என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job"

    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.
    • 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா , ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் , தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் , பிரதமமந்திரி கௌசல் விகாஸ் யோஜனா , மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், 4 சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி பயிற்சிகள், சில்லரை விற்பனை வணிகம், பி.பி.ஓ., துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.

    இப்பயிற்சிக்கு இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்யும் பொருட்டு இளைஞர் திறன் திருவிழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, முகாமில் பள்ளிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் கலந்து கொண்டு பயிற்சியினை தேர்வு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த பெண் மீது புகார் கொடுக்கப்பட்டது.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெண்ணை வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சோைன மீனாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இந்திராணி(39). ஓட்டல் நடத்தி வருகிறார். திருமங்கலம் ஜாகீர்நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி நாகதுர்கா(36). இந்திராணியின் தோழியின் மூலமாக நாகதுர்காவுக்கு இந்திராணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை அறிந்த நாகதுர்கா, தான் திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக இந்திராணியிடம் கூறினார். இதனை நம்பி கடந்த ஆண்டு ரூ.4 லட்சத்தை நாகதுர்காவிடம், இந்திராணி கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்டு அரசு வேலை வாங்கி தராமல் இழுத்தடிக்கவே இந்திராணி பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு நாகதுர்கா மறுத்தார்.

    அதிர்ச்சியடைந்த இந்திராணி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நாகதுர்காவை தேடி வருகின்றனர்.

    • ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மூன்றாம் பாலினத்தவர் 266 பேர்.
    • வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஏப்ரல் 30-ந்தேதி நிலவரப்படி, தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 ஆகும்.

    இதில், ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மூன்றாம் பாலினத்தவர் 266 பேர்.

    வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேர் ஆவர்.

    31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர். 46 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 111 பேர் உள்ள னர். இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
    • அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது.

    ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது. காலையில் தேநீர் தயாரித்து குடும்பத்தினருக்கு கொடுப்பது முதல் இரவில் உணவு சமைத்து பரிமாறுவது வரை ஓய்வில்லாமல் உழைக்கும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. அப்படி அதிக நேரம் வேலை செய்யும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். சற்று நிதானத்தோடு சிந்தித்து செயல்பட்டால் பெண்கள் தங்கள் உடல் நலனையும், மன நலனையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    சோர்வு: உணவை தவிர்ப்பது, போதுமான தூக்கம் இல்லாதது, தண்ணீர் குடிக்காதது, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது உள்ளிட்ட பல காரணங்களால் சோர்வு ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து பிஸியாக இருந்தாலோ, நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருந்தாலோ ஊட்டச்சத்து விஷயத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் குறைவான நேரமே தூங்குகிறார்கள். முழு உடல் ஆற்றலையும் தங்களின் வேலைகளுக்கு செலவிடுகிறார்கள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் நலத்தில் அலட்சியம் கொள்வது நீரிழிவு நோய், தைராய்டு, வைட்டமின் குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

    மாதவிடாய் பிரச்சினைகள்: பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானது. மாதவிடாய் காலங்களில், கடுமையான தசை பிடிப்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதிலும் பி.சி.ஓ.டி. எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் பருமன், டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், மலட்டுத்தன்மை மற்றும் மாதவிடாய் சுழற்சியின்போது முகப்பரு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

    மன அழுத்தம்: நீண்ட நேரம் வேலை செய்யும் பெண்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்வதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை கையாளும் திறன் தன்னிடம் இல்லை என்பதை மூளை உணரும்போது, மன உளைச்சலை அனுபவிக்க வேண்டியிருக்கும். இருப்பினும் நிதி சிக்கல்கள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவும் திடீர் மன அழுத்தம் ஏற்படலாம். அந்த சமயத்தில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    பலவீனம்: பொதுவாக பெண்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்களை சேர்த்துக்கொள்ளாதபோது பலவீனத்தை எதிர்கொள்கின்றனர். இது ரத்த அழுத்தம், குறிக்கோள் மீது ஆர்வமின்மை, வேலையில் செயல்திறன் குறைதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சமச்சீரான உணவு பழக்கத்தை கையாள்வது பற்றி உணவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது பல வீனத்தை குறைக்க உதவும்.

