என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "litigation"

    • 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ரமேஷ்குமார் வசித்து வருகிறார். இந்நிலையில் மெல்டில்டா பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கடந்த 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன், முத்துசாமி, அம்பிகா தேவி, ஜெயலட்சுமி, லோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து பிரியதர்ஷினியை பார்த்து இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறி பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிற

    து. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் லோகேஸ்வரன் என்பவர் பிரியதர்ஷினி வீட்டின் மீது பாட்டில் வீசி பிரியதர்ஷினி மீது தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சின்னசேலம் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவரது பெரியப்பா காசிநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அருண்குமாரை , குணசங்கர், ரவிக்குமார் மற்றும் ஒரு சிலர் சேர்ந்து தாக்கினார்கள். அப்போது இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் குணசங்கர் என்பவரை தாக்கியதால் அவருக்கும் காயம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் குணசங்கர், ரவிக்குமார் உள்பட 6 பேர் மீதும், குணசங்கர் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் உள்பட 4 பேர் மீதும் என 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதில் ‘தில்லுமுல்லு’ செய்த தாய்-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களுர் கிராமத்தை சேர்ந்தவர் நீதிராஜன் (வயது28) இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இதையறிந்த முதுகுளத்தூர் தாலுகா கொளுந்துரையை சேர்ந்த செய்யது ருகானி என்பவர் தனது மகன் மகாதீர் முகம்மது கம்போடியா நாட்டில் நல்ல வேலை செய்து வருவதாகவும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக இருப்பதாகவும் தெரிவி த்துள்ளார். இதை நம்பிய நீதிராஜன் தனது மொபைல் நம்பரை கொடுத்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் மகாதீர் முகம்மது தொடர்பு கொண்டு கம்போடியா நாட்டில் நல்ல சம்பளத்தில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். செய்யது ருகானி பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு, பிசினஸ் விசா மற்றும் டிக்கட் செலவுகளுக்காக பணம் கேட்டதை தொடர்ந்து தாய், மகனிடம் ரூ.2.50 லட்சம் பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் கம்போடியா நாட்டிற்கு டூரிஸ்ட் விசாவில் அனுப்பி வைத்து தெரிவித்த வேலையை வாங்கிக் கொடுக்காமல், சீன கம்பெனியில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துள்ளார். கம்போடியா அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் சட்ட விரோமாக தங்கியிருந்ததாக கூறி ரூ.2,50 லட்சம் அபராதம் செலுத்தி நாட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தார். ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
    • வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.  இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 34 பேர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தனபால் கட்சி நிர்வாகிகளுடன் அம்பேத்கார் நகர் பகுதியை பார்வையிடுவதற்காக வந்தார்

    . அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தற்போது அம்பேத்கார் நகரை பார்வையிட செல்ல வேண்டாம் என்று கூறினர்  அப்போது பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களு டைய கோரிக்கைகளை கேட்ப தற்காக மட்டுமே செல்கி றோம், எங்களை தடுக்க வேண்டாம் என்று கூறி அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்  இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு காவலர்கள் அனுமதி அளித்ததை தொடா்ந்து அவர்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்குள் சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் தனபால் கூறும்போது, வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். அப்போது காட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமங்கலம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷா புரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி அபர்னா ஸ்ரீ (வயது34). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருங்குடியை சேர்ந்த அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா (50), அவரது மனைவி நிலையூர் சத்துணவு மைய பொறுப்பாளர் கலைச்செல்வி (43) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் பொதுப்பணித்துறையில் வாங்கி தராமல் ஏமாற்றினர். பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமங்கலம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ராஜா,கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கொண்டு வந்த மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் அருகே உள்ள பிராந்தை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 25). இவர் நேற்று இரவு தஞ்சையில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருவாரூரிலிருந்து தஞ்சை நோக்கி ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கொண்டு மினி வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மினிவேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அரவிந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • இதில் சம்பந்தப்பட்ட தரகர் நடராஜன், சாந்தலட்சுமி, புவனேஸ்வரி, மணி, கோபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதி சேர்ந்த பொன்னுசாமி இவரது மகன் அரவிந்த் குமார் வயது 30 பொன்னுசாமி மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி சேலம் பஜாருக்கு வரும்போது சேலம் நெத்திமேடு கேபி கரடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்ற அரிசி தரகர் அறிமுகம் ஆனார்.நடராஜன் தனக்கு ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் என்பவரை தெரியும் அவர் மூலம் உனது மகனுக்கு அரசு வேலை உடனடியாக வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    இதை தொடர்ந்து அரவிந்த் குமார் இடம் சசிகுமார் அறிமுகப்ப டுத்தப்பட்டார். உடனடியாக அரசு வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் அளித்ததன் பேரில் அரவிந்த் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் ரூபாய் 2 கோடியே 83 லட்சத்தை வசூலித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பேசியபடி யாருக்கும் வேலை கிடைக்காததால் சந்தேகம் இருந்த அரவிந்த் குமார், சசிகுமார் பற்றி விசாரித்த போது அவர் ஒரு போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் மற்றும் முகமது உஸ்மான் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட தரகர் நடராஜன், சாந்தலட்சுமி, புவனேஸ்வரி, மணி, கோபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் புவனேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் நேற்று இரவு மாவட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நடராஜனை கைது செய்து இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணி, கோபி மற்றும் சாந்தலட்சுமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன்கள் மைக்கேல் மற்றும் ஞானவேல். இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
    • வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக பேசி வருகிறார்.

    கடலூர்:

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், குறிஞ்சிப்பாடி சின்ன காட்டுசாகை சேர்ந்தவர் சங்கர். வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பொது அமைதி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்படி குள்ளஞ்சாவடி போலீசார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை.
    • இதில் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை. இது குறித்து மணி உள்ளிட்ட நான்கு பேர் கோவில் நிர்வாகி மோகனை கேட்டனர். இதில் மணி தரப்பினருக்கும், மோகன் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில்கோவில் நிர்வாகி மோகன், ராமசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                     இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மணி, மோகன்தாஸ், பரசுராமன், ராஜ் ஆகியோர் மீதும், ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் இளையராஜா, ரமேஷ், முருகன், பாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் மீது தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
    • இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்த மணம் தவழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் ஏன் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராமதாசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மோதலில் ஈடுபட்டு பகத்சிங்கை தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான நிலை அங்கு உருவானது. இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனுக்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் அபுதாபியில் வேலைக்கு சென்ற நிலை யில் மனைவியை பெற்றோர் வீட்டில் இருக்குமாறு தெரி வித்துள்ளார்.

    இதனையடுத்து வைத்தீஸ்வரி தாய் வீட்டில் இருந்து வந்ததுள்ளார். மாமனார் தியாகராஜன், மாமியார் வளர்மதி ஆகி யோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா சென்றுள்ளனர். இதன் பின்னர் தீபாவளிக்கு வந்துள்ளனர்.

    அப்போது வைத்தீஸ்வரி கணவர் வீட்டுக்கு வந்து தனக்கு தேவையான பொருட்களை எடுக்க சென்றுள்ளார். அதற்கு மாமனார்-மாமி யார் அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம். அந்த பணத்தை வரதட்சணை யாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் விவாக ரத்து செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வைத்தீஸ்வரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படை யில் அனைத்து மகளிர் போலீசார் மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ×