என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband and wife"

    • இசக்கியப்பனுக்கும், கொம்பையாவிற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், பலவேசக்கண்ணும் சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி இசக்கியப்பன் (வயது67). இவருக்கும், இவரது தம்பி கொம்பையாவிற்கும் (60) இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இசக்கியப்பன் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொம்பையாவிற்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், அவரது மகன் பலவேசக்கண்ணும் (33) சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த இசக்கியப்பனின் மனைவி அம்மா பொன்னுவையும் (60) தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த இசக்கியப்பன், அம்மாபொன்னு ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொம்பையா, அவரது மகன் பலவேசக்கண்ணு ஆகியோரை கைது செய்தனர்.

    • பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா படுகாயம் அடைந்தனர்.

    புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் பொன்னு ச்சாமி (வயது 74). இவரது மனைவி சரோஜா (70).

    இவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் ேரயான் நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த மல்லியம்பட்டிக்கு உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்து கொண்டி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பு.புளியம்ட்டி சத்திய மங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே வந்த போது பின்னால் வந்த ஒரு மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுச்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    மேலும் சரோஜாவுக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்து விட்டார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த கணவன்- மனைவி ஆகிய 2 பேர் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கணவன்-மனைவிக்கு அடி உதை விழுந்தது.
    • ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்்ந்தவர் சக்திவேல். இவரது உறவினர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த அய்யப்பன். இவருக்கு ராஜபாளை யத்தை சேர்ந்த கருப்பையா என்பவரிடம் இருந்து சக்திவேல் ரூ.5லட்சம் கடன் வாங்கி கொடுத்தார்.

    ஆனால் அய்யப்பன் அசல் மற்றும் வட்டியை கொடுக்கவில்லை. இதனால் கருப்பையா, அய்யப்பன் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கேட்டு சக்தி வேலுக்கு நெருக்கடி கொடு த்தார். இதைத் தொடர்ந்து சக்திவேலுக்கும், அய்யப்ப னுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் அர்ஜூன், மாரிமுத்து, ரஞ்சித் மேலும் சிலர் சக்திவேல் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரத்தில் அய்யப்பன் மற்றும் உடன் வந்தவர்கள் சக்திவேலை அடித்து உதைத்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவி சாந்தியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் அவர்களை விலக்கி விட முயன்ற உறவுக்கார பெண் ராமு, கார்த்திக் ஆகியோருக்கும் அடி உதை விழுந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ராஜபா ளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராமு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை, சன்னதி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72).

    இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

    இவரது மனைவி தமிழரசி (58).

    இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், தனபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தமிழரசியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புரிதல் இருந்தால் தான் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.
    • புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும்.

    கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக...

    மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் இந்த மனுஷனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். தன்னுடைய கணவனுக்கு தன்னுடனான வாழ்க்கை அலுப்பு தட்டி இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனை சோதிக்க நினைத்தாள் மனைவி. ஒருவேளை தான் விலகிப்போய்விட்டால் கணவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டாள்.

    எனவே அன்று தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள்.

    கணவன் வழக்கம் போல வீடு திரும்பினான். மேஜையின் மீது இருந்த குறிப்பில் உன்னுடனான வாழ்க்கை சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது. கணவன் குறிப்பை படித்துவிட்டு குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கிவிட்டு தன் செல்போனை எடுத்து பேசினான்.

    அதில் பேசும்போது, கடைசியாக அவள் போய்விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராக இரு என்று சொல்லிக்கொண்டே கதவை பூட்டிவிட்டு வெளியேறினான்.

    உடனே அவனது மனைவி அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தவள், அவர் நம்மை தேடவில்லை, கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்று எண்ணிக்கொண்டு கோபத்துடன் குறிப்பின் பின்னால் அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அந்த குறிப்பை எடுத்து பார்த்தால்.

    அதில், ஏ! பைத்தியம் நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கிறதை நான் பார்த்துவிட்டேன். எனக்கு பசிக்குது, கடைக்கு போய் பிரட் வாங்கி வருகிறேன். நீ எனக்கு பிரட் ஆம்லெட் போட்டு கொடு சாப்பிடுறேன். உனக்கு ஏதாவது வேண்டும்னா, எனக்கு போன் பண்ணு. இந்த உலகத்தில் மற்றவர்களை விட நான் உன்னை தான் அதிகமாக நேசிக்கிறேன். என் அன்பு முத்தங்கள்! என்று எழுதி இருந்தான். இதைக்கண்டதும் மனைவிக்கும் ஒரே ஆனந்தம்.

    கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. அந்த பராமரிப்பு பற்றி கணவனும் மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரசியமிக்க துணையாக இருக்கலாம்.

    • இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை விவாதித்துவிடுவது நல்லது.
    • பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.

    திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மணமக்கள் இருவரும் இல்லற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி திறந்த மனதுடன், நேர்மையான, அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்துவது முக்கியமானது.

    அத்தகைய விவாதம் திருமண வாழ்க்கையை தெளிவான கண்ணோட்டத்துடன் கட்டமைக்க உதவிடும். தடுமாற்றமோ, கருத்துவேறுபாடோ இன்றி சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழிவகை செய்துவிடும். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்களை பட்டியலிடுகிறோம்.


    திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு மட்டுமல்ல திருமணத்தை நடத்தும் போதும் நிதி விஷயம் பற்றி இருவரும் விவாதிப்பது நல்லது. ஏனெனில் விமரிசையாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி செலவு செய்தால், பின்பு திருமணத்திற்கு பிறகு அந்த கடனை அடைப்பதற்கு இருவரும்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

    அதனால் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்வது? இருவரும் திருமணத்திற்கு முன்பு அன்றாடம் செய்யும் செலவுகள் என்னென்ன? ஏற்கனவே கடன் இருந்தால் அதனை எப்படி திருப்பி செலுத்துவது உள்ளிட்ட குடும்ப வரவு செலவு திட்டங்களை கையாள்வது பற்றி விவாதிப்பது நல்லது.

    சேமிப்பை பற்றி விவாதிக்கும்போது ஓய்வு கால சேமிப்பு பற்றிய திட்டமிடலும் இடம் பெறுவது இறுதி கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க உதவிடும்.


    குழந்தை

    குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் திருமணத்திற்கு முன்னரே விவாதித்துவிடுவது நல்லது. ஏனெனில் இருவரில் ஒருவர் குழந்தை பேற்றை தள்ளிப்போட விரும்பலாம். அப்படி விரும்பினால் அதற்கான காரணத்தை விளக்குவது அவசியமானது.

    ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண வயதை எட்டிய பிறகும் காலதாமதமாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி இருக்கையில் குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.

    எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? குழந்தைகளை பராமரிப்பது எப்படி? இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தை வளர்ப்புக்கு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள், குழந்தைக்கான கல்விச்செலவு உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொண்டு விவாதிப்பது சிறப்பானது.

    வேலை-வாழ்க்கை சமநிலை

    திருமணத்திற்கு முன்பு துணை வேலைக்கு சென்று வந்திருக்கலாம். திருமணத்திற்கு பிறகும் வேலையை தொடர விருப்பப்படலாம். அவரின் கருத்துக்களை கேட்டறிந்து வேலை நேரம், வேலைக்கு சென்று வர ஆகும் பயண நேரம், துணையின் தனிப்பட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்து கொள்வது நல்லது.

    வேலை, குடும்பத்தை நிர்வகிப்பதற்கு இது உதவும். மேலும் அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முன்வருவது துணை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். திருமண பந்தத்தை வலுவடையச் செய்யும்.


    குடும்ப அமைப்பு

    திருமணத்திற்கு முன்பு வரை மணமகனோ, மணமகளோ இருவரும் பெற்றோரின் ஆதரவில்தான் வசித்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு அடியெடுத்து வைக்கும் பெண் அங்கு புதிய உறவுகளுடன் பழகி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

    திருமணத்திற்கு பிறகு மணமகன் பெற்றோருடன் சேர்ந்து வசிப்பதற்கு விரும்பலாம். மணப்பெண்ணோ தனியே சுதந்திரமாக வாழ விரும்பலாம். அதனால் இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை திருமணத்திற்கு முன்பே விவாதித்துவிடுவது நல்லது.

    தனிக்குடித்தனத்தை விரும்பினால் அதுபற்றி மணமகன் முன்கூட்டியே பெற்றோரிடம் விளக்கி கூறிவிடுவது நல்லது. அது திருமணத்திற்கு பிறகு தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படுவதை தடுக்க உதவிடும்.

