என் மலர்
நீங்கள் தேடியது "JP Nadda"
- முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
- எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.
இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.
கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.
மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.
இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.
- பல பத்தாண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதிவாசி மக்கள் நினைவுக்கு வரவில்லை.
- காங்கிரஸ் கட்சி மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது.
பெங்களூரு :
கர்நாடக பா.ஜனதாவினர் பழங்குடியினர் அணி மாநாடு பல்லாரியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
தலித், பழங்குடியின மக்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் செய்து வருகிறார்கள். இது நாம் செய்த புண்ணியம். முந்தைய காங்கிரஸ் அரசுகள் மக்களை ஏமாற்றும் பணியை செய்து வந்தது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது. கர்நாடக பா.ஜனதா அரசு, தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்த சமூகங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஆதிவாசி மக்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். பல பத்தாண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதிவாசி மக்கள் நினைவுக்கு வரவில்லை. கவர்னர், முதல்-மந்திரி பதவி என்று வரும்போது பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்ந்தவர்களை நாங்கள் தேர்ந்தேடுத்தோம். இதை மக்கள் கவனிக்க வேண்டும்.
பகவான் பிர்சா முண்டா கவுரவ திவஸ் கொண்டாடினோம்.
- குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி படு தோல்வியை சந்திக்கும்.
- பல்வேறு மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
டெல்லி மாநகராட்சித் தேர்தலையொட்டி படேல் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளதாவது:
வாரணாசி மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மண்ணை கவ்வினார். அதன் பிறகு, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவா சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி, போட்டியிட்டது. அதன் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.
தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அவர்கள் (ஆம் ஆத்மி) 67 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று நான் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்கிறேன். குஜராத் தேர்தலிலும் அவர்கள் இதே நிலையை சந்திப்பார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் டெல்லியில் பாஜக ஆட்சி செய்த மாநகராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கெஜ்ரிவால் அரசு செயல்படுத்திய இரண்டு திட்டங்களை சிசோடியாவால் சொல்ல முடியுமா என சவால் விடுகிறேன்.
சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் வசதியை ஏற்பாடு செய்து தருகிறார்கள். இது போன்ற அது பல நல்ல வேலைகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய பா.ஜ.க. தலைவர் கோவை வருவதால் கட்சியினரிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
- ஜே.பி.நட்டாவை வரவேற்பதற்கு தமிழக பா.ஜ.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
கோவை:
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதுதவிர மாநிலங்களில் எம்.பி தொகுதிகளை கைப்பற்ற மாநில கட்சிகளும் ஆயத்தமாகி வருகிறது.
அந்த வகையில் தமிழக பா.ஜ.க. தங்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவீச்சில் தொடங்கி விட்டது. தமிழகத்தில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதே இலக்கு என்ற நோக்குடன் பா.ஜ.க.வினர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வினருடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
ஜே.பி.நட்டா வருகிற 27-ந்தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டு வந்து வரவேற்கின்றனர்.
வரவேற்பை ஏற்று கொள்ளும் ஜே.பி.நட்டா கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காரமடைக்கு செல்கிறார்.
காரமடை வி.பி.ஆர். மஹாலில் பா.ஜ.க.வின் நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.
கூட்டத்தில் அவர், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது, தொகுதிகளில் பூத் கமிட்டியின் நிலை, மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறுவது என பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு ஆலோசனைகளையும் நிர்வாகிகளுக்கு வழங்க உள்ளார்.
தேசிய பா.ஜ.க. தலைவர் கோவை வருவதால் கட்சியினரிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவரை வரவேற்பதற்கு தமிழக பா.ஜ.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 27-ந் தேதி கோவைக்கு வருகிறார். அவர் 2 நாள் தமிழகத்தில் தங்கி கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் மாதம் 2 நாள் பயணமாக ஜே.பி.நட்டா, தமிழகம் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, மிக விரைவிலேயே அவர் மீண்டும் தமிழகம் வருவது, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
- தி.மு.க. ஆட்சி, குடும்பத்துக்காக குடும்பத்தால் நடத்தப்படும் ஆட்சியாக இருக்கிறது.
- அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்களும், வழக்குகளும் உள்ளன.
சென்னை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வாஜ்பாயின் உருவப்படத்துக்கு தமிழக பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் பா.ஜ.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகை மதுவந்தி உள்ளிட்டோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'ஆத்ம நிர்பர் பாரத்' திட்டத்துக்கு வலிமையான அடித்தளமிட்டவர் வாஜ்பாய். அவர் பாதையில் இன்று நரேந்திர மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. ஊழலற்ற ஆட்சியை வழங்கியவர் வாஜ்பாய். எதிரிகளே இல்லாதவர் வாஜ்பாய். இலவச கல்வி உள்ளிட்ட மக்களுக்கான பல திட்டங்களை தொடங்கியவர் வாஜ்பாய்.
