என் மலர்
நீங்கள் தேடியது "Lakshya Sen"
- காலிறுதியில் இந்தியாவின் லக்ஷயாவும் சீன வீரர் லி ஷி ஃபெங்கும் மோதினர்.
- இதில் 21-10, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பர்மிங்காம்:
பழம்பெருமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி சார்பாக எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், பிவி சிந்து ஆகியோரும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, துருவ் கபிலா-தனிஷா, சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியாத் ஜோடியும் கலந்து கொண்டனர்.
இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய், பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர். லக்ஷயா சென் மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவின் லக்ஷயாவும் சீன வீரர் லி ஷி ஃபெங்கும் மோதினர். இதில் 21-10, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடம்பிடித்துள்ளார்.
- லக்சயா சென் உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறினார்.
புதுடெல்லி:
உலக பேட்மிண்டன் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் (21), முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் சிறப்பான பார்மில் இருக்கும் லக்சயா 25 போட்டிகளில் 76,424 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடம்பிடித்துள்ளார்.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
- முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியன் லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.
துபாய்:
40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியன் லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 7-21, 21-23 என்ற செட் கணக்கில் லோ கீன் யூவிடம் தோல்வி அடைந்தார்.இதனால் லக்ஷயா சென் முதல் சுற்றிலே தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் மலேசியா வீரரை எதிர்கொண்டார்.
ஜெகார்த்தா:
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மலேசிய வீரரை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதேபோல், மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் கிடாம்பியை நாளை எதிர்கொள்கிறார்.
- அரையிறுதியில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவை லக்சயா சென் வீழ்த்தினார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார்.
கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவுடன் மோதிய லக்சயா சென், 21-17, 21-14 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அசத்தினார்.
இதன்மூலம், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு சர்வதேச போட்டியின் இறுதிப் போட்டிக்கு லக்சயா சென் தகுதி பெற்றுள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 2022 இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, அரையிறுதியில் உலகின் நம்பர்-1 வீராங்கனை அகானே யமகுச்சியிடம் 14-21, 15-21 தோல்வியடைந்தார்.
சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார் பி.வி.சிந்து. கடந்த ஜனவரி மாதம் காயத்திலிருந்து மீண்டபின் எந்த பட்டத்தையும் வெல்லவில்லை. கணுக்காலில் காயம் ஏற்படுவதற்கு முன்பு ஆகஸ்ட் 2022இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றார். அவர் மேட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தையும், மலேசியா மாஸ்டர்சில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
- தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சிஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினர்.
இந்திய நேரப்படி இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சுங் சுரோ யூனை (தைவான்) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
பி.வி.சிந்து கால் இறுதியில் சீனாவின் காவோ பாங்ஜியுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-8, 23-21 என்ற செட் கணக்கில் (செக் குடியரசு) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
நாளை நடக்கும் கால் இறுதியில் லக்ஷயா சென்-சங்கர் முத்துசாமி ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீன வீராங்கனையிடம் பிவி சிந்து நேர்செட் கணக்கில் தோல்வி
- 4 முறை நேருக்குநேர் மோதியதில் ஒருமுறை மட்டுமே சிந்து வெற்றி பெற்றுள்ளார்
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, அவரது எதிரியான சீனாவின் காவ் பாங் ஜீ-யை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 20-22 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் விரைவாக தோல்வியை ஒப்புக்கொண்டார். காவ் பாங் 2-வது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிவி சிந்து உலகத் தரவரிசையில் 36-வது இடத்தில் இருக்கும் காவ் பாங்கை எதிரியாகவே நினைக்கிறார். ஏனென்றால், அவருடன் நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கடந்த வரும் கனடாவில நடைபெற்ற கனடா ஓபனில் தோற்கடித்திருந்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், சங்கர் முத்துசாமியை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-17 லக்சயா சென் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
முத்துசாமி முதல் இரண்டு போட்டிகளில் முன்னணி வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 8-ம் தரநிலை பெற்றிருந்த வீரரையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.
- லக்சயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டில் லக்சயா சென் 21-15 என்ற கணக்கிலும் 2-வது செட்டில் ரஜாவத் 21-12 என கைப்பற்றினார். இதனையடுத்து வெற்றி யாருக்கு என்ற 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு லக்சயா சென் முன்னேறினார்.
- கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.
- லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதினார்.
- லக்ஷயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரைஇறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதினார்.
இதில் லக்ஷயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரைஇறுதியில் ஆக்சல்சென் (டென்மார்க்)-நரோகா (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
- சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும்.
- 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும்.
கவுகாத்தி:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. கடந்த பல போட்டிகளில் நான் விளையாடிய விதம் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உலக போட்டிக்காக நன்றாக தயாராகி இருக்கிறேன். கடந்த பல்வேறு போட்டிகளில் எனது ஆட்ட 'பார்ம்' நன்றாக இருந்தது. ஆனாலும் இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்வதுடன் முன்னேற்றமும் காண வேண்டியது அவசியமானதாகும். இந்த போட்டிக்கு தயாராக விளையாடிய பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அது எனக்கு நிறையை தன்னம்பிக்கையை கொடுக்கும். வரும் வாரத்திலும் நல்ல பயிற்சியை எதிர்நோக்குகிறேன். அத்துடன் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.
சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன். ஆனால் தற்போது எனது முதல் முன்னுரிமை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தான். அது முடிந்த பிறகு தான் ஆசிய விளையாட்டு போட்டி குறித்து கவனம் செலுத்துவேன். நான் விரைவில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் ஒலிம்பிக் தகுதி சுற்று முடிவைடையும் போது 'டாப்-5' இடங்களுக்குள் வருவதே எனது நோக்கமாகும். அதேநேரத்தில் நிறைய போட்டிகள் வர இருக்கின்றன. எனவே வரும் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். வெற்றி பெற்றால் தானாகவே தரவரிசையில் ஏற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். உத்தரகாண்டை சேர்ந்த 21 வயதான லக்ஷயா சென் தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கிறார். அவர் 2021-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், தைவானின் சு லீ யாங் உடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 13-21 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-17, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து விலகினார்.