search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He died miserably without treatment."

    • 7 பேர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை சின்ன கடைத்தெரு அருகில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வரும் உதயகுமார் மகன் முத்து, இவர் தி.மு.க. இளைஞர் அணி நகர துணை அமைப்பாளராக உள்ளார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 30-ந் தேதி மாலை பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு முத்து மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் வேங்கிக்கால் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நகரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் மர்ம கும்பல் வந்தனர்.

    திடீரென முத்துவை வழிமறித்து கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    படுகாயம் அடைந்த முத்துவை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் திவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்த முத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ள சின்ன கடைத்தெரு பகுதியில் அசம்பா விதங்களை தவிர்க்கும் பொருட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்ப ட்டுள்ளனர்.

    • ஐ.டி.ஐ. படித்து வந்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    திருவலம் அடுத்த குப்பிரெட்டிதாங்கல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மகன் அஜய்கீர்த்தி (வயது 20). ஐ.டி.ஐ. படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜசேகர் (28).

    நண்பர்களான அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் நேற்று பைக்கில் சென்னை- பெங்களூரு சாலையில் சென்றனர். மேல்மொணவூர் அருகே சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியது.

    இதில் பைக் சேதமடைந்து லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டது.

    அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அஜய்கீர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    உயிரிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜ சேகரை பொது மக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொசு பத்தியால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அசோக் நகரை சேர்ந்தவர் உமா (வயது 60). கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் துளசிராமனுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அருகில் கொசுவத்தி சுருளை ஏற்றுவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அப்போது கொசுவத்தி சுருள் உமா படுத்திருந்த மெத்தையில் பட்டு தீ பற்றிக் கொண்டது.

    நல்ல உறக்கத்தில் இருந்த உமாவின் உடையில் தீப்பற்றி இருந்தது. உடலில் தீ பற்றியதால் உமா வலியால் அலறி துடித்தார். அவரது மகன் உமாவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெயில் தாக்கத்தால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணியளவில் வெயில் தாக்கத்தால் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கி கிடந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஈரோட்டில் பீஸ் மடிக்கும் வேலைக்கு சென்று வருகிறார்.
    • நண்பர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பஸ் நிலையத்தில் அரிசி கடை வைத்து தொழில் செய்து வருபவர் கவிதா (வயது 42). இவரது கணவர் பாபு சங்கர் (47). இவர் ஈரோட்டில் பீஸ் மடிக்கும் வேலைக்கு சென்று வருகிறார். தனது நண்பர் பணம் கடன் வாங்கி தர சொன்னதின் பேரில் ஈரோட்டில் ஒருவரிடம் பாபு சங்கர் பணம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் நண்பர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் பணம் கடன் கொடுத்த கார்த்திக் (32) பாபு சங்கரிடம் பணம் தரும்படி அடிக்கடி கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாபுசங்கர் உணவில் எலி பேஸ்ட் சாப்பிட்டார். இதையடுத்து அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதை அறிந்து அங்கு சென்ற அவரது மனைவி கவிதா நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.நேற்று பாபு சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    இதேபோல், நாமக்கல் பள்ளிபாளையம் பள்ளிபாளையம் அடுத்த வெப்படை அருகே புது மண்டபத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் இளையராஜா (வயது 27). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இளையராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேகர் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×