    குடும்பத்தின் பங்கு

    இருவருமே தங்கள் திருமண வாழ்க்கையில் அவரவர் பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதியே செயல்படுவார்கள் என்றாலும் தேவையில்லாமல் தலையீடு செய்வது பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.


    கூடுமானவரை அவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதுபற்றி இருவரும் விவாதித்து தெளிவான முடிவை எடுத்துவிட வேண்டும். முக்கியமான விஷயங்களில் அவர்களிடம் கருத்து கேட்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா விஷயத்திலும் தலையீடு செய்வதற்கு அனுமதிக்காமல் இருப்பது நல்லது.

    ஆரோக்கியம்

    இருவருக்கும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள், நாள்பட்ட நோய்கள் அல்லது மரபணு சார்ந்த நோய் தாக்கங்கள் இருந்தால் அதுபற்றி விவாதித்துவிடுவது நல்லது. அதில் இருந்து மீண்டு வரும் வழிமுறைகள், நோய்களை முற்றிலும் குணமாக்கும் தன்மை பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.

    சச்சரவுகள்

    வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் புதுமண தம்பதியர்களுக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை திருமணத்திற்கு முன்னரே கண்டறிந்துவிடுவது சாலச்சிறந்தது. அதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் தத்தம் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    இறை நம்பிக்கை

    இறை நம்பிக்கை விஷயத்தில் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் நல்லது. ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக துணை இருந்தால் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படுவது அவசியமானது. அது திருமண பந்தத்தை வலுவுடன் வைத்திருக்க துணைபுரியும்.


    நட்பு

    குடும்பம், உறவுகளை பற்றி தெரிந்து கொள்வது போலவே இருவரும் அவரவர் நெருங்கிய நண்பர்களை பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த நட்பு எந்த அளவிற்கு ஆழமானது என்பதையும் விளக்கி விட வேண்டும். திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு வட்டத்தை தொடரலாமா? எந்த அளவுக்கு தொடர்பில் வைத்திருப்பது என்பதையெல்லாம் முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.

    இலக்கு

    ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள் இருக்கும். லட்சியங்கள், கனவுகள் இருக்கும். அது பற்றி பேசி தெரிந்து கொள்வதும், அதனை நிறைவேற்றுவதற்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதும் இருவருக்குமிடையேயான திருமண பந்தத்தை இன்னும் வலுமையாக்கும்.

    • திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.
    • இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (42). இவர் தனது மனைவி பாப்பா என்பவருடன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுத்த வந்தார்.

    பின்னர் திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்றினர்.

    பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுந்தரம் கூறியதாவது:-

    கொங்கர் பாளையம் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் எனக்கு 82 சென்ட் நிலம் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 2008 -ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் எனது மனைவி வாணிபுத்தூரை சேர்ந்த ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார்.

    அதற்கு என் மனைவி எனது பெயரில் உள்ள நில பத்திரத்தை அந்த நபரிடம் கொடுத்து கைரேகை வைத்து கடன் பெற்றார். இந்த 60 ஆயிரம் கடனுக்காக நாங்கள் இதுவரை 2 லட்சத்து 94 ஆயிரம் வட்டி கொடுத்து விட்டோம். ஆனால் அவர் எங்களிடம் வாங்கிய பாத்திரத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

    தற்போது திடீரென அந்த நபர் எங்கள் நிலத்தை வேறு ஒருவர் பெயரில் கிரையம் செய்து விற்று விட்டதாக கூறுகிறார். இது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் எங்களை திட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

    அந்த இடத்தை வாங்கியவரும் எங்களை மிரட்ட தொடங்கினார். எங்களிடம் மோதினால் ஊரை விட்டு பஞ்சாயத்து மூலமாக தீர்மானம் போட்டு ஒதுக்கி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

    இன்னும் ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே எங்கள் நிலத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இதுதொடர்பான மனுவையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.

    தீ குளிக்க முயன்றதை அடுத்து சுந்தரம் மற்றும் அவரது மனைவியை சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு, ஆக. 10-

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே செயல்பட்டு வரும் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே வேம்பத்தி சிந்தகவுண்டம்பாளையம் ராம்தாஸ் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (45). இவரது மனைவி பழனியம்மாள்.

