என் மலர்
நீங்கள் தேடியது "jewellery money robbery"
- மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மடூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44) மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தனது மனைவி சந்திரா மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் செந்தில் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சந்திரா தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதே பகுதியில் உள்ள உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார். மீண்டும் வேலை முடித்துவிட்டு அவரது மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் முன்பக்க மரக் கதவில் இருந்த பூட்டு உடைத்து வீட்டின் உள்ளே இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பட்டம் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இரவு வீட்டைப் பூட்டி விட்டு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார்.
- பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி0 பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் மனைவி லதா (வயது 45), பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டைப் பூட்டி விட்டு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது
6 பவுன் நகை, 80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அன்ன தானப்பட்டி போலீசில் லதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
களியக்காவிளையை அடுத்த மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஸ்ரீஜா ராணி (வயது 32). இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் ஒருவர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் எடை உள்ள 3 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடை உள்ள 2 கம்மல்கள், மற்றொரு மேஜையில் இருந்த ரொக்கப்பணம், ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா எதுவும் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த சடையார்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த துரைமாணிக்கம் மனைவி ராஜலட்சுமி (வயது 58). கணவர் இறந்து விட்டதால் ராஜலட்சுமி தனியாக வசித்து வந்தார். அவர் விவசாய கூலிவேலைக்கு சென்று வருவார்.
இந்த நிலையில் நேற்று மாலை ராஜலட்சுமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ஒரு பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.
வீடு திரும்பிய ராஜலட்சுமி கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் இன்று காலை தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.
கச்சிராயப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள சிவகங்கை கிராமம் காட்டுகொட்டகையை சேர்ந்தவர் செம்மலை (வயது 45). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு செவ்வந்தி (18) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு செம்மலை வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். செல்வி தனது மகள் செவ்வந்தி மற்றும் செம்மலையின் தாயார் அங்கம்மாள் (70) ஆகியோர் ஊரில் ஒதுக்குபுறத்தில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.
நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் செல்வி மற்றும் மகள் செவ்வந்தி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் திபு.. திபு.. வென்று புகுந்தனர்.
அவர்கள் முகத்தை துணியால் மூடி இருந்தனர். வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்ததை பார்த்ததும் தாய், மகளும் கூச்சல்போட்டு அலறினர். அவர்களின் சத்தத்தை கேட்ட வீட்டின் மற்றொரு அறையில் இருந்த அங்கம்மாளும் வந்தார்.
பின்னர் முகமூடி கொள்ளையர்கள் செல்வி, செவ்வந்தி, அங்கம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்பு அவர்களது கை, கால்களை கயிற்றால் கட்டி ஒரு அறையில் தள்ளினர். அதன்பின்பு கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை எடுத்து வீசினர். பின்பு அங்கிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இன்று காலை செல்வியின் வீட்டு கதவு திறந்து இருந்து வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் செல்வியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு ஒரு அறையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் செல்வி, செவ்வந்தி, அங்கம்மாள் ஆகியோர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்தனர். அப்போது செல்வி கண்ணீர் மல்க கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்றார்.
இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு வெளியே சென்று நின்றது. வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை-பணம் கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பங்கஜம் நகரை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி அஞ்சலைதேவி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இதில் 2 மகன்கள் வெளி நாட்டில் வேலை செய்து வருகின்றனர். பலராமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அஞ்சலைதேவி தனது மற்றொரு மகனான சாப்ட்வேர் என்ஜினீயரான முரளியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அஞ்சலைதேவி வீட்டின் கீழ் தளத்திலும், முரளி தனது மனைவியுடன் வீட்டின் மாடியிலும் தூங்கினர்.
நள்ளிரவில் மர்ம வாலிபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த 3 பீரோக்களை உடைத்து பார்த்துள்ளனர்.
அதில் நகை- பணம் எதுவும் இல்லாததால் பூஜை அறைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.
பின்னர் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டு இருந்த அஞ்சலைதேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினையும் பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த அஞ்சலைதேவி திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.
தாயார் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் முரளி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் கொள்ளையர்கள் வயல் வெளியில் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்று திருட்டு, கொள்ளை சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி மேற் கொள்ளாததால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.