என் மலர்
நீங்கள் தேடியது "IT raid"
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் திம்பநாயக்கன்பட்டியில் கோலியாஸ் கிழங்கு அரைக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு அதை பவுடர் ஆக்கி பெங்களூரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கர்நாடக மாநில வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் தொடர்பு உள்ள பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெரியசாமிக்கு சொந்தமான தொழிற்சாலையிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை முதல் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஆலையின் பல்வேறு பகுதிகளில் சென்று சோதனை நடத்திய அதிகாரிகள் தொழிற்சாலையில் வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆய்வு செய்தனர். இந்த சோதனையால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
- கடந்த 2 நாட்களாக சோதனை நடந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
சென்னை:
புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
கடந்த 2 நாட்களாக சோதனை நடந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாக சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 15 இடங்களில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
- சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் இ.கே.பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் திம்ம நாயக்கன்பட்டி அருகில் கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் கிழங்கு பவுடரை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார். அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இ.கே.பெரியசாமியின் தொழிற்சாலையில் கர்நாடகா மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.
- தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
சென்னை:
சென்னையில் உள்ள தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
- சென்னை வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கோமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2 தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.
- தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் மற்றும் ஆம்பூர் டவுன் ஏ.கஸ்பா பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சென்னை வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கோமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2 தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.
தொழிற்சாலை கதவை பூட்டி சாவிகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் நிறுவன மேலாளர்களின் செல்போன்களையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். தொழிலாளர் மூலம் தகவல் வெளியே பரவுவதை தடுக்க ஜாமர் கருவிகள் வைத்து செல்போன் செயல் இழக்க செய்தனர்.
தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்தது.
ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆம்பூரில் உள்ள 15 தோல் தொழிற்சாலையில் வருமானவரித்துறையினர் 6 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் மீண்டும் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக நேற்று 4 இடங்களில் ஒரே நேரத்தில் இக்குழுவினர் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர்.
- போடியில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
மதுரை மாவட்ட வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு, தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் போடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, அரசு மருத்துவரின் வீடுகள், தனியார் கட்டுமான உரிமையாளரின் வீடுகள், அலுவலகங்கள், ஏலக்காய் வர்த்தகர்களின் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக நேற்று 4 இடங்களில் ஒரே நேரத்தில் இக்குழுவினர் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர். மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆவணங்கள், கோப்புகளை கைப்பற்றி சென்றனர்.
இன்று 2-வது நாளாக தனியார் கட்டுமான உரிமையாளரின் அலுவலகம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்தும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், முடிவில்தான் இதன் உண்மைத்தன்மை தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
போடியில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
- சோதனை முடிவில் டாக்டர் அன்புச்செழியனுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி பஸ் நிலையம் அருகில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் அன்புச்செழியன், அமுதா தம்பதியினர் நடத்தி வருகின்றனர். டாக்டர் அன்புச்செழியன் மாவட்ட குடும்ப நல மருத்துவத்துறையில் இணைஇயக்குனராக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்து வருகிறார்.
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக மதுரை வருமானவரித்துறை துணை இயக்குனர் மைக்கேல்ஜெரால்டு, தேனி வருமானவரி அலுவலர் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் 4 குழுக்கள் தனித்தனியாக பிரிந்து டாக்டர் அன்புச்செழியன் ஆஸ்பத்திரி, அவரது வீடு, மற்றும் ஏலக்காய் கடை, தனியார் கட்டுமான நிறுவனம் உள்பட 5 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
போடியில் உள்ள பிரபல ஏலக்காய் வியாபாரியான ஞானவேல் என்பவரின் அலுவலகத்தில் நடந்த சோதனை நேற்று காலை நிறைவடைந்தது. ஞானவேல் அ.ம.மு.க கட்சியில் நகர செயலாளராக இருந்து வருகிறார். மற்ற இடங்களில் சோதனை நிறைவு பெற்றாலும் டாக்டர் அன்புச்செழியன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது.
ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நர்சுகள் உள்பட அனைத்து பணியாளர்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டன. 3 நாட்களாக நடந்த வந்த சோதனை இன்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. சோதனை முடிவில் டாக்டர் அன்புச்செழியனுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போடியில் நடந்த இந்த தொடர் வருமான வரித்துறை சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.
- உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார்.
வேலூர்:
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலாலில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவுரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பாலால் கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். உள்ளே சென்றதும் கதவுகளை அடைத்து விட்டு சோதனை நடத்தினர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தின் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன் உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டிலும் இன்று காலை வருமானத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினார்
இது தொடர்பாக ஜவுரிலால் ஜெயின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- வருமான வரித்துறை அதிகாரிகள் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் அரியநாயகிபுரத்தில் உள்ள கல்குவாரியில் சோதனை நடத்தினர்.
- நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான திருமண மண்டபங்கள், கல்குவாரிகள், செங்கல் சூளைகள், 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மார்த்தாண்டத்தில் செயல்பட்டு வருகிறது.
மேலும் நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்திலும் இவருக்கு சொந்தமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் அரியநாயகிபுரத்தில் உள்ள கல்குவாரியில் சோதனை நடத்தினர். இதையொட்டி குவாரிகளுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குவாரிகளில் ஆய்வு செய்யும் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு கற்களை எடுத்து செல்வதற்கான அனுமதி சீட்டுகள் மற்றும் குவாரிகளின் உரிமங்கள் ஆகியவற்றின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மார்த்தாண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.
- களியக்காவிளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
குழித்துறை:
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் சொத்துக்களை வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
அதன் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஓட்டல் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே கட்டமாக சோதனை நடத்தினர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திரன். இவருக்கு ஏராளமான கல் குவாரிகள் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன.
மேலும் மார்த்தாண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.
தொழில் அதிபர் ராஜேந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுபோல களியக்காவிளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதுபோல நாகர்கோவில் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருந்து நிறுவனத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 5 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
- குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
வேலூர்:
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை.
குடியாத்தம் சந்தைபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் உள்ள 100-ம் நம்பர் பீடி கம்பெனியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வேலூர் காட்பாடியில் காலை 10 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இரவு 11 மணி வரை அதாவது 13 மணி நேரம் நீடித்தது.
இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
குடியாத்தம் சந்தைப்பேட்டை அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
- வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.
- சென்னையில் அய்யப்பன்தாங்கல், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள நிறுவன அலுவலகங்களில் சோதனை நடந்தது.
சென்னை:
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதித்யா ராம், அம்பாலால் உள்ளிட்ட 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 14-ந்தேதி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. இன்று 4-வது நாளாக இந்த சோதனை நீடிக்கிறது.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அய்யப்பன்தாங்கல், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள நிறுவன அலுவலகங்களில் சோதனை நடந்தது.
சென்னையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடைபெற்றது.
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அம்பாலால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடைபெற்றது. அம்பாலால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் மட்டும் கணக்கில் வராத 7½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் போதுமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
4-வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த 4 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.