search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaliamman temple"

    • காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
    • தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.

    தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.

    தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது. 

    • மடப்பரம் காளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் போது உதவி ஆணையர் தங்க கொலுசு திருடினார்.
    • அதன்பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    தமிழக அரசின் அறநிலை யத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிர சித்தி பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அப்போது கோவில் அறநி லையத்துறை உதவி ஆணை யர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த தலா நான்கு சவரன் எடையுள்ள இரு தங்க கொலுசுகளை மறைத்து வைப்பது தெரிந்தது.

    இதுகுறித்து அங்கிருந்து அலுவலர்கள் கேட்டபோது நான்கு சவரன் எடையுள்ள ஒரு கொலுசை மட்டும் வில்வமூர்த்தி திரும்ப ஒப்ப டைத்துள்ளார். மற்றொரு கொலுசை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படு கிறது. உண்டியல் எண்ணும் இடத்தில் இருந்த கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வில்வ மூர்த்தி தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மடப்புரம் கோவில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிவகங்கை இணை ஆணையருக்கு இச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மானாமதுரை அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வில்வமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 மணிக்கு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.
    • படைவீட்டம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி காளி கோவிலை அடைந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் 63- ம் ஆண்டு செடல் மற்றும் சாகை வார்த்தல் பிரம்மோற்சவ விழா கடந்த 31 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் மாலை அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலம் லிங்கா ரெட்டி பாளையம் படைவீட்டம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி காளி கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. வருகிற 8-ந் தேதி செடல் உற்சவம் மற்றும் திருத்தேர் உற்சவம் நடக்கிறது. 9 -ந் தேதி மஞ்சள் நீர் விழாவும், 15 -ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

    • குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.
    • காளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது கோவிலின் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜை, கோவிலின் பரிகார பூஜைகளுடன் கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து பூர்ணாகுதிக்கு பிறகு மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    தொடர்ந்து கர்ப்ப கிரகத்தில் அமைந்துள்ள தில்லை காளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை வழுவூர் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான் அருகே உள்ள காளியம்மன் ேகாவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரைபுதூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு 
    2 நாட்கள் பிரசாந்த்சர்மா தலைமையில் யாகபூஜை நடைபெற்றது. 

    இன்று காலை மேளதாளத்துடன் புனித நீர்க் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்து கோவில் கோபுரத்தின் கும்ப கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி  கும்பாபிஷேகம் நடந்தது. 

    இதைத்தொடர்ந்து காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 

    இவ்விழாவில் டாக்டர் மகேந்திரன்,ராஜேந்திரன் ,ஊராட்சி மன்ற தலைவர்மஞ்சுளாஅய்யப்பன்,துணைத்தலைவர் கிருஷ்ணன் ,ஊராட்சி 
    செயலாளர்கள்முனிராஜ்,திருச்செந்தில், செல்வம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்வது கடந்த பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
    • மேளதாளத்துடன் ஊர்வ லமாக பச்சாபாளையம் மாகாளி அம்மன் கோவிலுக்கு, கொண்டு வரப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, அவிநாசி, கொடுமுடி, கோவை வெள்ளியங்கிரி மலை, உள்பட பல்வேறு புனித தலங்களிலிருந்து தீர்த்த கலசங்கள் முத்தரித்து கொண்டு வந்து மாகாளிய ம்மன், மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்வது கடந்த பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வருடமும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த கலசங்கள் பல்லடம் மங்கலம் ரோடு ஆனந்த விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு, பின்னர் மேளதாளத்துடன் ஊர்வ லமாக பச்சாபாளையம் மாகாளி அம்மன் கோவிலுக்கு, கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தீர்த்த கலசங்களில் இருந்த தீர்த்தநீர் மாகாளியம்மன், மாரியம்மன் சாமிகளுக்கு ஊற்றி தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாகாளி யம்மன், மாரியம்மனை வழிபட்டனர். அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மொடக்குறிச்சி கரிய காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மொடக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கரிய காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி 24-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, திங்கட்கிழமை காலை கொடிகட்டுதல், இரவு குதிரை துலுக்கு பிடித்தல், அம்மை அழைத்தல், கிடாய் துளுக்கு பிடித்தல், ஊஞ்சல் பாட்டு, சுவாமி திருவீதிஉலா நடந்தது.

    கடந்த 27-ந் தேதி இரவு சுவாமி திருவீதிஉலா, 28-ந் தேதி சாமி ரதம் ஏறுதல், தேர் நிலை பெயர்தல் நடந்தது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை தேர் நிலை சேர்க்கப்பட்டது.

