என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "larry"
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து இட்டாச்சி வாகனத்தை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி இன்று காலை பண்ருட்டிக்கு புறப்பட்டது. இந்த லாரி சென்னை - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள மருவாய் பரவனாற்று பாலத்தின் மீது இன்று காலை 11 மணியளவில் வந்தது.அப்போது பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இட்டாச்சி வாகனம், லாரியிலிருந்து துள்ளி குதித்து அந்தரத்தில் தொங்கியது.
இதனால் லாரி ஒரு பக்கமாக சாய்ந்து பாலத்தில் வேறு எந்த வாகனமும் செல்லமுடியாதபடி பழுதாகி நின்றது. இதையடுத்து அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், வேலூர், சேலம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரெய்லர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது.
- எதிர்பாரத விதமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே அசூர் புறவழிச்சாலையில் நேற்று இரவு செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது. பெரம்பலூரியில் இருந்து பூம்புகார் நோக்கி செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை அரியலூர் மாவட்டம் ஆமணக்கு தோப்பு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் ஒட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் (வயது 33) என்பவர் மாற்று டிரைவராக பணியில் இருந்தார். இந்நிலையில் பெரம்பலூரில் இருந்து பூம்புகார் நோக்கி சென்ற லாரி எதிர்பாரத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் ஆனஸ்ட் ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த ஆனஸ்ட்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மணல் ஏற்றி வந்த லாரி சிறுவனின் மீது மோதியது.
- ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரி கண்ணாடிகளை உடைத்தனர்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கவி பாலன் (வயது 5). தனியார் பள்ளி மாணவன்.
நேற்று மாலை பள்ளி விட்டு தனியார் வேனில் வீட்டுக்கு திரும்பி கவிபாலன் வேனில் இருந்து இறங்கி சாலையை கடந்து வீட்டுக்கு சென்ற போது திருவையாறு பகுதியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி சிறுவனின் மீது மோதியது.இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கவிபாலன் உயிர் இழந்தான்.
இதனால் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து லாரியில் கண்ணாடிகளை உடைத்தனர் .அதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு தந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
இந்ததுயர சம்பவம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) என்ற வாலிபர், பகுதி நேரமாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந்தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றார்.
அப்போது ஒரு லாரியை நோக்கி இவர் சென்றபோது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம்போட்டார். உடனே சில டிரைவர்கள் சேர்ந்து கஜேந்திரா ஸ்வைனை பிடித்து, அவர்தான் செல்போனை திருடியதாக கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். அத்துடன் நிற்காமல் அவருடைய கழுத்தில் காலணி மாலையை அணிவித்தனர். பின்னர் அவரை ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் கட்டி ஓட்டிச்சென்றனர். 3 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள், பின்னர் அவிழ்த்து விட்டனர்.
ஆனால் இந்த அதிர்ச்சி மற்றும் காயம் போன்றவற்றால் அவரால் பின்னர் எழுந்திருக்கவும் முடியவில்லை. இதற்கிடையே லாரி டிரைவர்களின் இந்த கொடூர செயலை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்திய லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட லாரி டிரைவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். செல்போன் திருடியதாக கூறி வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற இந்த கொடூர சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- 1,000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.
- 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை ய த்துக்கு எடுத்து வரப்பட்டன.
பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளை யத்துக்கு அனுப்பி வைக்கப்ப ட்டது.
- பள்ளி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
- மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியது.
திருவோணம்:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் வயது 33. இவர் ஒரத்தநாடு பாப்பநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்துவிட்டு மோட்டரர் சைக்கிளில் வீடு திரும்பினார்.
திருவோணம் அருகே ராஜாளி விடுதி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இருந்தார்.
இது தொடர்பாக திருவோணம்போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மதுரை
மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.
கூடல்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நாகராஜ் தலை மோதியது. இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மாநகர போக்கு வரத்து போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமுகமது (46). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ராஜாமுகமது மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூரில் இருந்து நேற்று நள்ளிரவு பண்ருட்டிக்கு லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டுஅதிவேகமாக வந்தது. இந்த லாரிபண்ருட்டி கடலூர் ரோடு யூனியன் அலுவலகம் அருகில் வேகமாக வந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது.அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர்த்தப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து அதிவேகமாக வாகனம்ஓட்டிய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர்கள் மூவரும் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி வந்தனர்.
- ஒரு லாரி முந்தி சென்ற போது பஸ் மீது உரசியதில் 3 மாணவர்களும் காயம் அடைந்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதி நார்த்தாமலை தளபதி மகன் கோகுல் (வயது18), ஜீவானந்தம் மகன் கோகுல் (17). இவர்கள் இருவரும் கோட்டூர் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்கள்.
