குகளை பின்தொடர்வது வாழ்க்கையின் நோக்கத்தை பிரதி பலிக்க செய்யும். உள் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்க உதவும்.
- பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது.
- தங்களைப் படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மூன்று விஷயங்கள் நிம்மதி, மகிழ்ச்சியை தருகின்றன. அவை ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குறைவில்லா வாழ்வாதாரம். இம்மூன்றும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு எவரும் இல்லை.
கரு, சதைத்துண்டாக கருவறையில் இருக்கும் நிலையில் அதன் தவணை (ஆயுள்), வாழ்வாதாரம், செயல்பாடுகள், நற்பேறு பெற்றவரா? அல்லது துர்பாக்கியசாலியா? ஆகிய நான்கு விஷயங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி, வானவர் ஒருவரைக் கொண்டு எழுதப்படுகிறது. பின்னர், கருவில் உயிர் ஊதப்படுகிறது. மனிதன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அத்தனை படைப்புகளுக்குமான அனைத்து விஷயங்களும் அவை பிறப்பதற்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது.
இதுகுறித்து திருக்குர்ஆன் (57:22) இவ்வாறு குறிப்பிடுகிறது. `பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்த சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே ஆகும்'.
அதற்காக, `என்னுடைய விதிதான் எழுதப்பட்டுவிட்டதே' என்று மனோ இச்சையின் படி நடந்து கொள்ளுதல் கூடாது. விதியின் மீது பழியைப் போடாமல், நம் உழைப்பு மற்றும் முயற்சியின் மூலமாகவும், பிரார்த்தனைகளின் மூலமாகவும் நம்முடைய வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் இறையருளால் மேம்படுத்தலாம்.
`(நபியே) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும' என்று திருக்குர்ஆன் (2:186) விளக்குகிறது.
`பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு முறை சுலைமான் (அலை) அவர்களிடம் ஒருவர் வந்து, `அல்லாஹ் உங்களுக்கு பறவைகள் மற்றும் உயிரினங்களின் மொழிகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எனக்கு அவற்றுள் ஏதாவது ஒரு உயிரினத்தின் மொழியைக் கற்றுக்கொடுங்கள்' என்று கேட்கிறார்.
`எனக்கு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை' என்று சுலைமான் (அலை) கூறியும், அந்த மனிதர் வற்புறுத்தவே, `சரி, எந்த உயிரினத்தின் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். `எங்கள் வீட்டில் இரண்டு பூனைகள் உள்ளன, எனவே பூனைகளின் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று அந்த மனிதர் சொல்கிறார்.
பூனைகளின் மொழியை கற்றுக்கொண்டு வீடு திரும்பும் அவர், அன்றிரவு இரு பூனைகளும் பேசிக்கொள்வதை கேட்கிறார். ஒரு பூனை, மற்றொரு பூனையிடம், `நான் பசியால் செத்து விடுவேன் போல் இருக்கிறது, உன்னிடம் ஏதாவது உணவு இருந்தால் கொடு' என்று கேட்கிறது. அதற்கு அந்த பூனை `கொஞ்சம் பொறு, நம் எஜமான் வளர்க்கும் சேவல் நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்றது.
இதைக்கேட்ட அந்த மனிதர், அதிகாலையிலேயே தன் சேவலை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். சேவலை காணாமல் ஏமாற்றமடைந்த பூனை, மற்ற பூனையிடம், `நம் எஜமான், செத்த சேவலை ஏதோ ஒரு இடத்தில் புதைத்து விட்டார் போலும்' என்றது. அதற்கு மற்ற பூனை, எஜமான் சேவலை விற்று விட்டதைக் கூறுகிறது.
மறுநாளும் அதே பூனை `பசிக்கிறது' என்று மற்ற பூனையிடம் கேட்கிறது. `கவலைப்படாதே, எஜமான் வளர்க்கும் ஆடு நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்' என்று மற்ற பூனை பதில் சொல்கிறது. அன்றும் பூனைகள் பேசுவதைக் கேட்ட அந்த மனிதர், அடுத்த நாள், அதிகாலையில் ஆட்டை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். பூனைகளுக்கு இம்முறையும் ஏமாற்றமாகி விடுகிறது.
அதற்கு அடுத்த நாள், பசிக்கிறது என்று சொன்ன பூனையிடம், `நாளை நம் எஜமான் செத்து விடுவார், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்று மற்ற பூனை ஆறுதல் சொல்கிறது.
இதைக்கேட்ட அந்த மனிதர் பதறிப்போய் சுலைமான் (அலை) அவர்களிடம் வந்து நடந்ததைச் சொல்லி `எப்படியாவது நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று கெஞ்சுகிறார். சுலைமான் (அலை) அவரிடம் `சேவல் விஷயத்திலும், ஆட்டுக் குட்டி விஷயத்திலும் நீ எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாயோ, அவ்வாறே இப்பொழுதும் நடந்து கொள்' என்று கூறி, `வீட்டிற்குச் சென்று உன் மரண சாசனத்தையும், கஃபன் துணியையும் தயார் செய்து கொள்' என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.
இந்த சம்பவத்தின் மூலம் அல்லாஹ் மற்றவர்களுக்கு அளித்துள்ள அருட்கொடைகள் பற்றி பேராசை கொள்வதால் ஏற்படும் விபரீதத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை, வேறு சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றானோ, அதனை அடைய வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள்". (திருக்குர்ஆன் 4:32)
எனவே, அருட்கொடைகளை விரும்புபவர்கள், தங்களை படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கப்பட்டது.
- கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது சேர்வை காரன் பட்டி. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். 25 ஆண்டுகளாக சிங்கம்புணரி எஸ்.புதூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு வர சாலை மோசமாக இருந்தது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்த அவர் பொதுநிதியில் ரூ.18.03 லட்சம் நிதி ஒதுக்கி சாலை அமைக்க ஏற்பாடு செய்தார்.
சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் பொன் மணி பாஸ்கரன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை ெதாடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சிங்கம்பு ணரி வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் வாசு, சேர்வைக்காரன் பட்டி ஊராட்சி தலைவர் பூங் கோதை கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலாயுதம்பாளையம் பகுதிகளில் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
- 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலாயுதம்பாளையம் ,
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் ,கந்தம்பாளையம், மூர்த்தி பாளையம்,நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பா ளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடு துறை, நன்செய் புகளூர்,புகழி மலை, காகித புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலை வழி யாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர். அதே போல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது . கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது.3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து நேற்றுமாலை 140 அடியை எட்டியது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர்.
இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து ஆகிய பகுதிகளில் உள்ள பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 1817 கனஅடி நீர்வருகிறது. நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் வகையில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 7221 மி.கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 141 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன்பிறகு உபரிநீர் 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு திறக்கப்படும்.
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குபிறகு இதுவரை 5 முறை அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 800 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றுகாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 69.59அடியாக உள்ளது. நீர்வரத்து 1961 கனஅடி, தண்ணீர் திறப்பு 2599 கனஅடி, நீர்இருப்பு 5724 மி.கனஅடி.
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரியாறு 3, தேக்கடி 8.4, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.4, சண்முகா நதிஅணை 4, மஞ்சளாறு 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வீரபாண்டி 4, மி.மீ மழைளவு பதிவாகி உள்ளது.