என் மலர்
நீங்கள் தேடியது "Ishan Kishan"
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஐதராபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் 3 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது.
4வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன்-துருவ் ஜுரல் ஜோடி பொறுப்புடன் ஆடி 111 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் அரை சதம் கடந்தனர். துருவ் ஜுரல் 70 ரன்னும், சஞ்சு சாம்சன் 66 ரன்னும் எடுத்தனர்.
6வது விக்கெட்டுக்கு ஹெட்மயர்-ஷ்உபம் துபே ஜோடி 80 ரன்களை சேர்த்துப் போராடியது. ஹெட்மயர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
- வங்காளதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
- இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார்.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
- முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது..
- இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். விராட் கோலி சதமடித்தார்.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.
டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடினார். கோலி சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது.
- அடுத்து ஆடிய வங்காளதேசம் 182 ரன்களில் ஆல் அவுட்டானது.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய விராட் கோலி சதமடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது, எபாட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும்,
மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
- ஒருநாள் போட்டியில் கிரிஸ் கெயில் சாதனையை முறியடித்தார் இஷான் கிஷன்.
- அதிவேக 150 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
வங்காளதேசம் அணிக்கு எதிராக சிட்டாகாங்கில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்தார். இதில் 126 பந்துகளில் அவர் இரட்டை சதம் அடித்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக பதிவானது.
இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயில் ஒரு நாள் போட்டியில் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை கிஷன் முறியடித்துள்ளார். மேலும் கடந்த 2011 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 112 பந்துகளில் இந்திய வீரர் சேவாக் 150 ரன்கள் அடித்திருந்தார்.

இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக 150 ரன்கள் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். தற்போது அதை முறிடித்துள்ள கிஷன், நேற்றைய போட்டியில் 103 பந்துகளை எதிர்கொண்டு 150 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஷான் கிஷன் கூறியுள்ளதாவது:
இந்திய அணியில் பெரிய வீரர்கள் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் விளையாடுகின்றனர். அதனால் இந்த நிலையில்தான் நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. உங்கள் திறமையை வெளிப்படுத்த நீங்கள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே இடம் பெறுவீர்கள்,
ஏனெனில் இது ஒரு வாய்ப்பு, நீங்கள் பெரிய ஸ்கோரைப் பெற வேண்டும், ஒரு பெரிய வீரர் இப்படித்தான் உருவாகிறார், அவர் தனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். அடுத்த போட்டியில் விளையாடுவேனா இல்லையா என்பது குறித்து நான் யோசிப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாடுவதே எனது வேலை. நான் அதிகம் பேசுவதில்லை, எனது பேட் தான் பேச வேண்டும் என நினைக்கிறேன்.

நான் விராட் கோலி அல்லது ஹர்திக் பாண்ட்யாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து, அவர்கள் வழியில் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை கொடுக்க முயற்சிக்கிறேன். நாங்கள் எந்த லீக் ஆட்டத்திலும் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல, எங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம்.
கோலியுடன் இணைந்து பேட் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் அந்த நேரத்தில் அது என் மனதில் இல்லை. அவருடன் பேட்டிங் செய்ய நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இடது கை, வலது கை பேட்ஸ்மென்கள் என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
- அது ஷிகர் தவானுக்கு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
டாக்கா:
வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் 2 அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். அதேவேளை மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் 3 ரன்களில் வெளியேறினார்.
இந்நிலையில், ஷிகர் தவானின் மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவானின் நிலை என்ன?. இஷான் கிஷனை அணியில் சேர்க்காமல் இருப்பார்களா? என்பதை மிகவும் ஆச்சரியம். சுப்மன் கில்லும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். காயத்தில் இருந்து ரோகித் சர்மா மீண்டுவிட்டால் யாராவது அணியில் இடம்பெறாத சூழ்நிலை ஏற்படும்.
அது ஷிகர் தவானாக தான் இருக்கக்கூடும். இது மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையின் சோகமான முடிவாக அமையும். ஆனால் புதிய தேர்வாளர்களுக்கு சில கேள்விகள் பதிலளிக்க வேண்டும். சுவாரசியம் என்னவென்றால், சுப்மன் கில் அணியில் இடம்பெற்றால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார்.
ஏனென்றால் அவர் தேவை ஏற்படும் நேரத்தில் சிறப்பாக செயல்படுகிறார். இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இடது கை, வலது கை பேட்ஸ்மென்கள் என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அது ஷிகர் தவானுக்கு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- இதே ஆட்டத்தில் சதம் அடித்த இந்தியாவின் விராட் கோலி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் 117 இடங்கள் கிடுகிடுவென எகிறி 37-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதே ஆட்டத்தில் சதம் அடித்த இந்தியாவின் விராட் கோலி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- ரஞ்சி கோப்பையில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் விளையாடி வருகிறார்.
- இஷான் கிஷன் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றினார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார். அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார்.
இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலேயே இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷன் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றினார்.
இந்நிலையில் இப்போது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் அவர் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடும் போது சதமடித்து அசத்தியுள்ளார். 195 பந்துகளை சந்தித்த இஷான் 8 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 132 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
- வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன்.
- நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே போடுகிறேன்.
ராஞ்சி:
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தற்போது ரசிகர்களிடையே பிரபலமான வீரராக விளங்கி வருகிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியதன் மூலம் 15 கோடிக்கு மேல் ஏலம் போய் முன்னணி வீரராக விளங்கி வந்தார். எனினும் இந்திய அளவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிசன் சதம் விளாசினார்.
இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம், அதிவேக இரட்டை சதம் என இரண்டு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இஷான் கிஷன் இருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் விளையாட வந்த இஷான் கிஷனிடம் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். தனது மொபைல் போன் பின் பகுதியில் கையெழுத்திடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
"Sorry I can't sign above @MSDhoni's Autograph" - Ishan Kishan ❤️pic.twitter.com/5b5yhuEC3X
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) December 20, 2022
அப்போது போனை வாங்கி பார்த்த போது தான் இஷான் கிஷனுக்கு தெரிந்தது அதில் டோனியின் கையெழுத்து இருந்தது என்று. உடனே இதனை பார்த்து ஷாக்கான இஷான் கிஷன், அதில் டோனி பாயின் கையெழுத்து இருக்கிறது. என்னை ஏன் அதற்கு மேலே உள்ள இடத்தில் கையெழுத்துப் போட சொல்கிறீர்கள். அதை என்னால் செய்ய முடியாது.
வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன். டோனி கையெழுத்துக்கு மேல் கையெழுத்து போடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே போடுகிறேன். அதுதான் அவருக்கு உரிய மரியாதை என்று இஷான் கிஷன் கூறியுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
- இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.
வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரராக சுப்மன் கில் உள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை விளாசினார்.
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 349 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை விளாசினார். அதனை தொடர்ந்து சேவாக், ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் இரட்டை சதம் அடித்திருந்தனர். இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரராக சுப்மன் கில் உள்ளார்.
இந்நிலையில் போட்டிக்கு பின், இந்திய அணியின் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா - இஷான் கிஷன் - சுப்மன் கில் ஆகிய மூவரும் கலந்துரையாடினர்.
1⃣ Frame
— BCCI (@BCCI) January 19, 2023
3️⃣ ODI Double centurions
Expect a lot of fun, banter & insights when captain @ImRo45, @ishankishan51 & @ShubmanGill bond over the microphone ? ? - By @ameyatilak
Full interview ? ? #TeamIndia | #INDvNZ https://t.co/rD2URvFIf9 pic.twitter.com/GHupnOMJax
அப்போது, இரட்டை சதமடித்தும் உனக்கு(இஷான் கிஷன்) அதன்பின்னர் 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லையே..? என்று இஷான் கிஷனிடம் ரோகித் சர்மா கேட்டார். அதற்கு, நீங்கதான் (ரோகித்) கேப்டன் பிரதர் என்று இஷான் கிஷன் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
இரட்டை சதமடித்தும் அதன்பின்னர் தனக்கு இந்திய அணியில் அடுத்த 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத தனது துரதிர்ஷ்டத்தை நினைத்து இஷான் கிஷன் வருத்தப்பட்டாலும், அதை மறைத்துக்கொண்டு ரோஹித்திடம், நீங்கதான் கேப்டன்.. என்னிடம் கேட்கிறீர்களே என்ற அர்த்தத்தில் ரோகித்துக்கு சரியான பதிலளித்தார் இஷான் கிஷன்.
- நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் டோனி ஆவார்.
- இரட்டை சதமடித்ததை விட டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதே தமக்கு மிகவும் பிடித்த தருணம் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலமையில் இந்தியா களமிறங்குகிறது.
இத்தொடரின் முதல் போட்டி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்திய அணியில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இஷான் கிஷன் மட்டும் விளையாடுகிறார். இடது கை அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளையாடி வரும் அவர் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.
மேலும் தனது மாநிலத்தைச் சேர்ந்த டோனியை தனது குருவாக கொண்ட அவர் இரட்டை சதமடித்ததை விட 18 வயதில் தன்னுடைய பேட்டில் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதே தமக்கு மிகவும் பிடித்த தருணம் என்று கூறியுள்ளார். அத்துடன் அவரது இடத்தை தம்மால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஷான் கிஷன் பேசியதாவது:-
நான் முதலில் 23 நம்பரை என்னுடைய ஜெர்சியில் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே குல்தீப் யாதவ் பயன்படுத்தி விட்டதால் வேறு நம்பரை கேட்குமாறு என்னிடம் கூறினார்கள். அப்போது எனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு பிடித்த நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன 32 நம்பரை மறு வார்த்தை பேசாமல் எனது ஜெர்சியில் பயன்படுத்தி வருகிறேன். நான் எதற்காகவும் பயப்பட மாட்டேன். எனது வழியில் வரும் அனைத்து சவாலுக்கும் நான் தயாராக இருக்கிறேன்.
டோனி குறித்து பேசும் போது, 18 வயதில் டோனியை முதல் முறையாக சந்தித்தது ஆட்டோகிராப் வாங்கியது என்னால் எப்போதும் மறக்க முடியாது. அவருடைய கையெழுத்து என்னுடைய பேட்டில் இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.
நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் டோனி ஆவார். ஏனெனில் அவர் எங்கள் ஊரிலிருந்து எங்களது ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார். எனவே இந்திய அணியில் அவரது இடத்தை நான் நிரப்ப விரும்புகிறேன். அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரைப் போலவே எனது அணிக்காக நான் நிறைய போட்டிகளை வெற்றி பெற்று கொடுக்க விரும்புகிறேன்.
என்று அவர் கூறினார்.