என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapped"

    • திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
    • சிறுமி வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அதில் தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாக தெரிவித்திருந்தனர். சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகசாமி மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி னர். மேலும் வீட்டில் இருந்த அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.

    அந்த செல்போன் சிக்னல் கருப்பாயூரணி பகுதியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமி வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கருப்பாயூரணியைச் சேர்ந்த கரண் (வயது 25) எனவும், இவர் மீது மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மாட்டுத்தாவணி பகுதியில் ரவுடியாக வலம் வந்த கரண் சிறுமி வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

    இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளாமல் குற்ற வழக்குகள் உள்ள கரனை காதலித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறி கரனுடன் சென்றுள்ளார். வெளியூர் சென்ற இருவரும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அப்போது சிறுமியை கரண் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கரணை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

    • சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
    • இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மூத்த மகளின் மகளான 13 வயது சிறுமியை வளர்த்து வந்தார். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    கடந்த 4 மாதங்களாக சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் மூதாட்டி அவரை வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் அங்கு தாயாரிடம் சண்டையிட்ட சிறுமி மீண்டும் விஜயநாராயணத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.

    சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் களக்காடு அருகே மூங்கிலடி வெப்பல் கீழத்தெருவை சேர்ந்த பால்துரை மகன் பிரதீப் (20) என்பவருக்கும், சிறுமிக்கும் செல்போன் மூலம் பழக்கம் இருந்து வந்ததும், அவர் சிறுமியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்றதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து, அவரையும் சிறுமியையும் தேடி வருகின்றனர்.

    • பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.

    திருப்பூர் :

    சேலம் கெங்கவள்ளி செந்தாரப்பட்டியை சேர்ந்த, கார்த்திக்,(25) டிரைவர். இவர் திருப்பூர்,பெருமாநல்லுார் அருகே கருக்கன்காட்டு ப்புதூரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அந்த பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். சம்பவத்தன்று பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அவிநாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.பின்னர் கார்த்திக்கை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
    • ரூ.40,000 பணம், வெள்ளி பிரேஸ்லெட், உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    பல்லடம் :

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல் (வயது 35). இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், தற்போது மிகவும் சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.40,000 பணம், வெள்ளி பிரேஸ்லெட், உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவரது மனைவி சுக்லா சர்தார்(35)என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் நான்கு நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.
    • இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார். இவர் அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.

    இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது. இதனால் அச்சமடைந்த வினோத்குமார் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.தனக்கு மிரட்டல் விடுத்த மணல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் அந்த கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு மணல் கடத்தல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
    • போலீசார் மாணவியின் காதலன் உட்பட அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை அய்யண்ண கவுண்டர் விதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    நேற்று மாணவிக்கு பிறந்தநாள். இதனையடுத்து மாணவி அவரது காதலனுடன் வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள பூங்காவிற்கு சென்றார்.

    அங்கே மாணவியின் காதலன் அவரது நண்பர்களுடன் மாணவிக்காக காத்திருந்தார். மாணவி வந்ததும் அவர்கள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி மாணவியின் பிறந்தநாளை கொண்டாடினர்.

    அப்போது அவர்கள் சந்தோஷத்தில் சத்தம் போட்டனர். இதனை அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் பார்த்து, இவர்களின் அருகே வந்து இங்கே சத்தம் போடக்கூடாது என எச்சரித்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீட்டுக்கு சென்றதும் வாலிபரை காதலிக்கும் விஷயம் மாணவியின் தந்தைக்கு தெரிய வந்தது.

    இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதுகுறித்து மாணவி தனது காதலனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் உடனே வீட்டிற்கு வந்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்.

    வாலிபர் தனது நண்பர்கள் 3 பேருடன் மாணவியின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவரை வெளியே அழை த்துச் செல்ல முயன்றார்.

