என் மலர்
நீங்கள் தேடியது "husband"
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.
மதுரை :
மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.
எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.
- கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
- பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பல்லடம் :
பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 61). இவரது மனைவி தமிழரசி (50). இவர்கள் மகன்சம்பத்குமார்(35) மற்றும் மருமகள் கலையரசி (30) ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மகன் சம்பத்குமார் திருப்பூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீடு தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது சம்பத்குமாரின் தந்தை வேலுச்சாமி மற்றும் தாயார் தமிழரசி ஆகியோர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை திறந்து மயங்கி கிடந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் மருத்துவர் பரிசோதனை செய்தபோது வேலுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தமிழரசிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவர்களது மகன் சம்பத்குமார் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார்.
- செந்தில் உடல் திடீரென பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
கள்ளக்குறிச்சி:
பகண்டை கூட்டு ரோடு அருகேகாரனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது35). இவரது மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில் குடும்பத்தினருடன் பகண்டை கூட்டுரோடு அடுத்த அரியலூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவரது உடல் திடீரென பாதிக்கப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக செந்தில் தனது மனைவி அருள்மணியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த செந்தில் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று இரவில் ஜெயமுருகன் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார்.
- இதில் பலத்த காயம் அடைந்த சுதந்திரகனியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெயமுருகன் ( வயது 74). தொழிலாளி. இவரது மனைவி சுதந்திரகனி (60). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தகராறு
இதில் ஒரு மகனை தவிர அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகிறார்கள். ஜெய முருகனுக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவில் ஜெயமுருகன் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனை சுதந்திரகனி கண்டித்துள்ளார்.
அரிவாள் வெட்டு
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெயமுருகன் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சுதந்திரகனியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே இதுதொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தனர். பின்னர் அவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
பரிதாப சாவு
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதந்திரகனி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜன் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த ஒன்றரை ஆண்டு முன் திருமணம் செய்து கொண்டனர்.
- மனைவியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார்.
திருப்பூர் :
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(30). இவர் திருப்பூர், சிறுபூலுவபட்டி பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருடன் உறவினர் பெண் சுபா, (27) என்பவர் வேலை செய்தார். இருவரும் பழகி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சில நாட்கள் முன், தமிழ்ச்செல்வன் மனைவியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார். இரண்டு நாட்களாக தேடிப் பார்த்த சுபா கணவனை காணாமல் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் புருஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தமிழ்ச்செல்வன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
- வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
மணப்பாறை, சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(48).இவர் திருப்பூர் கோல்டன்நகரில் மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியால் சாந்தியை குத்திக் காயப்படுத்தினார்.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜாமினில் வெளி வந்த கிருஷ்ணமூர்த்தி, 2012ம் ஆண்டுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர்.
இதையறிந்த கிருஷ்ணமூ ர்த்தி, திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டார்.
- பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் சத்தியா (வயது 27).இவரது கணவர் காளிராஜ் (30). இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சத்தியாவை கணவர் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து சத்தியா பலமுறை போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் உறவினர்கள் சமாதானப்படுத்தி சேர்த்துவைத்துள்ளனர். இந்த நிலையில் கணவர் மீண்டும் தகராறு செய்ததால் சத்தியா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு வந்த காளிராஜ், சத்தியாவை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சத்தியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார்.
- பல இடங்களில் தேடியுள்ளனர்.
