என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Herb"
- நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான்.
- நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும்.
நமது வீடுகளில் செடி வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயல் ஆகும். அதுவும் பெண்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும். நம் பாட்டி காலத்தில் வீடுகளில் மூலிகை செடிகளை வளர்ப்பது வழக்கம். ஆனால் நாம் அழகு சார்ந்த செடிகளையே தற்போது வளர்க்கிறோம். முன்பெல்லாம் உடல் நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே மூலிகை செடிகளை வைத்து கசாயம் வைத்தோ அல்லது பத்து போட்டோ சரிசெய்து விடுவார்கள்.
ஆனால் விஞ்ஞானம் வளர வளர அனைவரும் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்ற தொடங்கிவிட்டோம். இப்போதும் ஒரு சில மூலிகைகளை வைத்து நமது வீடுகளிலேயே சளி, இருமல், காய்ச்சல், அடிப்பட்ட காயங்களுக்கு மருந்து என நாமே சில விஷயங்களை செய்யலாம். அப்படி எந்த மூலிகை செடிகள் நமது வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம் வாங்க...
நொச்சி
நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.
ஆடாதொடை: பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
தூதுவளை
தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
கற்பூரவல்லி
கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
அருகம்புல்
அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
நிலவேம்பு
நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.
நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும்.
சோற்றுக் கற்றாழை
கற்றாழையில் உள்ள நுங்கு போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.
மஞ்சள் கரிசாலாங்கண்ணி
இது தலை முடிக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
துளசி
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
- சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
* சாமி அறை போல் சமையல் அறையும் தூய்மையாக இருந்தால் தான் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் வராது. வெங்காயம், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டால் அந்த வாசத்திற்கே பூச்சிகள் வராது. மேலும் சமையல் முடிந்ததும் சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* அரிசி பாத்திரத்தில் வேப்பிலை போட்டு வைத்தால் வண்டு வராது. பருப்பு டப்பாக்களில் பூண்டின் நடுக்காம்புடன் உப்பை சேர்த்து துணியால் முடிச்சு போட்டு வைத்தால் பருப்பின் சுவையும் குறையாது, வண்டும் வராது.
* காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக்கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக்கூடாது.
* ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரே டப்பாவில் மூடி வைக்கலாம்.
* உலர் திராட்சை, பேரீச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.
* மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
* அரைத்த மிளகாய் தூள் வைத்திருக்கும் டப்பாவின் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல் போட்டு வைக்க தூளின் நிறம் மற்றும் தரம் மாறாது. பெருங்காயத்தையும் போடலாம்.
* முருங்கைக்காயை அப்படியே பேப்பரில் சுருட்டி வைத்தால் ஒருவாரம் கெடாது. இதேபோல வாழை இலையை வைத்தால் காய்ந்தோ பழுத்தோ போகாது.
* ஆப்பிளை நறுக்கி சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்து அனுப்பினால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.
* அத்தி, கிஸ்மிஸ் பழம் போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அக்ரூட் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் எளிதாக உடைக்கலாம்.
* முருங்கை பிஞ்சை ரசத்தில் போட்டால் ரசம் ருசியாக இருக்கும். மோரில் சுக்கு பொடித்து சேர்க்க சுவை கூடும். கடலை மாவு மற்றும் பார்லி மாவை பாதி பாதி சேர்த்து பக்கோடா செய்தால் ருசி அமோகமாக இருக்கும்
* அப்பளம், வடகம், வற்றலில் (காய்ந்த) வற மிளகாயை போட்டு வைக்க வண்டு, பூச்சிகள் வராது.
* டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீ தூளில் ஆரஞ்சு வாசம் வரும். டீயும் ருசியாக இருக்கும்.
* பச்சைநிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்க காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.
* முறுக்கு மாவில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட, மொறுமொறுப்பாக நெய் வாசத்துடன் இருக்கும்.
* நூடுல்ஸ் மீதமானால் அதனுடன் பச்சை காய்கறிகளை நறுக்கிப் போட்டு தயிர் சேர்த்து சாலட் செய்ய சூப்பராக இருக்கும்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
- தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம்.
பரமத்தி வேலூர்:
கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகம் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இடுபொருட்கள் விபரம் தலா ஒரு நபருக்கு 10 வகையான மூலிகைச் செடிகள் ,செடி வளர்ப்பு பைகள்-10,
தென்னை நார்க்கட்டி-10கிலோ ,மண்புழு உரம் -4 கிலோ வழங்கப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தோட்டக்–கலைத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
- தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் மூலிகை செடி வளர்த்த மாணவர்களை பாராட்டினர்.
- பள்ளி சார்பில் பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்க்க பயிற்சியளிக்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு பள்ளி முழுவதும் பசுமையாக உள்ளது. அதே போல மாணவ, மாணவிகளும் தங்களது வீட்டுத்தோட்டங்கள் மற்றும் மாடித்தோட்டங்களில் மூலிகை செடிகளை வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி சார்பில் பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்க்க பயிற்சியளிக்கப்பட்டது.
பலர் ஆர்வத்துடன் செடிகளை வீடுகளில் வளர்த்து வந்தனர். அதன்படி தாங்கள் வளர்த்த செடிகளை பள்ளிக்கு கொண்டுவந்த மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார். வகுப்பு தொடங்கும் முன்பு கடவுள் வாழ்த்து சமயத்தில் செடிகளை நன்கு வளர்த்த மாணவ, மாணவிகளை ஆசிரியைகள் சுபஸ்ரீ, புஷ்பா, அம்சத் ராணி, ரம்யா ஆகியோர் பாராட்டினர்.
- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூலிகைகள் மற்றும் அதன் மகத்துவம், பயன்படுத்தும் முறைகள், பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான மூலிகைகள் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
- இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வெள்ளைப்பூண்டு கொடி மூலிகை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்கள் கேட்டு பெறலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகம் இணைந்து நடத்தும் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூலிகைகள் மற்றும் அதன் மகத்துவம், பயன்படுத்தும் முறைகள், பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான மூலிகைகள் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வெள்ளைப்பூண்டு கொடி மூலிகை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்கள் கேட்டு பெறலாம்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக மூலிகை கன்றுகள் வழங்கப்படுகிறது.
எனவே இதில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம்.குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்