search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery ticket sales"

    • பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது பொன்னேரி டீக்கடை அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்தவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர் தடை செய்யப்பட்ட கேரளா மாநிலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கேரளா மாநில 360 லாட்டரி சீட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள், செல் போன், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    புளியரை சோதனைச்சாவடியில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    செங்கோட்டை:

    தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து சோதனை செய்தனர்.

    இதில் கேரள மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 66), முருகன் (58), விருதுநகர் மாவட்டம் வையாபுரியைச் சேர்ந்த மற்றொரு முருகன் (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    செங்கோட்டை அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகமாக நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இலத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கணேசன் (வயது65) என்பவர் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1500 மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சிங்காநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் இருகூர் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு ஆன்லைன் லாட்டரிகள் விற்றதாக அதேபகுதியை சேர்ந்த தங்கராஜ் (60) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து லாட்டரி நம்பர்கள் எழுதப்பட்டிருந்த 3 அட்டைகள் மற்றும் ரூ.350-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதேபோல சப்-இன்ஸ்பெக்டர் போஸ் ராவத்தூர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக சிங்காநல்லூரை சார்ந்த பால சுப்பிரமணியன் (57) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 45 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.950-ஐ பறிமுதல் செய்தார்.

    வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அதன் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண் உள்பட 4 பேர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

    தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை யார் கொடுத்தனர்? என போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

    4 பேரிடம் இருந்து 19 ஆயிரத்து 570 வெளிமாநில லாட்டரிகள் மற்றும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 660 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக வாடிப்பட்டி கட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது58), பரவையைச் சேர்ந்த பாண்டி (65), சேதுராமன் (50), அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மகாலட்சுமி தவிர 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    ×