என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Haryana Assembly election"
- விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 90 தொகுதியில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
பாஜக வெற்றி பெற்றதை அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- அரியானாவில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது.
- காங்கிரஸ் அங்கு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.வுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரியானாவில் பாஜக வெற்றிபெற வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை வழங்கிய அரியானா மக்களுக்கு எனது வணக்கம். இது அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி ஆகும். இங்குள்ள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- அரியானாவில் பா.ஜ.க. வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
- காங்கிரஸ் அங்கு 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
புதுடெல்லி:
அரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அங்கு காங்கிரஸ் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பவன் கெரா, அரியானா மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
தேர்தல் முடிவு எதிர்பார்க்காதது. ஆச்சர்யமாக உள்ளது. கள நிலவரத்திற்கு எதிராக உள்ளது.
அரியானா மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஆட்சி மாற்றம் என்ற விருப்பத்திற்கு எதிராகவும் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் முடிவுகளை ஏற்கமுடியாது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.
ஓட்டு எண்ணிக்கை குறித்தும், மின்னணு ஓட்டு எந்திரம் செயல்பாடு குறித்தும் 3 மாவட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கட்சி நிர்வாகிகளுடன் பேசி உள்ளோம். புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம். எங்களது வேட்பாளர்கள் எழுப்பிய கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளோம்.
அரியானா தேர்தல் வெற்றி என்பது முறைகேடான வெற்றி. மக்களின் விருப்பத்திற்கு எதிரான வெற்றி. வெளிப்படையான ஜனநாயகத்திற்கு எதிரான வெற்றி.
காஷ்மீரிலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கக் கூடாது என முயற்சி நடந்தது. ஆனால், மக்கள் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர் என தெரிவித்தார்.
- அரியானாவின் ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- அவர் குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறுகிறது.
இந்நிலையில், ஹிசார் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் 49,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் 30,290 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 19,000 ஆகும்.
அதேபோல பா.ஜ.க. வேட்பாளராக களம் கண்டுள்ள அரியானாவின் மந்திரியும், ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமல் குப்தா 17,385 வாக்குகள் பெற்று 3வது இடம் பெற்றுள்ளார்.
சாவித்ரி ஜிண்டால் குருஷேத்ரா தொகுதி பா.ஜ.க. எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
- முதலமைச்சர் நயாப் சிங் சைனி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காங்கிரஸ் கட்சி முன்னணி பெற்று வந்த நிலையில் தற்போது பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், பா.ஜ.க. அங்கு 20 இடங்களில் வெற்றி பெற்றும், 29 இடங்களில் முன்னிலை பெற்றும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
முதலமைச்சர் நயாப் சிங் சைனி 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளதால், தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
- அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
சண்டிகர்:
அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல், காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. எனவே அரியானாவில் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அரியானாவின் நுஹ் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடத்தினோம். நாங்கள் ஒற்றுமை மற்றும் அன்பு பற்றி பேசி வருகிறோம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் வெறுப்பை பரப்பி நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அரசியல் அமைப்பை அழிக்க நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் ஒரு கொள்கை ரீதியான போரை எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில், ஒருபுறம் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற கொள்கையும், மறுபுறம் அரசியலமைப்பு சார்ந்த கொள்கையும் இருக்கின்றன.
அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. நாம் வெறுப்பை அழித்தொழிக்க வேண்டும்.
நான் அமெரிக்காவில் அரியானாவைச் சேர்ந்த சில மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் அரியானாவில் அவர்களுக்கு வேலை கிடைக்காததால் அமெரிக்காவுக்கு வந்ததாக கூறினார்கள்.
அரியானாவில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. அரசு அரியானாவை சீரழித்து விட்டது.
பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
- அரியானா மாநிலத்தில் வருகிற 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.
கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
நாளை வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். அது யாருடைய பணம்?
- இந்தியாவில் இன்று அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் உண்டு என்றார்.
சண்டிகர்:
அரியானா சட்டசபைத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோனிபட் பகுதியில் கோஹனா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மகாபாரதத்தில் அபிமன்யு குருக்ஷேத்திரத்தில் மாட்டிக்கொண்டதைப் போல, கடைக்காரர்களை ஒரு சக்கர வியூகத்தில் சிக்க வைத்துவிட்டார் நரேந்திர மோடி.