    தம்பதியினர் 2 பேரும் சம்பவத்தன்று பவானி புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரித்தபோது தம்பதியினர் வைத்திருந்த பையில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் கஞ்சாவை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சூரம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி விற்ற 1 பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    • கார்-பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியானார்கள்,2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
    • விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சென்னை அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 37). இவர் அதே பகுதியில் உள்ள பிரபல மோட்டார் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிதாஷா (32). இவர்களுக்கு ஜெனிதாஸ்ரீ (9) என்ற மகளும் பிரணவ் ஆதித்யா (4) என்ற மகளும் உள்ளனர்.மனோஜின் சொந்த ஊர் நெல்லை ஆகும்.

    இன்று அதிகாலை மனோஜ் தனது மனைவி, குழந்தைகளுடன் காரில் நெல்லைக்கு புறப்பட்டார். காரை மனோஜ் ஓட்டினார்.

    இன்று மதியம் விருதுநகர் 4 வழிச்சாலையில் கார் வந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் வந்தபோது சாத்தூரில் இருந்து விருதுநகருக்கு பயணிகளை ஏற்றி வந்த பஸ் 4 வழிச்சாலையில் திடீரென திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த மனோஜ் ஓட்டி வந்த கார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த மனோஜ், நிதாஷா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஜெனிதாஸ்ரீ, பிரணவ் ஆதித்யா படுகாயம் அடைந்தனர். காருக்குள் சிக்கியிருந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வந்தால் அது உறவை பலப்படுத்தாது. அது கண்டிப்பாக உறவை பலவீனப்படுத்திவிடும் என்பதுதான் உண்மை.
    கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டை என்றால் அது சரியாகிவிடும். பெரிய சண்டைகள் அடிக்கடி வந்தால் அது உறவை பலப்படுத்தாது. பாதிக்கவே செய்யும்.  கணவன் மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்தும் என்று சிலர் சொல்கிறார்கள் மனதில் உள்ளவற்றை சண்டையின் மூலம் கொட்டி தீர்த்தால் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்பது அவர்களின் வாதம். ஆனால் சண்டை என்பது அடிக்கடி வந்தால் அது கண்டிப்பாக உறவை பலவீனப்படுத்திவிடும் என்பதுதான் உண்மை.

    என்னைப் பொறுத்தவரை கணவன் மனைவி இடையே சண்டையே வரக்கூடாது. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? எளிது கணவன் மனைவிக்கு பிடித்தவைகளை மட்டுமே செய்ய வேண்டும். மனைவி கணவனுக்கு பிடித்தவைகளை மட்டுமே செய்ய வேண்டும். இதற்கு இருவரும் பிடித்தவை பிடிக்காதவை எவை என தெரிந்திருக்கவேண்டும். பிடித்தவற்றை செய்கிறீர்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் பிடிக்காதவற்றை செய்யவேக்கூடாது. அப்படி இருந்தால் நிச்சயமாக கணவன் மனைவி உறவை பலப்படுத்தும்.

    இது படிப்பதற்கு மிக எளிதாகத் தோன்றினாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனால் இருவரும் மனசு வைத்தால் மிக எளிமையாக இவற்றை நடைமுறைப்படுத்தலாம். ஒரு வெற்றி அல்லது சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்றால் நாம் சிறிது உழைக்க வேண்டும் அல்லவா? நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் உயிருக்கு உயிராய் வாழவேண்டும் என்று நினைத்தால் அதற்காக சிறிது கஷ்டப்படதான் வேண்டும்.

    இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் எதையும் விட்டுக் கொடுக்காமல் தனக்கு தான் தன்துணை எல்லா விஷயங்களையும் விட்டுத்தர வேண்டும் என்று நினைப்பதுதான். அப்படி இல்லாமல் இருவரும் விட்டுக் கொடுத்து மட்டும் வாழ பழகிக்கொண்டால் இல்லர வாழ்க்கை சிறப்பாக இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்த்துவந்தால் எப்படிப்பட்ட துன்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வந்தாலும் அவற்றை நீங்கள் எளிதாக எதிர்கொள்ளமுடியும். எல்லா நிலையிலும் நீங்கள் சந்தோஷமாக வாழமுடியும்.
    தீர்க்கமுடியாத பிரச்சனை என்றால் அது மாமியார் மருமகள் சண்டைதான். முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியில் எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    வெவ்வேறுவிதமான பழக்கவழக்கங்களில் வளர்ந்த இரண்டு நபர் திருமணத்தில் இணையும்போது ஏற்படும் அனுசரணை இல்லாத நிலைதான் ஒட்டுமொத்த குடும்பத்திலும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. முறையற்ற தொடர்புகள், பொருளாதாரச் சிக்கல் போன்றவையும் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

    குறிப்பிட்ட கலாசாரம், பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வளர்ந்த பெண்கள் திருமணமாகி வேறொரு கலாசாரத்துக்குள் செல்லும்போது அதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றனர். அந்தத் தடுமாற்றம் அவர்களது கணவன்மாரிடம் நேரடியாக வெளிப்படுகிறது. பெற்றோர் மனைவி இருவரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு புது மாப்பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது.