தமிழகத்திலோ நடந்து வரும் தி.மு.க. ஆட்சி, குடும்பத்துக்காக குடும்பத்தால் நடத்தப்படும் ஆட்சியாக இருக்கிறது. குண்டாயிசம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த முறை ஊழலால் தரமற்ற பொங்கல் பொருட்களை இந்த ஆட்சி மக்களுக்கு வழங்கியது. ஆனால் இந்த முறை கரும்பு கூட இல்லாத பொங்கல் பரிசை வழங்க முடிவு செய்திருக்கிறது.
முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவின் வாகனம் மீது தாக்குதல் நடந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
உரிய நேரத்தில் உரிய முறையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை சொல்லிவிட்டார். அ.தி.மு.க.வில் என்ன பிரச்சினை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள்
கட்சியை வலுப்படுத்தும் வகையில் 27-ந்தேதி (நாளை) பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். குறிப்பாக பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்களும், வழக்குகளும் உள்ளன. அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அவரும் விலகவில்லை. முதல்-அமைச்சரும் அவரை பதவியிலிருந்து நீக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜே.பி.நட்டா வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருப்பதால் வெற்றி பெறுவதற்கான பணிகளை பாரதிய ஜனதா இப்போதே தொடங்கி விட்டது.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சியினரை நேரில் சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஜே.பி. நட்டா, தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக ஜே.பி.நட்டா இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
ஓட்டலில் கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையின் போது பா.ஜனதா வெற்றிக்கு வாய்ப்புள்ள தொகுதிகளின் விவரங்கள், தேர்தல் பணிகளை தொடங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி தீவிர களப்பணியாற்ற கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பாரதிய ஜனதாவின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று வெற்றிக்கனியை பா.ஜ.க. வசமாக்க வேண்டும் என நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் ஜே.பி. நட்டா தமிழகத்தில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டதுடன் பிரசாரத்தையும் தொடங்கி உள்ளார். ஆலோசனை முடிந்ததும் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.
பின்னர் மாலை 3 மணிக்கு கோவையில் இருந்து கார் மூலமாக ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையத்திற்கு செல்கிறார். அங்கும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து காரமடை அருகே தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நடக்கும் வாஜ்பாய் பிறந்த நாள் நல்லாட்சி தின பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கட்சி தொண்டர் வீட்டிற்கு செல்லும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அங்கு இரவு உணவு சாப்பிடுகின்றனர்.
பின்னர் ஜே.பி.நட்டா அங்கிருந்து கார் மூலமாக கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு இரவில் தங்கும் ஜே.பி.நட்டா நாளை(28-ந் தேதி) காலை 10 மணிக்கு கோவை விமானம் நிலையம் வந்து, விமானம் மூலம் புவனேஸ்வரத்திற்கு செல்கிறார்.
ஜே.பி.நட்டா வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்கள் எல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அகில இந்திய அளவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார்.
கோவை:
பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று கோவை வந்தார். காலையில் அவர் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவர் கோவை வருகையில் தாமதம் ஏற்பட்டதால் ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டது.
அதேசமயம் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வந்து ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அகில இந்திய அளவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அந்த வகையில் முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக தான் கோவை, நீலகிரியில் இருந்து தேசிய தலைவர் தனது பாராளுமன்ற பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த பகுதி மக்கள் தேச பக்தி உடையவர்கள். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா விரைவில் உலகின் தலைசிறந்த தலைமையாக மாறும் என்றார்.
- இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை உலகம் வியந்து பாராட்டியுள்ளது என தெரிவித்தார்.
கோவை:
பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று கோவை வந்தார். அவரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட பல்வேரு தலைவர்கள் வரவேற்றனர். கோவைப் பொதுக்கூட்டடத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கிச் சென்று ஒரு பெரிய பாய்ச்சலை எடுத்து வருகிறது. இந்தியா இப்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது என்று சொல்லலாம்.
இந்தியா தற்போது வலிமையுடன் முன்னேறி வருகிறது, விரைவில் உலகின் தலைசிறந்த தலைமையாக மாறும். பொம்மைத் தொழிலில் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக நாம் இருந்து வருகிறோம். ரசாயனத் துறை, மருந்துத் துறையிலும் நாம் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காக அன்னை யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை உலகம் வியந்து பாராட்டியுள்ளது என தெரிவித்தார்.
- மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது.
- மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
புனே :
பா.ஜனதா கட்சி 2024-ம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை அந்த கட்சி நிர்ணயித்து உள்ளது. இதனை "மிஷன் 45" என்று மராட்டியத்தில் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து அவர், "எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதனால் பா.ஜனதா "மிஷன் 48" என்று தான் தொடங்கி இருக்க வேண்டும். 45 அல்ல.
ஜே.பி. நட்டா அந்த கட்சியின் தலைவர். அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அந்த கட்சிக்கு உள்ளது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
எனவே பா.ஜனதா தலைவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார்.
மேலும் 'லவ் ஜிகாத்'துக்கு எதிராக சட்டம் இயற்ற கோரி இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் முடிவெடுக்கலாம். யார் எதிர்ப்பு தெரிவித்தனர்?" என்றார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் சமீபத்தில் சட்டசபையில் பேசியபோது, சம்பாஜி மகாராஜாவை மதப்பாதுகாவலர் இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டும் இன்றி அஜித் பவார், சம்பாஜி மகாராஜாவை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், "சுயராஜ்யத்தின் பாதுகாவலராக சத்ரபதி சாம்பாஜியை சமுதாயத்தில் சிலர் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதேபோல ஒரு சிலர் அவரை மத பாதுகாவலர் என அழைத்து அவரது பணிகளை மத கோணத்தில் பார்த்தாலும் அதிலும் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் அவருக்கு தர்ம ரட்ஷகர் அல்லது தர்மவீரர் என்று அடைமொழியை பயன்படுத்தாதது குறித்து சிலர் புகார் கூறுவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை விவாதிக்க எந்த காரணமும் அல்ல" என்றார்.
- பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன.
- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது கவுரவ பிரச்சினையாக கருதப்படுகிறது.
புதுடெல்லி :
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது தடவையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
அதே சமயத்தில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணி நடந்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆண்டு 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. காஷ்மீரிலும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால், 10 மாநிலங்கள் ஆகிவிடும்.
இந்த சட்டசபை தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தலுக்கு அரை இறுதி பந்தயமாக பார்க்கப்படுகின்றன. இவற்றில் வெற்றி பெறுவது கவுரவ பிரச்சினையாக கருதப்படுகிறது.
இந்த தேர்தல்களுக்கான வியூகம் வகுப்பது குறித்து விவாதிப்பதற்காக பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம், இம்மாதம் 16 மற்றும் 17-ந் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தேர்தல்கள் மட்டுமின்றி, ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பா.ஜனதா தேசிய செயற்குழுவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. கட்சி தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார்.
உட்கட்சி விவகாரங்கள் மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேர்தல் தொடர்பான பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேசிய செயற்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றியும் பேசப்பட்டது.
- பதவிக்காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்க பாஜக தேசிய செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது
- 2019 தேர்தல் வெற்றியை விட, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெறும்
புதுடெல்லி:
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் முன்று ஆண்டு பதவிக்காலம் இந்த மாதம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு கட்சித் தலைமையில் மாற்றம் செய்யாமல், நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜக செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக இது தொடர்பாக பரவலாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று பாஜக தலைவரின் பதவி நீட்டிப்பு குறித்த அறிவிப்பை மூத்த தலைவர் அமித் ஷா வெளியிட்டார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்க பாஜக தேசிய செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பின்போது அமித் ஷா கூறினார். 2019 மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை விட, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் நட்டா தலைமையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெறும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறைகேடு செய்கிறது
- மம்தா பானர்ஜி, அரசியல் சட்டத்துக்குட்பட்டு பணியாற்ற வேண்டும்.
கொல்கத்தா:
பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். பதவிக்காலம் நீ்ட்டிக்கப்பட்ட பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. பேதுவதஹரி என்ற இடத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. உண்மையில், 100 நாள் வேலைத்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றுக்கான மத்திய அரசு நிதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறைகேடு செய்கிறது. அதுபற்றிய விசாரணை தொடங்கப்பட்டவுடன், மத்திய அரசு மீது வீண்பழி போடுகிறது.
முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அரசியல் சட்டத்துக்குட்பட்டு பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால், மக்களின் கோபத்தை சந்திக்க நேரிடும். கொல்கத்தா ஐகோர்ட்டின் சில தீர்ப்புகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராததற்காக அவர்கள் போராடுவது வெட்கக்கேடு என்று அவர் பேசினார்.