நரசிங்கம்பேட்டையை சேர்ந்த திருமாறன் (16). மன்னார்குடி தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த மாணவர்கள் மூவரும் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி வந்தனர்.
பஸ்ஸை டிரைவர் தவக்குமார் (45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் மன்னார்குடி தேரடி அருகே வரும்போது ஒரு லாரி முந்தி சென்ற போது பஸ் மீது உரசியதில் 3 மாணவர்களும் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
- விபத்தில் சோமசுந்தரம் மற்றும் சக்திவேல் ஆகியோர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த ராயப்ப செட்டியார் என்பவரது மகன் சோமசுந்தரம் (வயது 70 ). அதே ஊரைச் சேர்ந்த சவுண்டப்பன் என்பவரது மகன் சக்திவேல் ( 40 ). இவர்கள் இருவரும் நேற்று கணபதிபாளையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பல்லடம் -உடுமலை ரோட்டில் உள்ள வாவி பாளையம் கருப்பராயன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மின்கம்பத்தை ஏற்றுக் கொண்டு ஜேசிபி வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனை எதிர்பாராத இவர்களது மோட்டார் சைக்கிள் மின் கம்பம் கொண்டு சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சோமசுந்தரம் மற்றும் சக்திவேல் ஆகியோர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
- நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
- லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர்.
மன்னாா்குடி எம்.எல்.ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமையில் எம்.எல்.ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சுணன், ஈஸ்வரன், ராமச்சந்திரன்,அருள், அன்பழகன், பாலசுப்ர மணியன், செல்லூர் ராஜு, ராஜ்குமார் , முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் வந்தனர். வேதாரண்யம் தாலுகா ஆலங்குடியில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வரும் ட்ரோன் மூலமான பூச்சி மருந்து தெளிப்புப் பணியை பாா்வையிட்டனர்.
தொடர்ந்து ஆசியாவி லேயே 2வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான கோவில்பத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொ ருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.
கஜா புயலின் போது சேதமடைந்த நெல் சேமிப்பு கிடங்கில்மேற்கொ ள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து, பார்வை யிட்டு இருப்பில் உள்ள நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
மேலும் தற்போது ரூ.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள தரைதள பணிகள் மற்றும் தானியங்கு முறையில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கோடியக்கரை, கோடியக்காடு வனவிலங்கு பகுதியில் ஆய்வு மேற்கொ ண்டனர்.
- உள்ளே நுழையும் போது பாலத்தின் கைப்பிடி சுவரில் மூன்று தூண்கள் இடிந்த நிலையில் காணப்படுகிறது.
- லாரி பின்னோக்கி வந்த போது இடித்து இது போன்ற நிலை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பூதலூர்:
கல்லணையில்உள்ள கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை -திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிதாக பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.1052 மீட்டர் நீளம்கொண்ட இந்த பாலம் 12.90 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்த பாலத்தின் வழியாக திருச்சி -தஞ்சை மாவட்டங்களுக்கு கனரக வாகனங்கள, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் திருச்சி தஞ்சை இடையே ஏராளமான வாகன போக்குவரத்து இந்த பாலத்தின் வழியே நடைபெற்று வருகிறது.
லாரிகள், வேன்கள், சுற்றுலா பஸ்கள், கார்கள், சென்று வந்தாலும் இன்னமும் பொது போக்குவரத்து இந்த சாலை இந்த பாலத்தின் வழியாக செயல்படுத்தப்படவில்லை.
விரைவில் திருச்சி தஞ்சை போக்குவரத்து கழகங்களில் வழியாக இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துவங்கும் என்றுஎதிர்பா ர்க்கப்படுகிறது.இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து உள்ளே நுழையும் போது பாலத்தின் கைப்பிடி சுவரில் மூன்று தூண்கள் இடிந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த பாலத்தின் வழியாக மணல் லாரிகள் அதிக அளவில் சென்று கொண்டிருந்தபோது மோதியதாக கூறுகின்றனர். இடையிலுள்ள நடை மேடையில் எந்த பழுதும் இல்லாமல் கைப்பிடி சுவர் தூண்கள் மட்டும் இடிந்த நிலையில்உள்ளதால் இதுபோன்று நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர். ஏதாவது லாரி பின்னோக்கி வந்த பொழுது இடித்து இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இடிந்த பகுதியில் சீர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது இந்த பகுதி வழியாக செல்வோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எதுவும் இரவு நேரங்களில் எரிவதில்லை என்றும் இதனால் பாலத்தின் நடைமேடைமது அருந்தும் இடமாக உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கல்லணை கொள்ளிடம் பாலத்தில் இடிந்த கைப் பிடிச் சுவரை சீரமைத்து, மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்