என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "locked"
- பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது.
- அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது.
உடுமலை:
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பஸ் நிலைய வளாகத்தில் தனியாக அறை கட்டப்பட்டது.சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் பெண்கள் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.அதுமட்டுமின்றி பஸ்நிலைய வளாகத்தில் பெண்களுக்கு தனியாக சுகாதார வளாக வசதியும் ஏற்படுத்தி தரவில்லை.இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
கிராமத்தில் இருந்து உடுமலை நகருக்கு வருகை வருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்து கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர். பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து நிர்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. மேலும் ஆண்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகமும் பராமரிப்பில்லாமல் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் பஸ்சுக்காக காத்து கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
அதுமட்டுமின்றி பெண்களுக்கு தனியாக சுகாதார வளாகம் அமைத்து கொடுப்பதுடன் பராமரிப்பில்லாமல் உள்ள ஆண்களுக்கான சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- வாடிப்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
- சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி நீரேத்தான் மதுபான கடை அருகில் அனுமதியின்றி செயல்பட்ட 2 மதுபான பார்களும், சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த பணியில் மதுரை தெற்கு கோட்ட கலால் தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முகைதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவலிங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர். திடீரென்று அதிகாரிகள் சீல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்தந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
சென்னையில் உள்ள புழல் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு உயர்ரக வசதிகள் செய்து கொடுத்ததால் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருந்து வந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைச் சாலைகளை போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்து வந்தனர்.
இதற்கிடையே புழல் சிறையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரான் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் சிறை தகர்க்கப்பட்டு ஐஎஸ் தீவிரவாதி அன்சார் மீரானை மீட்டு கொண்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் சோதனை நடத்தியதில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியிலிருந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த முறை சிறைத்துறை வளாகத்தில் சோதனை செய்யும்போது மோப்ப நாயும் வெடிகுண்டு நிபுணர்களும் புதிதாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.
ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரானை சிறையை தகர்த்து மீட்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சிறை வளாகத்தில் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இரவு காவலாளியாக எழும்பூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (60) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு திடீரென 7 பேர் கொண்ட கும்பல் கல்லூரிக்குள் புகுந்தனர். அவர்கள் குணசேகரனை தாக்கி கட்டிடத்தின் பின் பகுதியில் உள்ள சமையல் அறையில் தள்ளி பூட்டினர்.
பின்னர் அந்த கும்பல் கல்லூரியில் உள்ள அலுவலக அறை பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், லேப்-டாப், கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.
இன்று காலை வரை சமையல் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த குணசேகரன் தத்தளித்து கொண்டிருந்தார். அவ்வழியாக மாடு ஓட்டிச்சென்ற பெண்ணை ஜன்னல் வழியாக அழைத்து. தான் அடைக்கப்பட்டு இருந்தது குறித்து கூறினார். இதனையடுத்து அந்த பெண் அறையை திறந்து குணசேகரனை மீட்டார்.
வெளியே வந்த குணசேகரன் கல்லூரி உரிமையாளர் முஜிபுர் ரகுமானுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
டி.எஸ்.பி பொற்செழியன், இன்ஸ்பெக்டர். கவுரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் பணம், லேப்-டாப், கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. திருட வந்த மர்ம கும்பல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி கேமரா பதிவையும் எடுத்து சென்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்யாறு அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்று விட்டனர். இதே கும்பல் மீண்டும் நர்சிங் கல்லூரியில் கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
மலைகளின் அரசியான ஊட்டிக்கு கோடை சீசன், 2-வது சீசன் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கிறார்கள். ஊட்டி நகரில் முக்கிய சாலையோரங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
ஊட்டி நகராட்சி சார்பில் ஊட்டி-கோத்தகிரி சாலை சேரிங்கிராசில் சாலையோர பூங்கா, ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் நினைவு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே டேவிஸ் பூங்கா கடந்த 2007-2008-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் பசுமையான புல்வெளிகள் மற்றும் அடர்ந்து வளர்ந்த மரங்களுக்கு நடுவே நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் செங்கற்களால் ஆன இருக்கைகள் கட்டப்பட்டு இருந்தன.
தொடக்கத்தில் டேவிஸ் பூங்கா காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும். பூங்காவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் உடல் ஆரோக்கியத்துக்காக நடைபயிற்சி சென்று வந்தனர். அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என கழிப்பிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
செடிகளால் ஆன நிழற்குடை, செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போது டேவிஸ் பூங்கா போதிய அளவில் பராமரிக்கப்படாததால் புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பூங்கா பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பூட்டி கிடக்கும் டேவிஸ் பூங்காவில் கழிப்பிடங்களை புதர்கள் சூழ்ந்தும், சுகாதாரம் இன்றியும் இருக்கிறது. நடைபாதையில் புற்கள் முளைத்து, புதர்கள் மண்டி கிடக்கிறது. செயற்கை நீர்வீழ்ச்சி செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது. இயற்கை அழகு நிறைந்திருந்த பூங்கா தற்போது புதர்களின் ஆக்கிரமிப்பிலும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியும் இருக்கிறது. பூங்காவை சுற்றிலும் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் உடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பூங்காவுக்குள் நுழைந்து மது அருந்தும் சிலர், பாட்டில்களை ஆங்காங்கே தூக்கி வீசுகின்றனர். மேலும் பூங்கா பூட்டி கிடப்பதை கண்டு நடைபயிற்சிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிகிறது. எனவே டேவிஸ் பூங்காவை சீரமைத்து மீண்டும் திறக்க ஊட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்
டெல்லியின் மத்திய பகுதியில் உள்ள ஹவுஸ் காஷி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு மழலையர் வகுப்பில் படித்து வரும் குழந்தைகள் சிலர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகளை தனியாக அழைத்து சென்று, பள்ளிக்கூடத்தின் கீழ் தளத்தில் உள்ள பாதாள அறையில் அடைத்துவிட்டனர்.
காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பாதாள அறையில் அடைத்துவைக்கப்பட்டதால் அந்த குழந்தைகள் அழுது அழுது சோர்வடைந்தனர். மாலையில் தங்களுடைய குழந்தைகளை அழைத்து செல்வதற்காக வந்த பெற்றோர் குழந்தைகள் மிகவும் சோர்ந்துபோய் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். குழந்தைகளிடம் விசாரித்த போது, அவர்களுக்கு நேர்ந்த கொடூரம் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கூடத்தின் பாதாள அறையில் குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வித்துறைக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். #KindergardenGirls #SchoolFee #ArvindKejriwal #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்