    செரிமான பிரச்சினைகள்: உணவுப்பழக்கம், பாக்டீரியா தொற்றுகள், உட்கொள்ளும் சில மருந்துகள் போன்றவற்றால் திடீர் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வொரு பெண்ணும் தினமும் மூன்று வேளையும் ஆரோக்கியமான, சமச்சீரான உணவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை சாப்பிடலாம். நீண்ட வேலை நேரத்தால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உடல்நல பிரச் சினைகளை தடுப்பதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. தினமும் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். அதன் மூலம் வெளியாகும் எண்டோர்பின்கள் மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியையும் தக்க வைக்க உதவும். ஓய்வுக்கு போதிய நேரம் ஒதுக்குவதன் மூலமும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

    • தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    தமிழக மின் வாரியத்தில், உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக , கேங்மேன் பணிக்கு 10 ஆயி ரம் பேர் தேர்வு செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டது. தேர்வான, 9,600 பேரின் பட்டியல், 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

    எழுத்து தேர்வில் பங்கேற்று வேலை கிடைக் காத 5,400 பேர் வேலை கேட்டு, 2 ஆண்டு களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சி னைக்கு தீர்வு காண, செய லர், 3 தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழுவை, மின் வாரியம், கடந்த ஆண்டு நியமித்தது.

    அக்குழு ஆய்வு செய்து, தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், 54 ஆயிரம் காலி பணி யிடங்கள் இருப்பதால், எழுத்து தேர்வில் பங்கேற்று விடுபட்ட 5,400 பேரை வேலைக்கு நியமிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    • பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
    • 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூலம், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம் பல்கலைகழகத்தில் இண்டகரேட்டட் மேனேஜ்மெண்ட் பட்டபடிப்பில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பு பெற்று தரப்படும்.

    இதற்கான தகுதிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பிளஸ் 2-ல், 2022-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.

    இப்படிப்பிற்கான செலவு தாட்கோ மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்பு பெற்றால், ஆண்டு சம்பளமாக ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் சம்பள உயர்வும் பெறலாம்.

    இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.
    • சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கிச்சிப்பாளையம் புதுதெரு பகுதியை சேர்ந்தவர் சாலை சேகரன் (வயது 49). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.

    மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தனக்கு நண்பர் என்றும், அவர் மூலம் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் ராதாகிருஷ்ணன் என்பவரையும் போனில் பேச வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சாலை சேகரன், அந்த நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிலும், கூகுள்பே மூலமும் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 273 செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு அந்த 2 நபர்களும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாலை சேகரன், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது.
    • அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவதை தங்களது கனவாக கொண்டு இருந்தனர்.

    ஆனால் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த 2014-ம் அண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிபவர்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்தள்ளது.

    வளர்ச்சியை நோக்கி செல்லும் நாட்டில் இது போன்ற வேலை வாய்ப்புகள் குறையுமா?

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 1,81,127 பேர் வேலை இழந்துள்ளனர். செய்ல்-61,920, எம்.டி.என்.எல். 34,997, எஸ்.இ.சி.எல். 29,140, இந்திய உணவு கழகம் 28,663, ஒ.என்.ஜி.சி.யில் 21,120 பேர் வேலையை இழந்துள்ளனர்.

    ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள் வேலைகளை அதிகரிப்பதற்கு பதிலாக 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனங்களில் ஒப்பந்த ஆட்களை சேர்ப்பது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிறுவனங்களை தனியார் மயமாக்கும் சதியா?

    இந்த அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது.

    பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    • செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார்.
    • விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி கொல்லர் தெரு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 38). இவரது செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரூ.12,99,534 பணம் செலுத்தி பதில் அளித்துள்ளார்.

    ஆனால் இவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் மெய்ய னூர் அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரும் ஆன்லைனில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேந்திரன், இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கபட்டுள்ளது
    • மாணவர்கள் சென்ற வாரம் 23-ந்தேதி பணியில் சேர்ந்தனர்.

    கரூர்,

    இந்திய தொழில் நுட்பக் கழகம் (மெட்ராஸ்) தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். இதன் துணை நிறுவனமான ப்ரவர்தக் டெக்நாலோஜிஸ் திறமையான வள்ளுவர் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு வருடமும் பணியமர்த்தி வருகிறது. இந்தவருடமும் கணினி அறிவியல் பயின்று முடித்த மூன்று மாணவர்களை தேர்வு செய்துள்ளது. இந்த மாணவர்கள் சென்ற வாரம் 23-ந்தேதி பணியில் சேர்ந்தனர். வேறெந்த கல்லூரிக்கும் கிடைக்காத வாய்ப்பும் பெருமையும் வள்ளுவர் கல்லூரிக்கு கிடைத்திருப்பதாக கல்லூரியின் தலைவர் செங்குட்டுவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்F மாணவர்களின் திறமை மற்றும் கல்லூரியில் அளிக்கப்படும் தலைசிறந்த பயிற்சியுமே காரணம் என்றும் அவர் கூறினார்.

    • வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவார்கள்.
    • பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு வருகிற 13 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அவிநாசி, காங்கயம், பல்லடம், பொங்கலூா், திருப்பூா், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் கீழ்கண்ட தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

    இதற்கு விண்ணப்பிக்க ஒரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 28 வயதுக்கு உள்பட்டவராகவும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்களில் பணியாற்றியிருக்கவும் வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்) ஜூலை 20 -ந்தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்) ஜூலை 24 ந்தேதியும் நடைபெறும்.

    ஆகவே இதற்கு தகுதிவாய்ந்த நபா்கள், இணை இயக்குநா்-திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், அறை எண் 305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 13 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இப்போதே மாண்டிசோரி ஆசிரியர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
    • கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள்... என யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

    கடந்த மூன்று வாரங்களாக ஆசிரியர் பணி குறித்தும், பல்வேறு விதமான ஆசிரியர் பயிற்சி முறைகள் பற்றியும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெறும் படிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த வாரம், வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பற்றியும், அது ஏன் ஆதிக்கம் செலுத்த இருக்கிறது என்பது குறித்தும் சென்னையை சேர்ந்த கல்வியாளர் அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

    ''நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது'' என்றவர், அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்.

    ''இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்'' என்றவர், இன்னும் சில வருடங்களில், தமிழகத்தின் எல்லா நகரங்களிலும், பல்வேறு மாண்டிசோரி பள்ளிகள் ஆரம்பமாகிவிடும் என்கிறார்.

    ''இப்போதே மாண்டிசோரி ஆசிரியர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எதிர்காலத்தில் இது அதிகமாகிவிடும். மேலும் மற்ற ஆசிரியர் பணிகளை விட மாண்டிசோரி ஆசிரியர் பணி மிகவும் எளிமையானது, வித்தியாசமானது என்பது நிறைய மாணவ-மாணவிகள் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு முக்கிய காரணமாகிறது. ஆம்..! மாண்டிசோரி ஆசிரியர் பணியில், 'லெசன் பிளான்' இல்லை. ஏனெனில் படிப்பதற்கான வழிமுறைகளை மாணவர்கள்தான் உருவாக்க வேண்டும்.

    ஆசிரியர்கள், அவர்களது கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து வழிநடத்தினால் மட்டும் போதும். ஒரே வகுப்பறையில் அடைத்து வைத்து கல்வி கற்றுக்கொடுக்கும் அவசியமும் இல்லை. பல்வேறு வழிமுறைகளை (டீச்சங் எயிட்) பயன்படுத்தி கல்வி கற்பிக்கலாம். இது மற்ற ஆசிரியர் பணிகளை போல கட்டாய பணியாக இல்லாமல், விரும்பி செய்யக்கூடிய பணியாகவே இருக்கும் என்பதாலும், இதற்கான வரவேற்பு அதிகரித்திருக்கிறது'' என்றவர், இந்த பயிற்சி பெற வயது வித்தியாசங்கள் எதுவுமில்லை என்பதும் மிக முக்கிய காரணம் என்கிறார்.

    ''கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள்... என (10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை) யார் வேண்டுமானாலும் படிக்கலாம். வீட்டில் இருந்து ஆன்லைன் முறையில் கூட படிக்கலாம். ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வியாக படிப்பதனால் அதற்கு மதிப்பு குறைந்துவிடும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் கிடையாது. முக்கியமான வகுப்புகளுக்கு மட்டும், நேரடி வகுப்பில் கலந்து கொண்டு மற்றபடியான வகுப்புகளை ஆன்லைன் முறையிலேயே மேற்கொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு காரணங்கள்தான், மாண்டிசோரி கல்வியையும், ஆசிரியர் பயிற்சியையும் எதிர்காலத்திற்கானதாக மாற்றி இருக்கிறது.

    ஒருகாலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிரபலமாக இருந்தன. ஆனால் சி.பி.எஸ்.இ. கல்விமுறை வந்ததும், மெட்ரிகுலேஷனை விட சி.பி.எஸ்.இ. பிரபலமாகின. இந்த பட்டியல் இன்று இண்டர்நேஷனல் கல்விமுறை வரை சென்றுவிட்டது. அதன்படி, எதிர்காலத்தில் மாண்டிசோரி நிச்சயம் தவிர்க்க முடியாத கல்வி முறையாகவும், ஆசிரிய பயிற்சியாகவும் மாற இருக்கிறது'' என்று புதுநம்பிக்கை கொடுக்கும் அன்ன ஸ்டெபி, இறுதி கருத்தை பதிவு செய்தார்.

    ''ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பேசோ, கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ்... இவர்கள் எல்லாம் மாண்டிசோரி கல்வி முறையில் படித்தவர்கள். இந்த கல்விமுறை நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் யாரும் எதிர்பார்க்காததை விட, ரொம்ப பிரபலமாக இருக்க போகிறது'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.

    ×