அவர்கள் எப்படி மாட்டிக்கொண்டார்கள்? பணமதிப்பிழப்பு நீக்கம், ஜிஎஸ்டி, 2-3 கோடீஸ்வரர்களுக்கு வங்கிகளின் பணம் அனைத்தும் வழங்கப்பட்டது. வங்கிகளில் கடன் வாங்கச் சொன்னால் வங்கிகள் கடன் தராது என சொல்வார்கள்.
இந்தியாவில் இன்று அதானி மற்றும் அம்பானி மட்டுமே கடன் பெற முடியும். அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் உண்டு.
அக்னிவீர் யோஜனா என்றால் என்ன? இந்தத் திட்டத்திற்கு ஒரே ஒரு நோக்கம்தான் - ராணுவ வீரர்களுக்குப் போகும் பென்ஷன், கேன்டீன், இழப்பீடு என பணத்தைப் பறிக்க.
இந்தத் திட்டத்தின் உண்மையான பெயர் அதானி யோஜனா என இருக்கவேண்டும்.
பயிற்சி, ஓய்வூதியம், ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் என பணத்தை அதானியின் பாக்கெட்டில் போடவேண்டும் என்றும், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டைத் திருப்புவதே இதன் நோக்கம்.
அம்பானியின் திருமணத்தைப் பார்த்தீர்களா? அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். இது யாருடைய பணம்? இது உங்கள் பணம்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வங்கிக் கடன் வாங்குகிறீர்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யலாம்.
ஆனால் ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே திருமணத்தை நடத்த முடியும் என்ற கட்டமைப்பை நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார். இது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் இல்லை என்றால் இது என்ன என கேள்வி எழுப்பினார்.
#WATCH | Haryana | Addressing a public rally in Sonipat's Gohana, Congress MP & LoP Rahul Gandhi says, "Did you see Ambani wedding? It went on for 15 days you all saw. Did you see Modi ji at the wedding? You saw it right. Did you see Rahul Gandhi there? It should be clear now who… pic.twitter.com/mh3N3E4CQc
— ANI (@ANI) October 1, 2024
- ராகுல்காந்தி அரியானாவில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
- ராகுல்காந்தி ரோடுஷோ நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார்.
அரியானாவில் வருகிற 5-ந்தேதி ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளும் பா.ஜ.க.-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அரியானாவில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் பகதூர்கர் நகரில் ராகுல்காந்தி ரோடுஷோ நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்திற்கு நடுவே ராகுல்காந்திக்கு தொண்டர்கள் பஜ்ஜி கொடுத்தனர். அப்போது அருகில் இருந்து காவலர் ஒருவருக்கும் ராகுல்காந்தி பஜ்ஜி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Rahul Gandhi ne Bahadurgarh ka Pakoda khaya. What all political stage managers have to do ???#HaryanaElections @RahulGandhi @pranavINC pic.twitter.com/w29NJjinCo
— bhupendra chaubey (@bhupendrachaube) October 1, 2024
- அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
- அரியானாவில் 89 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
சண்டிகர்:
90 தொகுதிகளை கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இரு கட்சிகள் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதே போல் ஜே.பி.பி. இந்திய தேசிய லோக்தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் போட்டியில் உள்ளன.
அரியானாவில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவர் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
டெல்லியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மூலம் அரியானா புறப்பட்டார். கர்னாலில் உள்ள அசந்த் நகருக்கு அவர் சென்றடைகிறார். பிற்பகலில் அசந்த் சட்டசபையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹிசார் பகுதியில உள்ள பர்வாலாவுக்கு செல்கிறார் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். மாலை அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்கு திரும்புகிறார். அரியானாவில் 89 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எஞ்சிய 1 இடத்தில் உள்ள கூட்டணியில் மார்ச்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு களத்தில் நிற்கிறது.
- பா.ஜ.க. சார்பில் ஜுலானா தொகுதியில் கேப்டன் யோகேஷ் பைரகி போட்டியிடுகிறார்.
- இதுவரை 87 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பா.ஜ.க.
புதுடெல்லி:
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப் பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டது.
அரியானாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டசபை தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளராக கேப்டன் யோகேஷ் பைரகி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரியானா மாநில பா.ஜ.க. இளைஞர் பிரிவு துணை தலைவராகவும், அரியானா பாஜகவின் விளையாட்டு பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. இதுவரை 87 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
- அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.
சண்டிகர்:
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் வகுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க சமீபத்தில் வெளியிட்டது. சில வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் துணை பிரதமரான தேவி லாலின் பேரன் ஆதித்யா தேவி லால் இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி, இந்திய நேஷனல் லோக் தளம் கட்சியில் இணைந்தார். அவருக்கு அரியானாவின் தப்வாலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 2வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்