search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamaraj birthday"

    • திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா நடந்தது.
    • பள்ளி தலைமையாசிரியை மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் கர்ம–வீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி–களுக்கு மதுரை ஆனந்தம் செயலாளர் செல்வராஜ் பரிசு–களை வழங்கினார். விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை மற்றும் மாணவ, மாணவிகள், ஊர் பெரியோர்கள் உள்பட ஏராள–மானோர் கலந்துகொண்டனர்.

    • திருமழிசையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • மாங்காட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    சென்னை:

    அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் சென்னையில் 6 இடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காட்டுப்பாக்கம், போரூர், திருமழிசை, மாங்காடு ஆகிய இடங்களில் அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் தலைமையில், பொதுச்செயலாளர் வைரவன் முன்னிலையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருமழிசையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காட்டுப்பாக்கம், போரூர் ஆகிய இடங்களில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. மாங்காட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பூந்தமல்லி வட்டார நாடார் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.எல்.லட்சுமணன் தலைமையில், அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் முன்னிலையில் பூந்தமல்லியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் காமராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளில் அகில இந்திய நாடார் மகாஜன சபை பொருளாளர் ஜெயராமன், தலைமை நிலைய செயலாளர் வி.பி.விஜய், காப்பாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஏ.பி.துரை, மாநில செயலாளர்கள் ஆனந்த கிருஷ்ணன், வேல் குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ராஜகனி, மாநில இளைஞர் அணி தலைவர் மைக்கேல்ராஜ், மாநில இளைஞர் அணி துணை தலைவர் தினேஷ் பாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அபி, மாநில கலை பிரிவு செயலா ளர் பிரகாஷ், சென்னை மண்டல செயலாளர் கமலஹாசன், கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் சரவணன், மகளிர் அணி செயலாளர் சீதாலட்சுமி, மாநில உதவிக் குழு செயலாளர் ஆனந்தபாலன், மாநில தற்காப்பு பிரிவு செயலாளர் சரவணன், தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சேவியர், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விக்கி, காட்டுப்பாக்கம் பகுதி செயலாளர் சுந்தரகுமார், கவுரவ ஆலோசகர்கள் காந்தி மனகரன், அய்யா துரை, மதுரவாயல் தொகுதி தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளியின் மேலாண் இயக்குனர் டாக்டர் கிரண்குமார் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எழிலரசி தலமை தாங்கினார். பள்ளியின் மேலாண் இயக்குனர் டாக்டர் கிரண்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வில்லியம் ரிச்சர்ட், பா.ஜனதா ஓ.பி.சி. அணி கிருஷ்ணராஜ், தொழிலதிபர் முருகன், சீனிவாச மூர்த்தி, சமூக சேவகி பிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

    விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப் பட்டது. வெற்றி பெற்றவர்க ளுக்கு சிறப்பு விருந்தி னர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.முடிவில் தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.

    விழா விற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.

    • மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து காமராஜர் சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், சென்னையில் பொது மக்களுக்கு 50 - க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், உபகரண பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நங்கநல்லூர் நேரு ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ராயபுரம் ஜி. ஏ. ரோட்டில் அமைந்து உள்ள காமராஜர் சிலை, திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு திருவொற்றியூர் நாடார் உறவின்முறை சார்பில் பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து காமராஜர் சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் உள்ள சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுபாஷ் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் 121 கிலோ எடை கொண்ட மெகா லட்டு பெருந்தலைவர் இல்லத்தில் படைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பழனி முருகன், மாவட்ட பொருளாளர் மனோகரன் ஏற்பாட்டில் கார்த்திக் நாராயணன் அன்னதானம் வழங்கினார். எழில் நகர் நாடார் பேரவை சார்பில் காமராஜர் படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து அறுசுவை உணவு அன்னதானம் வழங்கினார்.

    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • வாலாஜாபாத் வட்டார நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் காமராஜர் நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜ் நினைவு அறக்கட்டளையினர் காஞ்சிபுரம் நாடார் சங்கத்துடன் இணைந்து சங்க தலைவர் ராமேஸ்வரம் தலைமையில் காமராஜர் சிலைக்கு புது ஆடைகள் அணிவித்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. செயலாளர் வேலுமணி, பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை குமரகுருநாதன் நிர்வாகிகள் நாதன், காமராஜ், பார்த்தசாரதி, வஜ்ரவேல் இருந்தனர். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத். பா. கணேசன் தலைமையில் காமராஜர் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் வட்டார நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • காமராஜர் சிலை இல்லாத இடங்களில் மறைந்த தலைவரின் அலங்கரிக்கப்பட்ட படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்படும்.
    • மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தலைவர் என். ஆர். தனபாலன் வழங்குகிறார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 121 இடங்களில் தலா 121 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது குறித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் 121இடங்களில் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், அன்னதானம், மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், நலிந்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி கட்டணம், கடந்த ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

    காமராஜர் சிலை இல்லாத இடங்களில் மறைந்த தலைவரின் அலங்கரிக்கப்பட்ட படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்படும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் நாளை (15-ந்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணி முதல் சேர்வைக்காரன் மடம், முக்கானி, திருச்செந்தூர், சாத்தான்குளம், பேய்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி பெரிய காய்கறி மார்க்கெட், பழைய பஸ்ஸ்டாண்டு, வ.உசி. மார்க்கெட், தருவைகுளம், பனையூர், குளத்தூர் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலவச அரிசி, அன்னதானம், வேட்டி சேலை, தையல் இயந்திரங்கள், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம், பேச்சு போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தலைவர் என். ஆர். தனபாலன் வழங்குகிறார்.

    சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாநில இளைஞர் அணித்தலைவர் என் ஆர்.டி.பிரேம்குமார் தலைமையில் மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ் குமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தி.நகர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். பின்னர் சென்னை கோயம்பேடு, வானகரம். மதுரவாயல், விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர் போன்ற இடங்களில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அன்னதானம், சர்க்கரை பொங்கல், இலவச வேட்டி சேலை, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக் போன்ற கல்வி உபகரணங்களை வழங்குகிறார்கள்.

    இது போன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பெருந் தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு பெற்றது.
    • 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப்பரிசு,கேடயம் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாம்பியன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி மாதாங்கோவில் தெரு, எட்டையாபுரம் சாலை, புதூர்ரோடு, ரெயில் நிலையம், வழியாக எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு பெற்றது.

    இதில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், 2-வது பரிசு 2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 1,000 மற்றும் 7 பேர்களுக்கு ஊக்க பரிசாக ரூ. 500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி செயலர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி உதவி பேராசிரியர் சந்திரன், கல்லூரி அனைத்துதுறை உதவி பேராசியர்கள் செய்திருந்தனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கு காமராஜர் விருது வழங்குகிறார்.
    • பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார்.

    விருதுநகர்:

    விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா நாளை நடக்கிறது. இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை அவரது 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவு இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள அவரது நூற்றாண்டு விழா மணிமண்டபமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட செய்திதுறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் அமைச்சர்கள், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். பெண்களின் நூற்பு வேள்வியும் நடைபெறுகிறது.

    காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி., விருதுநகர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கு காமராஜர் விருது வழங்குகிறார். மேலும் சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர், நகர்ப்புற, கிராம செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

    இதனை தொடர்ந்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜாசொக்கர், ரங்கசாமி, சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

    • காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடந்தது.
    • பேச்சு போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சேரன்மகாதேவி:

    காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் என்.எம்.எக்ஸ். அகாடமியும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் இணைந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டிகளில் சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி வசுந்தரா 2-ம் இடத்தை பிடித்து விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அவருக்கு அதற்கான தகுதி சான்றும், ரூ.1,500 ரொக்கப்பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

    மாணவியை சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் தலைமை ஆசிரியர் மரகதவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் நெய்னா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவி சரிதாதேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவியை பாராட்டினர்.

    • விழாவை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், முதியோர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.
    • சிறப்பு நிகழ்ச்சியாக 120 பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் காமராஜருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்

    திசையன்விளை:

    திசையன்விளை கிங்மேக்கர் காமராஜர் டிரஸ்ட் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. டிரஸ்ட் தலைவர் செல்வபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும், முதியோர்களுக்கு ஆடைகளையும் வழங்கினார்.

    சிறப்பு நிகழ்ச்சியாக 120 பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் காமராஜருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். விழாவில் வியாபாரிகள் சங்கமாநில இணைச்செயலாளர் தங்கையாகணேசன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், வக்கீல் ஜெயபாலன், காமராஜர் டிரஸ்ட் துணைத்தலைவர் ராஜபாண்டி, பொதுச்செயலாளர் முருகன், துணைச்செயலாளர்கள் சித்திரை கணேசன், நித்யானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காமராஜர் பிறந்தநாளில் ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளை மதுரை மேயர் இந்திராணி வழங்கினார்.
    • அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    மதுரை

    பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா, தெப்பக்குளம் காமராஜர் அறநிலையத்தில், நடந்தது.

    அறநிலையத்தின் தலைவர் ஜெமினி எஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் மற்றும் பொறுப்பு செயலாளர் பி.தர்மராஜ், துணைத்தலைவர் சி.பாஸ்கரன், துணைச்செயலாளர் பி.செந்தில்குமார் விடுதிக்குழு செயலாளர் பி.குமார் ஆகியோர் பேசினர்.

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் 1500 இலவ சேலைகளை ஏழை பெண்களுக்கு வழங்கினார். மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் எம்.முகேஷ் சர்மா, அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக் குழு தலைவர் மு.சிதம்பர பாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    • ராக்கெட் ராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • பெண்களுக்கு தையல் மிஷன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் 120-வத பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பனங்காட்டுப்படை கட்சி இளைஞரணி சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    திசையன்விளை நேருஜி கலையரங்கத்தில் நேற்று மாலை நடந்த இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பனங்காட்டுப்படை கட்சி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா நாடார் மற்றும் தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை பனங்காட்டுப்படை கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார் செய்திருந்தார். விழாவில் மாநில பொருளாளர் அருண்பாபு நாடார், மாநில இளைஞரணி செயலாளர் சத்திரியன்பாபு நாடார், தொழிலதிபர் பரமசிவன் நாடார், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் நாடார், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம் நாடார், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஸ்ரீகாந்த் நாடார், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் நாராயணன் நாடார் மற்றும் நிர்வாகிகள் ஜெப்ரின் நாடார், தங்கதுரை நாடார், முத்துக்குட்டி நாடார், முத்துநாடார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவுக்கு வந்த ராக்கெட் ராஜா நாடாருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. பலத்த கரகோஷங்களுக்கு இடையே அவர் காமராஜரின் பெருமை குறித்து மேடையில் பேசினார்.

    இந்த விழாவின் போது மதியம் 1 மணி முதல் 6 மணி வரை பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்களுக்கு தையல் மிஷன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    ×