    திருமணமான பின்பு கணவன் மனைவிக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. திருமணத்துக்கு முன்புவரை சாப்பாடு ஊட்டிவிட்டு, தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு... என மகனை அரவணைத்த அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும், திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவிக்குச் செய்யும் அதீத பணிவிடைகள் வலியை ஏற்படுத்தும். இதை ஆண்கள் உணர வேண்டும்.

    மாமியார் என்பவர் குனியக் குனியக் கொட்டுபவர், மகனை தன் கையில் வைத்துக்கொள்வார்' என்று மகள்களுக்குப் பல அம்மாக்கள் 'அட்வைஸ்' பண்ணிப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதுண்டு. அதே மனப்பான்மையில் புகுந்தவீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு மாமியார் சாந்த சொரூபியாக இருந்தாலும் பத்ரகாளியாகவே தெரிவார். அதனால் திருமணமான புதிதில் மனைவியிடம் அம்மாவைப் பற்றிய மனத்தாங்கல்களை ஆண்கள் கூறக்கூடாது.

    'மாமியார் என்னும் கேரக்டரையே எனக்குப் பிடிக்காது' என்றுகூறும் மனைவிகளுக்கு, 'உன்னுடைய அம்மாவும் மாமியார் ஸ்தானத்தில் இருப்பவர்தான்' என்பதைக் கணவன் நாசூக்காக எடுத்துக்கூற வேண்டும். 'உன்னை எப்படி உன் அம்மா அப்பா செல்லமாக வளர்த்தார்களோ... அதே போலத்தான் என்னையும் என் அம்மா, அப்பா வளர்த்தார்கள்' என்று தங்கள் பெற்றோரைப் பற்றி மனைவியிடம் கூறவேண்டும்.

    தான் நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் தனிக்குடித்தனம் செல்ல அடம்பிடிக்கும் மனைவியிடம், 'என் அம்மா, அப்பா இல்லாம நான் இல்ல. அவங்க என்னை அம்போன்னு விட்டிருந்தா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்ட' என்று சாதுவாக சொன்னால் போதும், மனைவி அப்படியே 'இம்ப்ரஸ்' ஆகிவிடுவார்.

    'உன் மனைவிக்கு நான் இருக்கிறது பிடிக்கவில்லையா' என்று கேட்கும் அம்மாக்களிடம், 'அப்படியில்லம்மா, அவக்கிட்ட பேசி புரிய வைக்கலாம், நான் பேசி சரி பண்றேன்' என்று நிதானமாக எடுத்துக் கூறினால் எந்த அம்மாவும் ஏற்றுக் கொள்வார்.

    திருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் எப்படி இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அம்மா அப்பாவிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டியது தலையாய கடமை. அம்மாவிடமும் சரி, மனைவியிடமும் சரி, நடந்து முடிந்த எதிர்மறையான நிகழ்வுகளைக் கூறி எந்த இடத்திலும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

    உலகத்திலேயே ஒருவருக்குத் துரோகம் நினைக்காதது அம்மா, அப்பா மட்டும்தான் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. உங்களை நம்பி வரும் மனைவியையும் ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள்.
    கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுக்கியது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியில் வசித்தவர் மணி (வயது 81). நெசவு தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (71). மகன் கார்த்திகேயன் (45). இருவரும் நெசவு தொழிலாளிகள்.

    இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மணி நேற்றுமுன்தினம் இறந்தார். நேற்று மாலை மணி உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாடையில் தூக்கி வைத்தனர். பின்னர் இறுதி ஊர்வலம் தாரை தப்பட்டையுடன் புறப்பட தயாரான போது மிகவும் துக்கத்தில் இருந்த லட்சுமி, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, லட்சுமி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி லட்சுமி உயிரை விட்டது, இறுதி சடங்கில் வந்திருந்த பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுக்கியது.
    ×