என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local holiday"

    • அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும்.

    திருப்பூர் :

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி( வியாழக்கிழமை ) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந்தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வரும் செப்டம்பா் 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும். திருப்பூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று உள்ளூர் விடுமுறை.
    • சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 27.08.2022 அன்று பணி நாள்.

    44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

    மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு 28.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேற்காணும் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022 அன்று (நான்காவது சனிக்கிழமை) சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

    அரியலூர்:

    மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை அன்று அரசு விழாவாக கொண்டாடப்படுவதால், அரியலூர் மாவட்டத்துக்கு ஜூலை 26 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவி–த்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை உலக பிரதான பாரம்பரிய சின்னமாக யுனோஸ்கோ அறிவித்து, அதனை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலயத்தை கட்டிய மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு இவ்விழாவை தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த தமிழக அரசு அரசாரணை வெளியிட்டது.

    அதன்படி வரும் 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால்,

    அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இருப்பினும் இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவேஅரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடை பெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 06.08.2022 (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக ஆணையிடப்பட்டுள்ளது.

    விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆனித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
    • தேரோட்டத்தை ஒட்டி நாளை மறுநாள் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆனி தேரோட்டம் நடைபெறவில்லை.

    தேரோட்டம்

    இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வருவார்கள்.

    வடம் பொருத்தும் பணி

    தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.

    தேரோட்டத்திற்கு தேரை தயார்படுத்தும் பணி தொடங்கி தேர்களை சுத்தம் செய்தல், குதிரை பொம்மைகளை பொருத்துதல், கம்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடிவடைந்து விட்டது. இன்று தேருக்கு வடம் கயிறு கட்டும் பணி நடைபெற்றது.

    வீதி உலா

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    7-ம் நாள் திருவிழாவான இன்று காலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆகியோர் பல்லக்கு சப்பரத்தில் தவழ்ந்த கோலத்தில் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகள் தீவிரம்

    தேரோட்டத்தை ஒட்டி நாளை மறுநாள் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் நான்கு ரத வீதிகளிலும் கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    • பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
    • உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி–யிட்–டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்–ளது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி செலவாணி முறிவு சட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேற்படி நாளில் கோவிலில் நடைபெறும் அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ள தடை உள்ள காரணத்தால் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை கோவில் திருவிழாவையொட்டி வருகிற 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 27-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 28-ந்தேதி பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும்

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 23-ந் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-வது நாளான இன்று தேரோட்டம் நடந்தது. 5 தேர்கள் பவனி வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேரோட்டத்திற்கு வருவார்கள் என்பதால் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

    அதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அரசின் ஆளுமைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    அதேபோல தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 23-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்து உள்ளார். #KarthigaiDeepam #ArunachaleswararTemple

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அடுத்த மாதம்(நவம்பர்) 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ ‍-மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது.

    இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல. எனவே மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக டிசம்பர் 8-ந்தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது.

    தேரோட்ட விழாவில் விருதுநகர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடுபட்டும் வகையில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. 13-ந்தேதி அன்று மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்பு நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதையொட்டி கூடலூரில் நாளை வாசனை திரவிய கண்காட்சி தொடங்குகிறது. 12-ந் தேதி ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இந்நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்பு நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ந் தேதிக்கான வேலை நாளை ஈடு செய்ய வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews
    ×