search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Housing lease"

    • கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது

    வேலூர்:

    காட்பாடி அடுத்த வீரபத்திரபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தை சேர்ந்த 42 பேரின் வீட்டுமனை பட்டா ஜாப்ரா பேட்டையில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு தற்காலிக பட்டா வழங்கிய நபர் தற்போது அந்த இடத்தை கொடுக்க மறுக்கிறார்.

    இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது.

    எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.

    • கரூரில் 24,913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
    • கரூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங் கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.க்ஷ இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் வட்டத்தில் 7,095 பயனாளிகளுக்கும், அரவக்குறிச்சியில் 1,974, மண்மங்கலம் வட்டத்தில் 1,650, புகளூர் வட்டத்தில் 3,091, குளித்தலை வட்டத்தில் 3,318, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 3,935, கடவூர் வட்டத்தில் 3,850 என மொத்தம் 24 ஆயிரத்து, 913 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் கரூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.
    • நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு அனைத்து வகைமாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்கள் சங்கத்தை சேர்ந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது வரை நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். மாற்று திறனாளிகள் வறுமையில் வாடும் நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் ராமேசுவரம் கிளை தலைவர் குமார், செயலாளர் லட்சுமணன், ராபின்சன் தலைமையில் 15 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

    • உதவி கலெக்டர் வழங்கினார்
    • குறை தீர்வு முகாமில் மனு கொடுத்த உடனே தீர்வு

    ஆரணி:

    ஆரணி டவுன் கோட்டை வீதியில் ஆரணி சப்-கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகின்றன. தற்போது சப்-கலெக்டராக தனலட்சுமி என்பவர் இருந்து வருகின்றார்.

    இந்த அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    இந்த முகாமில் ஆரணி போளூர் ஜமுனாமுத்தூர் கலசபாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    மேலும் கடந்த வாரம் திங்கட்கிழமை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் எஸ்.வி.நகரம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் தங்கியிருந்ததை வருவாய் துறையினர் அகற்றிவிட்டனர்.

    தங்க வழியின்றி உள்ளதாக எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் கார்த்தி சாமந்தி ஆகிய 3 பயனாளிகள் ஆரணி சப்-கலெக்டரிடம் குறைதீர்வு முகாமில் மனு அளித்தனர். இந்த மனுவை உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து இரும்பேடு ஊராட்சியில் உள்ள இடத்தில் 3 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா சப்-கலெக்டர் தனலட்சுமி வழங்கினார்.

    பட்டாவை பெற்ற பயனாளிகள் வருவாய் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் சப்-லெக்டர் நேர்முக உதவியாளர் பெருமாள் தாசில்தார் ஜெகதீசன், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனையிடங்கள் ஒதுக்கப்பட்டு வீட்டுமனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டன.
    • சிலர் பட்டா பெறப்பட்ட இடத்தில் வீடுகட்டி குடியேறாமல் வேறு இடங்களில் குடியிருக்கின்றனர்.

    தாராபுரம் :

    முந்தைய ஆண்டுகளில் வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனையிடங்கள் ஒதுக்கப்பட்டு வீட்டுமனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டன.

    சிலர் தங்களுக்கு கிடைத்த பட்டாவை வேறு சிலருக்கு விற்பனை செய்தும் விட்டனர். சிலர் பட்டா பெறப்பட்ட இடத்தில் வீடுகட்டி குடியேறாமல் வேறு இடங்களில் குடியிருக்கின்றனர். சில இடங்களில் பட்டா வழங்கப்பட்ட இடங்கள் அருகேயுள்ள நில உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 'செக்' வைக்கும் விதமாக பயன்படுத்தப்படாமல் உள்ள வீட்டுமனைப்பட்டாக்களை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    தாலுகா வாரியாக இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றும், அந்த இடத்தில் குடியிருக்காதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தாலுகா அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பொது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ளவர்களை அடையாளம் காண இயலாத பட்சத்தில் அந்த பட்டா ரத்து செய்யப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படும் என திருப்பூர்

    வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

    • தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • கிராம மக்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 7 நபர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா ரத்தானதாக கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் அவர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அளவீடு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி விட்டனர்.

    பட்டா இருந்தும் இடம் கிடைக்காமல் விரக்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு பட்டாவுடன் எஸ்.வி.மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவல் சம்பந்தமாக அந்தவழியாக சென்ற தாசில்தார் சாந்தி பொதுமக்களை கண்டதும் அவர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் ஒரு வாரத்திற்குள் அளவீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் பயனாளிகளை தாசில்தார் சாந்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்து 2 வாரங்களில் நில அளவீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

    • கடலூர் மாவட்டத்தில் 13 பழங்குடி இன குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை கலெக்டர் வழங்கினார்.
    • பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்,

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமை தாங்கினார். ட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பட்டா தொடர்பான 211 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 54 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 46 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 63 மனுக்களும், என்.எல்.சி. தொடர்பாக 44 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், இதர மனுக்கள் 41 ஆக மொத்தம் 497 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

    பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், சிறுபாக்கம் பகுதியில் சுமார் 20 வருட காலமாக வசிக்கும் பூம்பூம்மாடு வைத்து பிழைக்கும் இந்து-ஆதியன் வகுப்பினை சேர்ந்த 7 குடும்பங்கள் மற்றும் அதே கிராமத்தில் 35 வருடங்களுக்கு மேலாக கூரை வீடு மற்றும் அட்டை வீடுகள் கட்டி வசிக்கும் இந்து-காட்டுநாயக்கன் வகுப்பை சேர்ந்த 6 குடும்பங்கள் என மொத்தம் 13 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×