என் மலர்
நீங்கள் தேடியது "Kamal Hassan"
- 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து.
- நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது என்றார்.
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது.
2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு ஆதரவாக பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தீர்ப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:-
இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் நிறைய சோதனைகளையும், நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான தங்களின் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும்.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது எனவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
- மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
- தி.மு.க. கூட்டணிக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறோம் என்றார் கமல்ஹாசன்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் 1 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அந்த உடன்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கமல்ஹாசனும் கையெழுத்திட்டனர்.
மேலும் இந்த உடன்பாட்டில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விட்டு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எங்கள் கட்சி சார்பிலும் வேறு யாரும் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் இல்லை. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என தெரிவித்தார்.
- சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.
- மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவியது. ஆனால், எந்த கட்சியில் யார் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்கிற கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், பார்வர்ட் ப்ளாக் கட்சிகள், தேமுதிக ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.
பாஜக கூட்டணியில் தமாகா, பாமக, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்தன.
ஆனால், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைவதற்கான முடிவு எடுப்பதில் இழுப்பறியாக இருந்தது.
தி.மு.க. தவிர அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தனித் தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன. ஆனால், சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த கட்சியின் தலைவர் சரத்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தனது கட்சியை கடந்த மார்ச் 12ம் தேதி திடீரென பாஜகவுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பாஜக வேட்பாளராக விருதுநகர் தொகுதியானது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் ராதிகா சரத்குமார் தோல்வியடைந்தார்.
இதேபோல், 2024 மக்களவை தேர்தலுக்கான கூட்டணியில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட தென் சென்னை, கோவை ஆகிய தொகுதிகளை கமல் கேட்டதாகவும் அதற்கு திமுக மறுத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், அதற்கு பதிலாக மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இதற்கு மக்கள் நீதி மய்யம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தேர்தலில் பரப்புரை மேற்கொண்டது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார்.
இறுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி சிலை அருகே நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னதாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே போராட்டம் நடத்த வந்தவர்களிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது, மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இருப்பினும் அக்கட்சி நிர்வாகிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உருவபொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இந்து மகா சபா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து,அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் அருகே உள்ளது அதிகத்தூர் கிராமம். இந்த கிராமத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தத்தெடுத்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும் இந்திராநகர் பகுதியில் குடிநீரும் சரிவர வினியோகிக்கப்படவில்லை.
இதேபோல் அடிக்கடி அதிக மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதன பொருட்களும் சேதம் அடைந்து வந்தன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று இரவு தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் புழுக்கத்தில் மக்கள் தவித்தனர்.
மின்தடையை கண்டித்தும், குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை மேல்நல்லாத்தூர்- அகரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் கிடைக்கவும், மின் தடையை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதிக்கு 3 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. ஊராட்சி செயலர் சரிவர தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை.
இதுபற்றி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பலன் இல்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அறிவிக்கப்படாத மின் தடையாலும் பாதிக்கப்பட்டு உள்ளோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி நடிகர் கமல்ஹாசனுக்கும் தெரியப்படுத்த உள்ளோம்” என்றனர். #Kamalhassan
தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.

‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்பே, கமல்ஹாசனின் பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #TNAssemblyElection #KamalHassan
ஆலந்தூர:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற செல்கிறேன்.
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அழுத்தமான அரசு வேண்டும். இதனை கட்டுப்படுத்த காவல் துறைக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் மக்களை சந்திக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
தீர்ப்பு என்பது மக்கள் கையில் தான் உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பது என்பது நல்ல விஷயம் எனக்கு கூட ஆரத்தி எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுப்பது தவறு.
நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுக்கென்று முழுமையான தனி காவல் நிலையம் செயல்படும். ஏற்கனவே உழவர் சந்தை என்று ஒன்று உள்ளது. ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை. மற்ற கட்சிகள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.அதைவிட்டுவிட மாட்டோம்.
தேர்தல் நேரத்தில் பி.எம். மோடி படம் வெளியிட காங்கிரஸ் தடை கேட்டுள்ளது. இது சரியானது தான். தேர்தலில் அந்த கட்சிக்கு இது விளம்பரம் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம். தே.மு.தி.க., இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. வேறு சிலபேர் எங்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நல்லவர்கள் கூட நிற்பார்கள். எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #kamalHaasan
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு 159 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் உறவினர்கள் தான். குறிப்பாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வலுவான உறவினர்கள். எனக்கு மீனவர்களின் மீன்பிடி தொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தெரியும்.
கடந்த காலத்தில் நான் நடித்த கடல் மீன்கள் படத்திற்காக வலை விரித்து மீன் பிடிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்தவன். எனவே நான் மீனவர்களின் சீடன். சினிமாவிற்காக மட்டுமல்ல. தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் நானே வலை விரித்து மீன் பிடித்து அவர்களது கஷ்டங்களை நன்கு அறிந்தவன்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. அரசு கட்டங்கள் சேதமடைந்த நிலையில் பிரிக்கப்பட்ட காக்கா கூடு போல் உள்ளன. மேலும் பல இடங்களில் மரங்களும் அகற்றப்படாமல் உள்ளன.
புயல் நிவாரண பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இந்த செயல் வேதனை அளிக்கிறது. புயலால் பாதித்த மக்களுக்குஅரசு என்ன செய்தது என்று தெரியவில்லை.
வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் கொடுப்பது கொடையோ, தர்மமோ அல்ல. நாங்கள் பட்ட கடன் ஆகும்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்படும் பொருட்களும், நிவாரண உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் நேர்மையான முறையில் சம்பாதித்து வரிசெலுத்தி வெள்ளை பணத்தில் நான் (கறுப்பு பணம் அல்ல) உதவிகள் செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வதாராத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இது தேர்தலுக்காக கூறப்படும் செய்தி அல்ல. மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம் .
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நடிகை ஸ்ரீபிரியா, மாவட்ட பொறுப்பாளர் ஆனாஸ், வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானவன்மாதேவி மீனர கிராம பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். #Kamalhassan