பல்லடம் :
கோவை மாவட்டம், சூலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இவரது மனைவி கவிதா ( 29 ). இவர்களது மகன்கள் ரத்தீஷ்( 8 ), மிஜின்( 6 ) இந்த நிலையில் கடந்த 29- ந்தேதி பொங்கலூர் அருகே உள்ள வேலம்பட்டியில் வசிக்கும் கவிதாவின் அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கவிதா மற்றும் அவரது 2 மகன்களுடன் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவர்கள் பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வேலம்பட்டி வந்த பெருமாள் இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
- கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராம் குழிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (65) விவசாயி, இந்த நிலையில் இவரது வீடு அருகே பக்கத்து வீட்டில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவா, லட்சுமி என்ற தம்பதிகள் கடந்த ஆறு மாத காலமாக குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 16 ந்தேதி அன்று அவசரமாக கிருஷ்ணகிரி செல்ல வேண்டி இருப்பதாகவும், செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், அவர்களிடம் உள்ள ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டியை வைத்துக்கொண்டு, ரூ. 2 லட்சம் பணம் தருமாறு சின்னச்சாமியை அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பேச்சை நம்பி அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ரூ 1.40 லட்சம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்டு, ஊருக்குச் சென்று விட்டு ஒரு வார காலத்தில் திரும்பி வருவதாக சென்ற அவர்கள், கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை. இதையடுத்து, சின்னச்சாமி அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்ன வந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை நகைக்கடைக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசிய உலோகம் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை ஏமாற்றியது குறித்து காமநாயக்கன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கக் கட்டி என மோசடி செய்த அந்த தம்பதிகளை வீசி தேடி வருகின்றனர்.
- இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை.
- எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ), மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக மூழ்கி இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற நித்யா அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை அவர் வேலை பார்க்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் வீடு உன தேடி வந்தார். ஆனால் நித்யா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து புஷ்பராஜூக்கு நள்ளிரவில் அழைப்பு வந்தது. உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,
மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் நண்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.
- தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.
- அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு :
'காதல்' என்ற வார்த்தையை வர்ணிக்க முடியாது என்பார்கள் கவிஞர்கள். அதுபோல் காதலை மையமாக வைத்து வந்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன. கவிஞர்கள் பெருமாலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டான காதலை மையப்படுத்தியே கவிதைகள், பாடல்கள் எழுதுவார்கள். அக்காலத்தில் காதல் ஒரு ஊரிலோ அல்லது கிராமத்திலோ தான் இருக்கும்.
ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசி பழகி பின்னர் திருமணம் பந்தத்தில் இணைவார்கள். பல காதல்கள் பெற்றோர் எதிர்ப்பு, சாதி, மதம், அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிந்ததும் உண்டு. அது இன்றளவும் நடந்து வருகிறது. ஆனால் தற்போது காதல் கடல் கடந்து கணினி, செல்போன் வாயிலாக காற்றில் பறந்து காதலர்களிடையே இணைப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.
காதல் என்பது பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம், வேலையில்லாதவர்கள் செய்யும் வேலை என்று கூறி பலர் பலவிதங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதையும் மீறி காதலர்கள் தங்களது காதலை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல் ஏராளமான காதல் ஜோடிகள் தங்கள் காதலில் மட்டுமல்லாது பல எதிர்ப்புகளை மீறி திருமணம் புரிந்து வாழ்விலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவர் மீதான அதீத காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வினோத செயலை செய்திருக்கிறார்.
அதாவது அந்த இளம்பெண் தனது கணவரின் பெயரான 'சதீஷ்' என்ற பெயரை தன்னுடைய நெற்றியில் பச்சை குத்திக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார்.
அந்த புகப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து 2.68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். சிலர் 'இதுதான் உண்மையான காதல்' என்றும், சிலர் 'இது ஓவர் ஆக்டிங்' என்றும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். ஆனால் அந்த கருத்துகளுக்கு இளம்பெண் பதில் ஏதும் கூறவில்லை. தனது கணவர் மீதான அதீத அன்பையும், காதலையும் வெளிப்படுத்தவே தான் இதுபோன்று செய்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
- கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் 15 வேலம்பா ளையம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளது.
இந்த நிலையில் சந்தோஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சந்தோஷ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதற்கிடையே வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்த போது வெண்ணிலா கழுத்தின் துணிகள் சுற்றிய நிலையில் பிணமாக இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் கதறி அழுதனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குடிபோதையில் இருந்த சந்தோஷ் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும். தான்தான் மின்விசிறியில் இருந்து உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினார். போலீசார் வெண்ணிலாவின் உடலை சோதனை செய்து பார்த்தபோது தற்கொலை செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.
எனவே சந்தோஷ் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் 15 வேலம்பாளையம் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.