    இன்று (வெள்ளிக் கிழமை) மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்குதல், சாமி புகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    காளியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர்.
    மணப்பாறையில், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுவதல், மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    அதைத்தொடர்ந்து அன்னதானமும், மாலை பெண்கள் நடத்தும் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கரகம் களைதல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். 
    சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.
    சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.

    திருமணி முத்தாறு கரையில் சலவைத் தொழிலாளர்கள் சலவை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சலவைத் தொழிலாளியின் மகள், கரையில் இருந்த குடையை எடுக்க முடியாமல் திணறினார். குடையை தூக்க முடியாததன் காரணத்தை எண்ணி அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.

    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நான் தான் அம்மன் வந்திருக்கிறேன். எனக்குக் குஞ்சன் காட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டு’ என்றது அந்தக் குரல். சலவைத் தொழிலாளியின் மகள் கொஞ்சம் திகைத்தாளும், அம்மனின் கூற்றை ஏற்று குஞ்சன்காடு வந்து சேர்ந்தாள்.

    இதற்கிடையில் மகளைக் காணாது சலவைத் தொழிலாளி ஊர் மக்களுடன் தேடி அலைந்தார். அப்போது அடர்ந்த காட்டில் ஓரிடத்தில் கழுகுகள் கூட்டமாக வட்டமிட்டிருந்ததைக் கண்டனர். அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சலவைத் தொழிலாளியின் மகள், தன்னிலை மறந்து நின்றிருந்தாள். அவளை ஊர் மக்கள் சகஜ நிலைக்கு கொண்டு வந்து, ‘என்ன நடந்தது?’ என்று கேட்டனர்.

    உடனே அவள் நடந்த அனைத்தையும் ஊர் மக்களிடம் கூறினாள். அதே நேரத்தில் அங்கு அசரீரி ஒலித்தது. ‘நான் இங்கு எழுந்தருளியுள்ளேன். இங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள்’ என்றது அந்தக் குரல்.

    அந்தப் பகுதியில் பெரியவரான ஒருவர் ‘இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாய். நகர்புறத்தில் உனக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறேன்’ என்றார்.

    ஆனால் அம்மனோ, ‘நான் இங்குதான் நிரந்தரமாக வாசம் செய்ய விரும்புகிறேன்’ என்றாள். மேலும் சலவைத் தொழிலாளியின் மகளது கணவரே தனக்கு பூஜை செய்யட்டும்’ என்றும் கூறினாள்.

    அம்மனின் ஆசைப்படியே அங்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அம்மன் ‘குஞ்சுக் காளியம்மன்’ என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

    சேலத்தில் பிரசித்தி பெற்றதான, கோட்டை மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்ததாக, இந்த ஆலயத்தில் நிறைய பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் இருந்து தான் அனைத்து ஆலயங்களுக்கும் சக்தி அழைப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயக் கருவறையில் அம்மன் அமர்ந்த கோலத்தில் இரு கரங்களுடன், புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கின்றார். சிரசில் அக்னி சூலை ஏந்தி அருள்பாலிக்கிறார். குஞ்சுக் காளியம்மன், குஞ்சு மாரியம்மன் இருவரும் ஒரே சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பது இவ்வாலய சிறப்பு அம்சமாகும்.

    ஒரு தோட்டக்காரர் கனவில் வந்து, தோட்டத்தில் உள்ள தன்னை குஞ்சுக் காளியம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு அருளியதன் அடிப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார்.

    இவ்வாலயத்தில் உள்ள அரசு மற்றும் வேம்பு மரத்தடியில் ராகு மற்றும் கேது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ராகு- கேது தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பூஜை செய்து பலனடைகின்றனர்.

    விநாயகர் சன்னிதியில் வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபட மக்களுக்கு ஏற்படும் விஷக் காய்ச்சல் தீருகிறது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். திருமணத்தடை விலக, தொழிலில் மேன்மை பெற, நினைத்த காரியம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, அம்மனை மனமார வேண்டி காரிய வெற்றியடைகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தும் நிகழ்வு, முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. அம்மனுக்கு ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தி, அம்மனுக்கு அணிவித்த வளையல்களை, குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்களிடம் கொடுத்து அணியச் செய்கிறார்கள்.

    இத்தலத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் அபிஷேகத்தில் 108 கிலோ மஞ்சள்பொடி உபயோகப்படுத்தப்படுகிறது.

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக அரசு மற்றும் வேம்பு மரங்கள் உள்ளன.

    இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோவில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். 
    ×