search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor smuggling"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • பைக் பறிமுதல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த அரிமலை, மலைஅடிவாரத்தில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்தவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர் 3 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வருவது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பைக் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து, பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை பகுதியை சேர்ந்த உலகநாதன் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

    • கார் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு தூசி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 228 மது பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. விசாரணையில் சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்த மணி, முருகன், அன்பழகன் ஆகியோர் என தெரிந்தது.

    போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர்.
    • கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் புதுவை மாநிலத்திலிருந்து மது கடத்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஒழுக்கீனமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் மது போதையில் ஓட்டுகிறார்களா என சோதனை செய்து மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர். இதனையடுத்து கடலூரில் மதுபோதையில் ஏ.டியம் எந்திரத்தை வாலிபர் ஒருவர் இரவில் உடைத்த சம்பவமும் நடைபெற்றது. புதுவை மாநிலத்திலிருந்து மது அருந்தி வருவதும், மது கடத்தல் சம்பவமும் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே உள்ள சோதனை சாவடியில் 24 மணிநேரமும் போலீசார் புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆல்பேட்டை சோதனை சாவடிக்கு சென்று அங்கு திடீரென்று ஆய்வு செய்தார்.ஆய்வில் அங்கு பணியில் இருந்த போலீசார்கள் சரியான முறையில் சோதனை செய்கின்றார்களா அல்லது சரியான முறையில் அவர்கள் பணிகளை செய்யாமல் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த போலீசார்களிடம் மது கடத்தல், மது போதையில் வாகனங்களை ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக விபத்து ஏற்படும் விதத்தில் லோடுகளை ஏற்றி வருவது, ஒழுங்கீனமான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலி பர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்க ளை யாரேனும் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • போலீசார் சோதனையில் சிக்கினர்
    • 230 பாக்கெட்டுகள் பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூடவுன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதி வேகமாக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி வந் தது தெரிய வந்தது.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்த கோபி (வயது 20), குமரன் (24), மைக்கேல் (20), கதிர்வேல் (20) என்பதும், இவர்கள் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக் களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து 230 மது பாக் கெட்டுகளை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்ப திவுசெய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து பகுதிகளிலும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மயிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது மரக்காணம் அருகே விஷ சாராயம் அருந்தி அதிக உயிர்ப்பலி ஏற்பட்டதால், சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாதிராபுலியூர் பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பாதிராபுலியூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியாக சந்தேகம் படும்படி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, அந்த நபர் நிற்காமல், அதிவேகமாக சென்றுள்ளார். போலீசார் அவரை துரத்தி சென்று மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், புதுவை மணலிபட்டு பகுதியை சேர்ந்த அறிவழகன்(வயது 35), என்பதும், புதுவையில் இருந்து 10 லிட்டர் சாராயம் கடத்தி சென்று பாதிராபுலிர் சுடுகாட்டுபாதை அருகே மறைத்து வைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து அறிவழகனை கைது செய்த போலீசார், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • போலீசை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் லக்கிநாயக்கன்பட்டி-பவுஞ்சிபட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், போலீசை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது காவலர்கள் அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது லாரி டியூப்களில் 80 லிட்டர் சாராயத்தை அடைத்து, அதனை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், சாராயம் கடத்தி வந்த நபர் குரும்பலூரை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமணி என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செயது செல்வமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • போலீசாருக்கு பைத்தந்துரை ஏரிக்கரையில் சாராயம் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • பைத்தந்துறை ஏரிகரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு பைத்தந்துரை ஏரிக்கரையில் சாராயம் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பைத்தந்துறை ஏரிகரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

    அவர்களில் 3 பேரை போலீசார் துரத்திப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்ததில் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(வயது 33), வெற்றி(27), மற்றும் வாணியந்தல் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(42), என்பதும் தப்பி ஓடியவர்கள் விஜயராஜ், ராஜிவ்காந்தி என்பதும் தெரிய வந்தது  மேலும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் 5 கேன்களில் எரிசாராயம் மற்றும் 200 கிராம் கஞ்சாவும் விற்பனைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் சின்னதுரை, வெற்றி, பழனியை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 105 லிட்டர் எரிசாராயம் 200 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • ஆனந்தராசு தலைமையில் போலீசார் நேற்று தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 60 லிட்டர் சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை கிராமத்தில் சாராயம் விற்று வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் போலீசார் நேற்று தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தகரை கிராம எல்லையில் உள்ள மூணாங்கண்னி குட்டை அருகே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாராயம் கடத்தி வந்தார்.

    அப்பொழுது போலீஸ் காரை கண்டதும் சாராயத்தையும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றார். பின்னர் லாரி டியூப்பில் இருந்த 60 லிட்டர் சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர் நாககுப்பம் கிராமத்தை சேர்ந்த நேதாஜி என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நேதாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் கோட்ட க்குப்பம் பகுதியான பெரிய முதலியார் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடு பட்டனர்.
    • இந்த சாராயம் புதுவையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து விழுப்புரம், திண்டிவனம் வழியாக வேன் மற்றும் மோ ட்டார் சைக்கிளில் சாரா யம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ேபாலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அதிரடி நடவ டிக்கை எடுத்து வருகிறார். என்றாலும் ஒருசிலர் இந்த கடத்தல் சம்பவத்தில் துணிகரமாக ஈடுபட்டு வருகிறார்கள். புதுவையில் இருந்து கோட்டக்குப்பம் வழி யாக சாராயம் கடத்தப்படு வதாக குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்ப டையில் போலீசார் கோட்ட க்குப்பம் பகுதியான பெரிய முதலியார் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடு பட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தி னர். அந்த வேனின் உள்ளே மீன்கள் இருந்தது. அதற்கு அடியில் சாராய பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வேனுடன் பாக்ெகட் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அந்த வேனில் 1250 லிட்டர் சாராயம் இருந்தது. இந்த சாராயம் புதுவையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக காஞ்சீ புரம் மாவட்டம் குன்றத்தூர் பள்ளத்தெருவை சேர்ந்த திருமலை (வயது 45) என்ப வரை போலீசார் கைது செய்தனர். இவர் யாரிடம் இருந்து சாராயம் வாங்கி வந்தார். இதற்கு மூளை யாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
    • லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டைகூட்டுரோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மையனூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 26) மற்றும் அரசராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (25) ஆகிய 2 பேரும் அரசராம்பட்டிலிருந்து மையனூர் காப்புக்காட்டு அருகே உள்ள சுரேஷ் என்பவரின் கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்களைப் பிடித்து சோதனை செய்தபோது ஒரு லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சாராயம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் 2 பேரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கல்வராயன்மலை பெருமாநத்தம் பகுதியை சேர்ந்த அருண் (20), வரதராஜ் (26) என்பதும், கல்வராயன்மலை பகுதியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பர்வதம் என்பவரை தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே புதுவை மாநில மது கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு மலைக் கோட்டை பகுதியில் வெளி மாநில மதுபாட்டில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையி லான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற னர். அப்போது காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் சங்கரா புரம் அருகே ராவத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (எ) நவீன் (வயது 27), கள்ளக்குறிச்சி கரியப்பாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (35), மற்றும் நாமக்கல் பாப்பான் காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து காட்டுகொட்டகை பகுதியில் மறைத்து வைத்து தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனை செய்த தும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2852 மது பாட்டில்கள் மற்றும் 3 கேன்களில் இருந்த 105 லிட்டர் விஷசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்தனர்.

    ×