search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானாவில் 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி: முதல்வர் நயாப் சிங் சைனி வெற்றி
    X

    அரியானாவில் 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி: முதல்வர் நயாப் சிங் சைனி வெற்றி

    • அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
    • முதலமைச்சர் நயாப் சிங் சைனி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காங்கிரஸ் கட்சி முன்னணி பெற்று வந்த நிலையில் தற்போது பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், பா.ஜ.க. அங்கு 20 இடங்களில் வெற்றி பெற்றும், 29 இடங்களில் முன்னிலை பெற்றும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

    முதலமைச்சர் நயாப் சிங் சைனி 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    தொடர்ந்து 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளதால், தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×