என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian team"

    • டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    • 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி, தனிப்பட்ட குடும்ப விஷயம் காரணமாக தாயகம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீராட்கோலி, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார். அவர் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 15-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற கோலி, பயிற்சிகளை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

    புதுடெல்லி:

    ஆசியான் கோப்பை கால்பந்து போட்டி ஜனவரி 12-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை கத்தாரில் நடக்கிறது.

    இதில் 24 நாடுகள் பங்கேற்கிறார்கள். அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.

    'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் கத்தார், சீனா, தஜிகிஸ்தான், லெபனான் அணிகளும், 'சி' பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு எமி ரேட்ஸ், ஆங்காங், பாலஸ் தீன், 'டி' பிரிவில் ஜப்பான், இந்தோனேசியா, ஈராக், வியட்னாம், 'இ' பிரிவில் தென்கொரியா, மலேசியா, ஜோர்டான், பக்ரைன், 'எப்' பிரிவில் சவுதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறும். கத்தாரில் உள்ள 5 நகரங்களில் 9 மைதானங்களில் இந்த போட்டி நடை பெறுகிறது.

    ஆசியான் கோப்பை கால் பந்து போட்டிகான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

    அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்டுள்ள சஹல் அப்துல் சமத் அணியோடு இணைந்து உள்ளார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    அமரிந்தர் சிங், குர்பிரீத் சிங் சாந்து, விஷால் சைத் (கோல் கீப்பர்கள்), ஆகாஸ் மிஸ்ரா, லால் சுங்னுங்கா, மெஹதாப் சிங், நிதில் புஜாரி, பிரித்தம் கோட்டல், ராகுல் பெகே, சந்தேஷ்ஜிங் கன், சுபாஷிஸ் போஸ் (பின்களம்), அணிருத் தாபா, பிராண் டன் பெர்னாண்டஸ், தீபக் தாங்ரி, லாலெங் மாவியா ரால்டே, லிஸ்டன் கொலாகோ, நாவ்ரெம் மகேஷ் சிங், சஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங், உதாந்த் சிங் (நடுகளம்), இஷான் பண்டிதா சாங்கே, மன்வீர் சிங், ராகுல் கனோலி பிரவீன், சுனில் சேத்ரி, விக்ரம் பிரதாப்சிங் (முன் களம்).

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 13-ந்தேதி எதிர் கொள்கிறது. உஸ்பெகிஸ்தானுடன் 18-ந்தேதியும், சிரியாவுடன் 23-ந்தேதியும் மோதுகிறது.

    • டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நவிமும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

    இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன், ரிச்சா கோஷ் 23 ரன், வஸ்த்ரகர் 9 ரன், அமன்ஜோத் கவுர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாட தொடங்கியது.

    இதில், ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.

    • இந்திய அணி, 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
    • அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.

    தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடந்த ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

    இந்தியஅணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியின் வீரர்களை எண்ணி நான் பெருமை அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தேவையற்ற சில ஷாட்களை இறுதிப் போட்டியில் ஆடினோம். இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி திட்டங்களை வகுத்து இருந்தோம்.

    ஆனால் எங்களால் சரியான முறையில் செயல்படுத்த முடியவில்லை. இந்ததொடர் முழுவதும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டு உள்ளோம்.

    அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    நியூசிலாந்து மட்டுமே இதுவரை உலக கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. இந்திய அணியில் இடம் பெறப் போகும் 15 வீரர்கள் யார்-யார்? என்று நாள்தோறும் முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.

    2-வது விக்கெட் கீப்பர் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2-வது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், உள்ளனர். இதில் சாம்சனுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு அறிவிக்கும். இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 15 வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான் அல்லது முகமது சிராஜ்.

    கே.எல்.ராகுல், யசுவேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா ஆகியோரும் தேர்வுக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும், 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    • ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.
    • ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மகளிர் அணியில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு இடம்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

    ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.

    இதற்காக, பஹாமாஸில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி தகுதி பெற்றுள்ளனர்.

    ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மகளிர் அணியில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசனும் இடம் பெற்றுள்ளார்.

    • இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது சவாலானதாக மாறியுள்ளது.
    • பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) சவாலானதாக மாறியுள்ளது. விண்ணப்பங்களுக்கான காலக்கெடு வரும் மே 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த பதவிக்கு கௌதம் கம்பீர் (கேகேஆர் அணியின் பயிற்சியாளர்), ஸ்டீபன் ஃப்ளெமிங் (சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர்), ஜஸ்டின் லாங்கர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர்) மற்றும் ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ( மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவர்) ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

    அனைவரும் அதிக லாபம் அளிக்கும் ஐபிஎல் தொடர் சம்பந்தமான வேலைகளில் பிசியாக உள்ளதால் அடுத்த 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் அணியுடன் பயணிக்கக்கூடிய வலுவான ஒரு பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது.

