என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hiding"
- நடிகை கஸ்தூரியின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் புகார் அளித்தனர்.
- நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அப்போது தெலுங்கு பேசுபவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அவர்,தெலுங்கு மக்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. தவறாக பேசியதாக கருதினால் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார்.
ஆனாலும் அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, முன் ஜாமின் மனு மீதான உத்தரவை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. கஸ்தூரியின் கருத்து தொடர்பாக நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
- கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர்
- பெயர்- விலாசம் மாற்றம்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலகண்ணன்(வயது 42). தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும் இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இதில் கமலக்கண்ணன் முன்விரோதம் காரணமாக
கடந்த 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் 5-ந் தேதி வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள சக்தி நகரில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் நேதாஜி நகரை சேர்ந்த சுதாகர்(வயது 31), விஸ்வநாதன்(23) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த விஸ்வநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினார்.
இவரைப் பிடிக்க கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வாணியம்பாடி கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் விஸ்வநாதன் வசித்து வந்த நிலையில் மீண்டும் போலிஸ் தன்னை தேடுவதை அறிந்த அவர் கர்நாடகா மாநிலத்திற்கு தப்பி ஓடி விட்டார்.
பின்னர் கர்நாடகவில் பதுங்கியிருந்த விஸ்வநாதனை தனிப்படை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
விஸ்வநாதனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
ஜாமினில் வெளியே சென்றவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் தஞ்சம் அடைந்தார்.
அங்கு தன் பெயர், விலாசம் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை மாற்றி கொண்டு, வாய் பேசாத லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இவருக்கு 12 வயதில் மகன் உள்ளான். நாங்கள் திருப்பதி வருவதை அறிந்த விஸ்வநாதன், கர்நாடகாவுக்கு தப்பி சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்று கைது செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- ஜெயங்கொண்டம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு
- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான கணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அடுத்த கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது35). இவரது மனைவி பானு ப்பிரியா(29). இவர்களுக்கு 3 வயதில் ஆண் ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர்கள் இலையூர் கண்டி யங்கொல்லையிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மனோகரன் பானுப்பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார்.
இதனிடையே மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த மனோகரன் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட பானுப்பிரியா, வாரியங்காவில் வசிக்கும் தனது தந்தை நீலமேகம் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று உணவகத்தில் வேலை செய்து கொ ண்டிருந்த பானுப்பிரி யாவை, இனி வேலைக்கு செல்லக்கூடாது என மனோ கரன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மனோகரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பானுப்பிரியாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்து வந்த பானுப்பி ரியாவின் தந்தை நீலமேகம், ரத்த வெள்ளத்தில் கிடந்த பானுப்பிரியாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து நீலமேகம் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மனோகரனை தேடி வருகின்றனர்.
- ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிறுவனுடன் வாலிபர் நின்றிருந்தார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாரதியார் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு சிறுவனுடன், வாலிபர் நின்றிருந்தார். அவர்களை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை யிட்டபோது வாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் 17வயது சிறுவன், எம்.கே.புரம் முத்துத் தேவர் தெருவை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி கேயன்(19) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த இருவர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர்.
- தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 20), சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரும் சாராயம் விற்று கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
இதனை பார்த்த ராஜீவ்காந்தி தப்பி தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.
அதேபோல் மற்றொரு வழக்கில் சாராயம் விற்ற கேதாரிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தை (40) கைது செய்தனர்.
- சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
- புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு, ஜூலை. 5-
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
வருவாய் துறைக்கு சொந்தமான இந்த கல்குவாரியின் உரிமம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காலாவதியானது. இதனால் குவாரியை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்துள்ளது.
பல வருடங்களாக குவிந்துள்ள கற்குவியல்களில் செடி, கொடி வளர்ந்து புதர் நிறைந்து காடு போன்று காட்சியளிக்கிறது.
இந்நிலையில் ஒரு சிறுத்தை இந்த கல்குவாரியில் தஞ்சம் புகுந்து கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் புகுந்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தன.
தொடர்ந்து போக்கு காட்டி வந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து கடந்த மாதம் 30-ந் தேதி சிறுத்தையை பிடித்தனர்.
பின்னர் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இதை அடுத்தே அப்பகுதி மக்கள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இருந்தாலும் மீண்டும் கல்குவாரியில் வேறு ஏதாவது வன விலங்குகள் பதுங்கி மீண்டும் அச்சுறுத்தக் கூடாது என பயந்து வருகின்றனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த செயல்படாத கல்குவாரி 1.25 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆனால் இதனை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் தரிசு இடத்தில் விவசாயம் செய்ய முடிவதில்லை.
புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சுத்தமாக வைத்திருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). இவர் செங்குன்றம் பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, கொலை மிரட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று வழிப்பறியில் ஈடுபட்டார்.
ஜோதிநகரில் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, ரவுடி ராகுல் வழிமறித்து நிறுத்தினார். அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்.
இதையடுத்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரவுடி ராகுலை தேடி வந்தனர். இந்த நிலையில் பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடி ராகுலை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்