என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jai Shri Ram"
- மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக சட்டப்பிரிவு 295A-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும்
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி உள்ளூர் மசூதி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி அத்துமீறி நுழைந்தது[ சட்டப்பிரிவு 447], பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்[ சட்டப்பிரிவு 505], மத நம்பிக்கையைப் புண்படுத்தியது [சட்டப்பிரிவு 295A] , மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின்கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுவது என்ன மத நம்பிக்கையை புண்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
இந்த புகாரை அளித்த மனுதாரரே, தாங்கள் வசிக்கும் பகுதியில் இந்து- முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சட்டப்பிரிவு 295A இன் கீழ் வராது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
- கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.
- இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது.
உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த வருடம் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்டில் வெளியாகின. இதில் நன்கு படிக்கும் மாணவர்களை விட அதிகமாக 4 பேருக்கு 50 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை மதிப்பெண் கிடைத்துள்ளது.
இதில் சந்தேகம் எழுந்ததால் அந்த 4 மாணவர்களின் விடைத்தாள்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாங்கி பார்க்கப்பட்டது. இதில் 4 மாணவர்களுமே விடைகளுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், ஜெய் பஜ்ரங்பலி போன்ற வாசகங்களை எழுதி பக்கங்களை நிரப்பியிருந்தனர். இன்னொரு மாணவர், கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதியிருந்தார். இந்த விவகாரத்தில் விசாரணை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திவ்யான்ஷூ சிங் புகார் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.
இதில் இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து வினய்வர்மா, ஆஷிஷ்குப்தா என்ற 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் பல மாணவர்களை தேர்வில் காப்பியடிக்க அனுமதித்ததாக புகார்கள் வெளியாகின.
- இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்துள்ளது
- அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனிருத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. மேலும், வீடியோவில் உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
- அசாம் மாநில அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
- வருகிற 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபாதை மேற்கொண்டு வருகிறார். அசாம் மாநிலத்தில் அவருடைய நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாஜனதா தொண்டர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேருந்தில் இருந்தபடியே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி "அன்பிற்கான கடை எல்லோருக்காகவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும், இந்துஸ்தான் வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
सबके लिए खुली है मोहब्बत की दुकान,जुड़ेगा भारत, जीतेगा हिंदुस्तान।?? pic.twitter.com/Bqae0HCB8f
— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2024
- மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
- 16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அகமதாபாத்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் அகமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.
ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மழை நிற்க வேண்டும் என ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து மழை நீடித்ததால் நேற்று போட்டி நடைபெறாமல் போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனை தொடர்ந்து மாற்றுநாளான இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- டெல்லியில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்துகொண்டார்
- வதோதராவில் கெஜ்ரிவாலின் மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பான பேனர்களை பாஜகவினர் கிழித்து எறிந்தனர்.
வதோதரா:
விஜயதசமி தினத்தில் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இந்துக்கள் புத்த மதத்துக்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்து கடவுள்களுக்கு எதிராக உறுதிமொழி வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாஜகவினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினர். அத்துடன், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் கவுதமை நீக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெறும் மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பான பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திட்டமிட்டபடி மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கிய அரவிந்த கெஜ்ரிவால், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டார். இதன்மூலம், தான் இந்து மதத்திற்கு எதிரானவன் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் பாஜகவை சாடிய கெஜ்ரிவால், "அவர்கள் என்னைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். கடவுளைக்கூட அவர்கள் அவமதிக்கிறார்கள்." என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்