    ஐபிஎல் வேலையில் ஈடுபடாதவர் தற்போதைய என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண் மட்டுமே. லக்ஷ்மண் பயிற்சியாளர் பணியை ஏற்க தயக்கம் காட்டிவருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுடன் பேசவும், அவர்கள் வேலையில் ஆர்வமாக உள்ளனரா எனச் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

     

    பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் மூத்த வீரர்களும் கம்பீரும் சமீப காலமாக நன்றாகப் பழகி வருவதாகத் தெரிகிறது. கேகேஆர் அணியுடன் அகமதாபாத்தில் உள்ள கம்பீருடன் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கூறப்படுகிறது. கடைசியாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை 'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது.
    • பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ம் தேதியும், அமெரிக்காவுடன் 12-ம் தேதியும், கனடாவுடன் 15-ம் தேதியும் மோதுகிறது.

    உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தது. இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கி உள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்திய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதுகிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.
    • தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இந்திய அணியின் பாயிற்சியாளர்காக வர முடியாதா? என்ற கேள்வி சிலருக்கு எழக் கூடும்.

    இந்திய அணியின் பயிற்சயாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் ஐசிசி 2024 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    பயிற்சியாளர் பதவிக்குக் கவுதம் காம்பீர், விவிஎஸ். லக்ஷ்மன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஐபிஎல் 2023 தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் கேகேஆர் இணை உரிமையாளர் ஷாருக் கான், காம்பீரை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் காம்பீர், இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.

    இதற்கிடையே தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இந்திய அணியின் பாயிற்சியாளர்காக வர முடியாதா? என்ற கேள்வி சிலருக்கு எழக் கூடும். பி.சி.சி.ஐ விதிகளின்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ஒருவரே இந்திய பயிற்சியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் டோனி தொடர்கிறார்.

     

    நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடருடன் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டோனியின் தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவர் தற்போதும் சிஎஸ்கே வீராகவே உள்ளதால் பயிற்சியாளர் பதவிக்கு டோனி தகுதி பெற்றவர் இல்லை.

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதிவுக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை போலி விண்ணப்பங்களாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரில் விண்ணப்பங்கள் வந்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்து இறுதிக் கட்ட தேர்வர்களின் பட்டியலை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் கம்பீர் உரையாடினார்.
    • அப்போது அவரிடம் இந்திய அணி பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார்.

    அபுதாபி:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் உரையாடினார். அப்போது கம்பீரிடம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார். அப்போது கம்பீர் சிரித்தபடி பதில் கூறியதாவது:

    நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.

    உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதைவிட பெரியதாக எப்படி இருக்க முடியும்?

    இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவது நான் அல்ல, 140 கோடி இந்தியர்கள்தான். அவர்கள் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள்.

    எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் விளையாடி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். மிக முக்கியமான விஷயம் அச்சமின்றி இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகங்கள் சித்தரிப்புடன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
    • ஆங்கிலேயர்களுடன் நம் நாட்டுக்காரர்கள் கிரிக்கெட் விளையாடி வென்று வரி விலக்கு பெறுவது தொடர்பான திரைக்கதையை கொண்டிருக்கும்.

    'லகான்' பட போஸ்டரை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி அமைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகங்கள் இடம் பெறுமாறு அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அமெரிக்காவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பை எட்டி உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

    இந்தநிலையில் அமீர்கான் நடிப்பில் வெளியான பிரபல திரைப்படமான 'லகான்' படத்தின் போஸ்டர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்டு ரோகித் சர்மா, கோலி, பாண்டியா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகங்கள் சித்தரிப்புடன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை வலைத்தளவாசிகள் கொண்டாடி வருகிறார்கள்.


    2001-ம் ஆண்டு வெளியான 'லகான்', ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடப்பதுபோலவும் ஆங்கிலேயர்களுடன் நம் நாட்டுக்காரர்கள் கிரிக்கெட் விளையாடி வென்று வரி விலக்கு பெறுவது தொடர்பான திரைக்கதையை கொண்டிருக்கும்.


    • பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
    • கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது.

    லாடர்ஹில்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

    அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை கனடாவுடன் மோதுகிறது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடக்கிறது.

    இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி பேட்டிங்கில் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பார்முக்கு திரும்ப வேண்டியது மிகவும் முக்கியம்.

    ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று ஏறக்குறைய முடிந்து விட்டது. அந்த அணியில் ஆரோன் ஜான்சன், கிர்ன், கார்டன், பர்கத்சிங், கலீம் சானா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    லாடர்ஹில்லில் மழை பெய்து வருகிறது. இதனால் இப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே இந்திய அணியுடன் மாற்று வீரர்களாக சென்ற சுப்மன்கில், அவேஷ்கான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் மற்ற மாற்று வீரர்களான ரிங்குசிங், கலீல் அகமது ஆகியோர் அணியுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கனடாவுக்கு எதிராக நாளைய போட்டி முடிந்தவுடன் சுப்மன்கில், அவேஷ்கான், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்புகிறார்கள்.

    ×