    அப்போது அவரது தந்தை தடுத்து நிறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியின் தந்தையை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து மாணவியை அழைத்து சென்றார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியின் காதலன் உட்பட அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மாணவி அதன்பிறகு வெளியே சென்றவர் மாயமானார்.
    • மாணவியின் தாய் அப்பகுதியை சேர்ந்த வாலிபரின் மீது அளித்த கடத்தல் புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த சன்னாசிராஜா மகள் சங்கீதா(17). இவர் கெங்குவார்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு வெளியே சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை். இதுகுறித்து மாணவியின் தாய் மகேஸ்வரி தேனி போலீசில் புகார் அளித்தார். அந்தபுகாரில் தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் என்பவர்தான் தனது மகளை கடத்திச்சென்றிருக்ககூடும். எனவே அவரை கண்டுபிடித்து எனது மகளை மீட்டு தரவேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் சுருளிபட்டி 2-வது வார்டு வடக்குதெருவை சேர்ந்த சிரஞ்சீவி மகள் யுகேஸ்வரி(18). இவர் கம்பத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் கவுசல்யா ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.

    கரூரில் பட்டப்பகதில் அரசு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் மாணவியை கடத்தியுள்ளனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    கல்லூரி மாணவியை கடத்திய ஆம்னி கார் கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பரமத்தி வேலூர் தாலுகாவில் கிராவல் மண் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தியிலிருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் ஆர்த்தி மற்றும் உதவியாளர் சுதாகர் ஆகியோர் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கிராவல் மண் எடுத்து வந்து தெரியவந்தது. அதிகாரிகளை பார்த்ததும் மினி லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மினி லாரியையும், அதிலிருந்த கிராவல் மண்ணையும் பறிமுதல் செய்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மினி லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம், சோமனூர் ரோடு, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (55) என்பவரை தேடி வருகின்றனர்.
    • ஜெயபால் சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார்.
    • ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 41). மாட்டு வியாபாரி.

    மாயம்

    இவர் கடந்த 5-ந் தேதி நெல்லை மேலப்பாளையம் சந்தைக்கு வந்தார். சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார்.

    அங்கிருந்து அவரது மனைவி ராமக்கனி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் வீட்டிற்கு வர நேரமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டிற்கு செல்லவில்லை.

    பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மேலப்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை யாரேனும் கடத்திசென்றார்களா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஜெயபாலின் செல்போன் எண் மூலமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    மாணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்த அரவிந்தன் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் கோவைக்கு வந்த அரவிந்தன் திருமண ஆசை காட்டி மாணவியை கடந்த 6-ந் தேதி கடத்தி சென்றார். மாணவியை அவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்.

    பின்னர் அரவிந்தன் மாணவியுடன் அந்த பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அங்கு வைத்து மாணவியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இது குறித்து மாணவி செல்போன் மூலமாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தான் இருக்கும் இடத்தையும் கூறினார். உடனடியாக மாணவியின் பெற்றோர் அவர் தங்கி இருந்த இடத்துக்கு சென்று அவரை மீட்டனர். பின்னர் அரவிந்தனை நெகமம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் 17 வயது மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கற்பழித்த அரவிந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • மதுரை அருகே அக்காள்-தம்பியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகரைச் ேசர்ந்தவர் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

    அதில், தனது 14 வயது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரையும் காணவில்லை. முதல் நாள் இரவு 10 மணி வரை வீட்டில் இருந்தனர். அதன் பின்பு இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் இதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் மவுனம் என்ற முனியசாமி (வயது24) அக்காள் மற்றும் தம்பியை கடத்திச்சென்றது தெரியவந்தது.

    போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மவுனம் என்ற முனியசாமியை கைது செய்தனர். அக்காள்-தம்பி இருவரும் மீட்கப்பட்டனர்.

    கைதான முனியசாமி 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மாணவியையும், அவரது தம்பியையும் கடத்திச்சென்றது தெரியவந்தது.

    புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து கடத்திச் செல்லப்பட்ட அக்காள் மற்றும் தம்பியை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×