search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job transfer"

    • தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த கவுதம் கோயல் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த கவுதம் கோயல் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த எஸ். பிருந்தா பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று எஸ்.பிருந்தா சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் விஜயகுமாரி மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், போலீசாரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றப்பட்டு உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணி யிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு திருவண்ணாமலை மாவட்ட இலங்கை தமிழர்கள் நலன் தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ஜெ.சுகுணா கீழ்பென் னாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

    கீழ்பென்னாத்தூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.வெங்கடேசன் போளூர் தாசில்தாராகவும், செங்கம் தாசில்தார் கே.ராஜேந்திரன் திருவண் ணாமலை வட்ட வழங்கல் தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பி.முருகன் செங்கம் தாசில்தாராகவும் மாற்றப் பட்டு உள்ளனர்.

    • மோசமான செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை
    • கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊராட்சி ஒன் றிய வட்டார கல்வி அலுவல ராக பாபு என்பவர் பணி யாற்றி வந்தார். இவர் சாதி பாகுபாடு காட்டுதல், பெண் ஆசிரியர்களை கீழ்தரமாக பேசுவது உள்ளிட்ட மோச மான செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் மீது சட் டரீதியான நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணிமே கலை, மாநில பொருளாளர் மத்தேயு, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயலா ளர் அமர்நாத், மாவட்ட பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் பாபுவை திருவண்ணாமலை மாவட் டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

    • கலெக்டர் உத்தரவு
    • வருகிற 31-ந் தேதிக்குள் சேர உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    அதன்படி நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சிவராமன், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகவும், அங்கு பணியாற்றிய ரவி, நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) க்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல் நெமிலி வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராக பணியாற்றிய பாஸ்கரன், ஆற்காடு வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலகராகவும், அங்கு பணியாற்றிய பிரபாகரன் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய வெங்கடேசன், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ரவிச்சந்திரன் , அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அன்பரசன் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ) ஆகவும், அங்கு பணியாற்றிய ஜெயஸ்ரீ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நிர்வாக நலன் கருதி பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் சேருமாறு மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    • பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார்.
    • பிரதீப் குமார் தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகம் 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை பிரதீப் குமார் (வயது 50) என்பவர் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சியடைந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு பிரதீப் குமார் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் பிரதீப் குமார் கணக்காளராக பணிபுரிந்து உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடலூரில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று பிரதீப் குமார் கடலூருக்கு வந்த போது ஏற்கனவே பணிபுரிந்த கடலூர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள 3-வது மாடிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரதீப் குமார்3- வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யார் ஒன்றியம், கடுகனூர் கிராமத்திலும், அனக்காவூர் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து 2 இடங்களிலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    திறந்து வைத்து பேசுகையில்:-

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்தாண்டை போலவே தற்போது முதல் கட்டமாக செய்யாறு தொகுதி முழுவதும் 20 இடங்களிலும், அடுத்த வாரத்தில் இன்னும் கூடுதலாக 10 இடங்களிலும் என 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.

    இதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி அரசின் நியாயமான விலையை பெற்று பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்று பேசினார். 

    • கலெக்டர் உத்தரவு
    • பதவி உயர்வு பெற்றுள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாபு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த லட்சுமி போளூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா திருவண்ணா மலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வீடுகள்), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலராகவும்.

    அதேபோல் திருவண்ணாமலை மாநில ஊரக வாழ்வாதார மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பாண்டியன் கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கோபு புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு போளூர் வட்டார வளர்ச்சி அலுவல ராகவும், திருவண்ணாமலை வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பிரிதிவிராஜன் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    • ரேஷன் பொருள்கள் அனைத்தும், கிழிந்த சாக்குப் பைகளில் எடை குறைவாக நூல் மாற்றம் செய்யாமல் வழங்கப்படுகின்றன.
    • ஒரே இடத்தில் நீண்ட காலமாக செயல்பட்டதால் இவா்கள் ஊழலுக்கு உறுதுணையாக செயல்படும் நிலை உள்ளது.

    திருப்பூர்:

    கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் நகா்வுப் பணியில் உள்ள ஊழியா்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட கூட்டுறவுப் பணியாளா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து சிஐடியூ. கூட்டுறவுப் பணியாளா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கௌதமன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டம் முழுவதும் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் அனைத்தும், கிழிந்த சாக்குப் பைகளில் எடை குறைவாக நூல் மாற்றம் செய்யாமல் வழங்கப்படுகின்றன. இது சம்பந்தமாக புகாா் தெரிவித்தும், ரேஷன் பொருள்கள் உரிய அளவு முறையாக வழங்குவதில்லை. எனவே இது குறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் நகா்வுப் பணியில் உள்ள ஊழியா்கள் 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றுவோரை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஒரே இடத்தில் நீண்ட காலமாக செயல்பட்டதால் இவா்கள் ஊழலுக்கு உறுதுணையாக செயல்படும் நிலை உள்ளது. ஆகவே, காலதாமதம் செய்யாமல் இவா்களைப் பணி மாற்றம் செய்ய வேண்டும்.

    திருப்பூா் மாநகராட்சி உள்ளிட்ட நியாய விலைக் கடைகளுக்கு வழங்கக்கூடிய மண்ணெண்ணெய் 100 லிட்டா் குறைவாக ஒதுக்கீடு செய்து, அதில் 5 லிட்டா் வரை குறைவாக வழங்கப்படுகிறது. கோதுமை மாத இறுதியில் வழங்காமல் முதல் வாரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

    • முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
    • பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இதையடுத்து முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடக்கத்தில் இருந்தே அவரது செயல்பாடுகள் பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது. எனவே அவரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், நகராட்சித்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனுவும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளர் முகம்மது சம்சுதீன் திடீரென தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம்பவானிநகராட்சி ஆணையாளராக உள்ள தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    • அரசு விழாவில் மின்சாரம் தடைபட்டதால் நடவடிக்கை
    • 10 நிமிடங்கள் கடந்தும் மின்சாரம் வரவில்லை

    வேலூர்:

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

    தொடர்ந்து காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதிலும் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சைக்கிள் வழங்கி பேசினார்.

    அப்போது 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்ற நினைவு குறித்தும் தனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியர் குறித்து மாணவர்களிடம் மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். உடனே கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் மின்வாரிய அதிகாரிகளை பதட்டத்துடன் தொடர்பு கொண்டனர்.

    10 நிமிடங்கள் கடந்தும் மின் இணைப்பு வரவில்லை. இதனால் அமைச்சர் துரைமுருகன் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் காட்பாடி, தாராப்படவேடு ஆகிய பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய 2 பேரை காட்பாடி வடுகன்தாங்கல் துணை மின் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜசேகர் திருப்பூர் மாநகருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர்:

    காவல்துறையில் மேற்கு மண்டல அளவில் 48 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகர வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த தெய்வமணி கோவை மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த செந்தில்பிரபு திருப்பூர் மாநகருக்கும், திண்டுக்கல்லில் இருந்த ராஜசேகர் திருப்பூர் மாநகருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த உதயகுமார் திருப்பூர் மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சிவகாமி–ராணி திருப்பூர் மாநகருக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருப்பாச்சேத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கவிதா திருப்பூர் மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த காமராஜ் கோவை சரகத்துக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த முரளிதரன் கோவை சரகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார்.

    ×