என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "labor"
- கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருகிறது.
கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இது அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார்.
We're reducing the number of low-wage, temporary foreign workers in Canada.The labour market has changed. Now is the time for our businesses to invest in Canadian workers and youth.
— Justin Trudeau (@JustinTrudeau) August 26, 2024
தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகம் பேர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர். இந்த நிலையில்தான் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் மற்ற சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை ஓரளவு கிடைத்துள்ளது.
அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும் அந்த நபரின் டி.என்.ஏவும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கக்கூடும்.
- நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.
பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நெடுகிலும் வலுவாக கட்டமைப்பை ஏற்படுத்தி தன்னை ஸ்திரத்தன்மையுடன் நிறுவிக்கொண்டுள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமயான போட்டி நிலவி வருகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொருட்களுக்கான தேவை மனிதர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த வகை நிறுவனங்களின் தேவையும் மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பு வலுவடைத்திருந்தாலும் நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் அதன் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் வரும் நிலையில் வெயிலின் தாக்கம் தொழிலாளர்களுக்கு பெருஞ்சுமையாக மாறி வருகிறது. இந்நிலையில் அமேசான் இந்தியா தொழிலாளர்களுக்கு வேலையிடத்தில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அமேசான் இந்தியா தொழிலாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திர குமார் கூறுகையில், வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது வெப்ப அலை வீசும் தற்போதைய காலச் சூழலில் தொழிலாளர்களுக்கு அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகிறது.
ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து நகர்த்தும் அமேசான் கிடங்குகள் நாடு முழுவதும் பரவி உள்ள நிலையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் கழிவறையை பயன்படுத்துவதற்குக் கூட மறுக்கப்பட்டு இடைவேளை இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களில் எழுப்பினார்கள்.
திருவாடானை
திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகு தியில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத் தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தாலுகா தலைவர் அருள்சாமி தலை மையில் மாவட்ட தலைவர் கலையரசன், தாலுகா செய லாளர் சேதுராமன், தாலுகா பொருளாளர் நாகநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதியை வழங்க வேண்டும், வேலைக்கான சம்பளத்தை 15 நாட்களுக் குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை திட்டத்தில் பணி செய்பவர்க ளுக்கு 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண் டன கோஷங்களில் எழுப்பி னார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் ரத்தி னம், முருகன், சகாயமாதா, சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி
- நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (45).
நேற்று சுப்பிரமணி பரமத்தி அருகே உள்ள கோனூருக்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கந்தம்பாளையத்திற்கு மொபட்டில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.
இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் சங்கர் நகரை சேர்ந்த மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்
- 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்
தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் அறிவுரையின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவ்வாறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்று ஆய்வு நடத்தினார்கள்.
இதில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 52 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 32 உணவு நிறுவனங்கள், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
- 2025-க்குள் மயிலாடுதுறையை குழந்தை தொழிலாளர் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலககூட்ட ரங்கில் குழந்தை தொழி லாளர் முறையினை அகற்று வதற்காக உறுதிமொழி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழும் நிலையில் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க 2025-ம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை முதல் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன் , மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கூலித்தொழிலாளி கடந்த 7ந் தேதி வரட்டுகரை காட்டுப்பகுதியில் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- முன்விரோதம் காரணமாக மோகனசுந்தரத்தை கொலை செய்தது தெரிய வந்தது.
வெள்ளகோவில் :
முத்தூர் அருகே உள்ள வரட்டு கரை பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 43) .கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7ந் தேதி அன்று வரட்டுகரை காட்டுப்பகுதியில் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக மோகனசுந்தரத்தை வரட்டுகரை சக்திவேல் மகன் அன்பு குமார் (35), அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் பிரவீன் குமார் (32), முத்தூர் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ் (44), சுரேஷ் (38) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
நேற்று காலை போலீசார் அன்புக்குமாரை கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மாதம் 23ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட சிறையில் அன்பு குமார் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள குப்புராஜ், சுரேஷ், பிரவீன் குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
- சேவூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி :
ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி ஆம்பூதி பகுதியைச் சோ்ந்த அம்மாசை மகன் ராஜன் (வயது 50). இவா் அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நீலிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, புளியம்பட்டியில் இருந்து அன்னூா் நோக்கி சென்ற லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது
- தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் தவிர்த்து அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழில் தான் பிரதானம்.தென்னை, வாழை, கரும்பு, பருத்தி, சோளம், நிலக்கடலை என அந்தந்த பகுதியின் மண், மழை வளத்துக்கேற்ப பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உழவு செய்வது, களை எடுப்பது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, விளைபொரு ட்களை அறுவடை செய்வது, சந்தைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் தான் முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். கிராமங்களில் கல், மண் வரப்பு, தென்னை மரங்களை சுற்றி அகழி எடுப்பது, உரக்குழி அமைப்பது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, சாலையோரம் உள்ள புதர் செடிகளை வெட்டுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதலாக 50 நாள் வேலை நாள் உயர்த்தப்படும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 100 நாள் திட்டத்தில், ஊராட்சிகளில் வேலை அதிகமுள்ள சமயங்களில் தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர் என்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 100 நாள் திட்டத்தில் பல இடங்களில் பணிகள் முறைப்படி நடப்பதில்லை.100 நாள் வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணி, சாலை அமைத்தல் போன்ற கடினமான பணிகள், தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு, உடல் உழைப்பு தொழிலாளர்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 நாள் திட்ட தொழிலாளர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் 100 நாள் திட்டம் தான். எனவே 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய தொழிலில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
அரசு வழங்கும் சம்பளத்துக்கு நிகரான சம்பளம் வழங்க விவசாயிகளும் தயாராக உள்ளனர். இதன் மூலம், தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயமும் செழிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தொழிலாளர் நல நிதி சட்டம் 1972 பிரிவு 2(டி)-ன் படி தொழிற்சாலைகள் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்
- தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை:
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நல நிதி சட்டம் 1972 பிரிவு 2(டி)-ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்களில் ஐந்தும், அதற்குமேல் தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதியை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
2022-ம் ஆண்டில் குறைந்தது 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார். தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதி தொகையை வருகிற 31- ந் தேதிக்கு முன்பு The Seretary, Tamilnadu Labour Welfare Board, Chennai-600006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழிலாளர்கள் சங்க போராட்டம் கைவிடப்பட்டது
- அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பொது செயலாளர் முகமதுஅலிஜின்னா முன்னிலை வகித்தார்.
அப்போது ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மைப்ப ணியாளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படியை அமுல்படுத்த வேண்டும். 7- வது ஊதியக்குழு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் ஊதியம் நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தினை தொடர்ந்து துறை அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்