search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hearing"

    • கடந்தாண்டு ஜூலை 18-ந் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • பரிசீலித்த பின்னர் விசாரணைக்குப் பட்டியலிடப்படும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதித்ததோடு, தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் செல்லுபடியாகும் எனவும் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2023-ம் ஆண்டு மே 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு அமர்வின் இந்த தீர்ப்புக்கு எதிராக "பீட்டா' விலங்குகள் நல அமைப்பு சார்பில் கடந்தாண்டு ஜூலை 18-ந் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மறு ஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் பட்டிய லிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 8-ந் தேதி பீட்டா அமைப்பின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட்டிடம் முறையிட்டார்.

    கடந்த ஓராண்டாக இந்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு வராத நிலையில், பீட்டா அமைப்பு சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று (புதன் கிழமை) முறையிட்டார்.

    அப்போது, வழக்கின் விவரங்களை மின்னஞ்சல் மூலம் மீண்டும் அனுப்புமாறு அறிவுறுத்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதை பரிசீலித்த பின்னர் வழக்கு உரிய அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று தெரி வித்தார்.

    • ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
    • ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல்.

    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

    இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார்.

    அவரது மனுவில், "தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்தது.

    இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    • மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
    • தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இடதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

    இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அவரது மனுவில், தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு இன்று (மே 28) உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜாமீன் நீட்டிப்பு மனு மீதான விசாரணை நடப்பதற்கு முன்னதாகவே கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்து அவர் மீண்டும் சிறை செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

     

    • காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
    • மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்டன.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து 31 மனுக்களும்என மொத்தம் 546 மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப் பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்ட லம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்கி 1 கிலோ மீட்டர் முட்டி போட்டுக் கொண்டு12.36 நிமிடத்தில் 2 கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து, வேல்ட் புக் ஆப்ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனை விருது வழங்கியதை தொடர்ந்து, மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    சின்னசேலம் வட்டம் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா 14.9.2021 அன்று ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவரால் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டு இறந்ததை தொடர்ந்து, அவருடைய மனை விபிரியா வுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995 திருத்தவிதிகள் 2016 பிரிவு 46(1)ன் கீழ் மேல்வாழப்பாடி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளி யில் காலியாக உள்ள சமை யலர் பணிக்கான ஆணை யினையும், மாற்றுத்திற னாளிநலத்துறை சார்பில் செவித்திறன் குறை யுடை யோருக்கு காதொலி கருவி 3 ேபர்களுக்கு தலா ரூ.4ஆயிரம் மதிப்பீட்டிலும் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) விஜயராக வன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணைகலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    • சினேகா கடந்த சில வருடங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
    • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் சினேகா (வயது 21). பட்டதாரி. இவருக்கு கடந்த சில வருடங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியினை தாங்க முடியாமல் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்ட சினோகா தீ வைத்துக் கொண்டார்.

    அப்போது சினேகாவில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்றனர். அங்கு தீயில் கருகிய நிலையில் இருந்த சினேகாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சினேகா நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தைகளின் உயரம், எடை குறித்து குழந்தைகளை பரிசோதிக்கும் முகாம் நடைபெறுவதை அவர் பார்வையிட்டார்.
    • முதி யோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரி ஒன்றியம், காட்டூர் பகுதியிலுள்ள பாரதி முதியோர் இல்லத்தில் 21 முதியோர்களும், அம்மையப்பன் பகுதியி லுள்ள சேவாயோகா மாணவர் மற்றும் முதியோர் இல்லங்களில் 45 முதியோர்களும் மற்றும் 4 மாணவர்களும் பராம ரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த முதியோர் இல்லங்களில் பரா மரிக்கப்பட்டு வரும் முதி யோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கேட்டறிந்தார்.

    சமையல்கூடம், குளியலறை, முதியோர்களை பராமரித்துவருவது தொடர்பான பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து, கொரடாச்சேரி ஒன்றியம், இலவங்கார்குடி ஊராட்சி பகுதியிலுள்ள அங்கான்வாடி மையத்தில் 0 - 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும், குழந்தை களின் உயரம், எடை குறித்து குழந்தைகளை பரிசோதிக்கும் முகாம் நடைபெறுவதை அவர் பார்வையிட்டார்.

    விளமல் ஊராட்சியில், வட்டார வள மையத்தில், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்களுக்கு பயிற்சி அளிப்பதை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு தரமான, சுகாதாரத்துடனான உணவினை தயாரித்து வழங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பயிற்சி பெறும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, தண்டலை ஊராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு குழந்தை களுக்கு உணவு தயா ரிக்கப்படும் சமைய லறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் குறுங்காடுகள் அமைப்பதற்கு மரக்கன்று களை நட்டு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன், மத்திய பல்கலை கழக பதிவாளர் சுலோச்சனா சேகர், குறுங்காடு கண்கா ணிப்பு அலுவலர் ரமேஷ்கு மார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 495 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது :-

    குைறதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 495 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசா ரணை செய்துஉடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்டஅலுவல ர்களுக்கு வழங்க ப்பட்டு ள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்த ப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபு த்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புதிட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து த்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கடலூர்:

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை எதிர்த்து அண்ணாகிராம ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு கிராமங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின் பணிகளை பேக்கேஜ் டெண்டர் மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பெருமளவு நிதி ஊராட்சி மன்றங்களுக்கு சேர வேண்டிய தொகையாகும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போது அரசே அதிகாரிகள் மூலம் பேக்கேஜ் டெண்டர் விடுவதால் ஊரட்சி மன்றங்களின் உரிமை பறிபோவதாக ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த திட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே உள்ளனர்.எனவே அரசு வெளியிட்டுள்ள அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அரசாணையை ரத்து செய்ய கோரியும்,ஊராட்சி மன்றங்கள் மூலமாகவே டெண்டர் விட உத்தரவிட கோரியும் கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கானது நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்குவந்தது.வழக்கினை விசாரித்த நீதிபதி சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் கடலூர் கலெக்டர்பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை வருகிற 21-ந் தேதிக்கு அன்று தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.

    நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது. #AyodhyaCase #SupremeCourt
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு முன் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு நாளைய விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

    முன்னதாக கடந்த 10-ந் தேதி இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி யு.யு.லலித், வழக்கில் இருந்து விலகிக்கொண்டார். எனவே புதிய அமர்வு அமைப்பதற்காக இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் மற்றொரு நீதிபதி என்.வி.ரமணாவும் அமர்வில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய அமர்வு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.  #AyodhyaCase #SupremeCourt 
    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை 10-ம் தேதி முதல் 5 பேர் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. #SC #AyodhyaCase
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து, விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரஷூட் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.

    இந்த புதிய அமர்வு வரும் 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. #SC #AyodhyaCase 
    செம்மஞ்சேரியில் கோர்ட்டு விசாரணைக்கு பயந்து கொலை வழக்கு குற்றவாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வம்(வயது 27). பெயிண்டர். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது.

    செம்மஞ்சேரியில் 7 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் செல்வம் 4-வது குற்றவாளி ஆவார். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை அடைந்து விட்டதால் கோர்ட்டு என்ன தண்டனை வழங்குமோ? என செல்வம் பயந்தபடி இருந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென செல்வம், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்மஞ்சேரி போலீசார், தற்கொலை செய்த செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டு விசாரணைக்கு பயந்து செல்வம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ×