என் மலர்
நீங்கள் தேடியது "love Couple"
- காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்
- திருமணம் செய்து கொண்டனர்
கரூர்
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் துர்கா தேவி (வயது 21). இவர், எதிர் வீட்டில் வசித்து வரும் அமீர் பாபு என்பவரின் மகன் ஏஹயா பாட்ஷா என்பவரை சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு பேரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காதலர்கள் இருவரும் நண்பர்கள் உதவியுடன் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தங்கள் பெற்றோர்களால் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையுடன், மனு வழங்கினர். இதனை தொடர்ந்து போலீசார் இரண்டு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால். வயதை காரணம் காட்டி, காதல் ஜோடிகளுக்கு அறிவுரை வழங்கி பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.
புதுமண தம்பதிகளாக மாலையும், கழுத்துமாக வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
விழுப்புரம்:
மயிலம் அருகே பெரும் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.அவரது மகன் விண்ணரசன் (28), பொக்லைன் எந்திரம் ஆப்ரேட் டராக உள்ளார். இவரும் பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகள் கிருபாசினி (19), என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.
இவர்களின் காதல் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன ஜைனுதின் தலைமையில் மயிலம் போலீஸ்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.அங்கு போலீசார் விசாரணை செய்வதற்கு மறுத்ததாக தெரிவிக்கிறது.
இதனால் நேற்று திண்டிவனம் அடுத்த தீவனூரில் விநாயகர் கோவிலில் திருமணம்செய்து கொண்டனர். பின் னர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள் ளனர். அங்கிருந்து காதல் ஜோடியை திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன்படி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு காதல் ஜோடி திருமண கோலத்தில் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை செய்ததில், இருவரின் சம்மதத்தின் பேரில் திருமணம் நடை பெற்றதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாக வும் தெரிவித்தனர்.இதனையடுத்து இருவரையும் விண்ண ரசன் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.
- கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
ஓட்டலில் தங்கினர்
இதற்கு இடையே ராஜசேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்களை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நேற்று நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் அறை கதவு திறக்காததால், ஓட்டல் ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால், கதவை திறந்து உள்ளே சென்றனர்.
தற்கொலை முயற்சி
அப்போது, 2 பேரும் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள், தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜசேகர், கவுசல்யா உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா என்பது தெரியவந்தது.
- விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இதை பார்க்கும் பலரும் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.
அதில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் சுவாரஸ்யமாக வைரல் ஆகின்றன. இதை பார்த்து ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. உலகில் காதலுக்கு மட்டும் அசாத்தியமான விஷயங்களை, கிறுக்குத்தனமான விஷயங்களை செய்ய வைக்கும் ஆற்றல் உண்டு. ஏற்கனவே காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழி உண்டு.
ஆனால், சமீபகாலமாக காதலுக்கு இடம், பொருள் என்று எதுவுமே இல்லை என்பது போல பல காதலர்கள் செயல்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக இளம் காதலர்கள் படங்களில் வருவது போல வித்தியாசமான சாகசங்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு காதல் ஜோடி ஸ்கூட்டரில் சென்றபடியே ரொமான்சில் ஈடுபட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டாம் குரூஸ்-கேமரூன் டயஸ் நடித்த 'நைட் அண்ட் டே' ஹாலிவுட் திரைப்படத்தில் காதலர்கள் ஸ்கூட்டரில் சென்றவாறே ரொமான்சில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதுபோன்று இந்த காதல் ஜோடி லக்னோவின் நெரிசலான பகுதியில் அரங்கேற்றியுள்ளனர். இந்த லக்னோவின் பரபரப்பான சாலையில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரு சக்கர வாகனத்தில் ஓட்டுபவர் முன்னால் அமர்ந்து இருக்க, பின்னால் உடன் செல்பவர் அமர்ந்திருப்பார். காதலர்கள் கூட வழக்கமாக அப்படித்தான் செல்வார்கள்.
ஆனால், லக்னோவின் அந்த பரபரப்பான சாலையில் ஸ்கூட்டி ஒன்றில் காதலன் ஓட்டிச்செல்ல காதலியோ அவருக்கு முன்னால் அமர்ந்து சாலையின் பின்புறம் நோக்கி அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்கிறார். அதுவும் அந்த காதலி வாகனத்தை ஓட்டிச்செல்லும் தனது காதலனை கொஞ்சிக்கொண்டே செல்கிறார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடனே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.
காதலர்களின் இந்த ரொமான்ஸ் காட்சியை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், பெண் இரு சக்கர வாகனத்தின் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடிப்பதும், கழுத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாரிக் என்பவர் உத்தரபிரதேச போலீசாருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவசர அவசரமாக வாகனம் ஓட்டியதற்காகவும், பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மைனர் என்பதால் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி லக்னோ கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் விக்கி சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆபாச செயல்கள் (பிரிவு 294) மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுதல் (பிரிவு 279) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அந்த பெண் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பொதுமக்கள் தங்கள் உயிரையும் மற்றவர்களையும் பணயம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்..
- காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
விழுப்புரம்:
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது. 21). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மத் அசன் (22) என்பவரும் ேவலை பார்த்து வருகிறார். அப்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
- ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
ஆலங்குடி:
ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருபவர் ராமு மகன் வீராச்சாமி (வயது 32). இவர் படித்த பட்டதாரி ஆவார். மேலும் இவர் புதுக்கோட்டையில் ஜவுளி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தெற்கு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் முருகஜோதி (23) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இரு குடும்பத்தாரும் சமரசமாக பேசிக்கொண்டனர். பின்னர் இரு குடும்பத்தார்களும் போலீசாரிடம் சமரசம் எழுதிக் கொடுத்தனர். பின்னர் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகளை இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
- இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.
- வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் மணிகண்டன்(வயது23) டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். என்பவரும் இதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகள் ரேனுகா(23) பி.எஸ்.சி. படித்துள்ளார். ஆகிய இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் செல்போ னில்தொடர்பு கொண்டு இருவரையும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் நிலையம் வர வைத்து விசாரணை செய்தனர்.
மணிகண்டனும் ரேணுகாவும் கடந்த 8 வருடங்களாக வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாகவும் இரு விட்டாரம் திருணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவி த்தனர். இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் மணிகண்டன் ரேணுகா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் திருவெண்ணைநல்லூர் போலீசார் அறிவுரைகளை வழங்கி மணிகண்டன் ரேணுகாவையும் பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
- காரைக்காலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், காதல் ஜோடி, திருமணம் செய்ய நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளனர்
- திடீரென்று அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முயற்சித்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், திருவாரூர் குடவாசலைச்சேர்ந்த காதல் ஜோடி, திருமணம் செய்ய காரைக்கால் வந்துள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று காலை விடுதி ஊழியர் இருவருக்கும் உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் அறைய மூடிக்கொண்டு வெகு நேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்துள்ளனர். பின்னர், திடீரென்று அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முயற்சித்தனர். முடியாததால், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியம் மற்றும் போலீசார், விடுதிக்கு விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காதல் ஜோடி இருவரும் கை, கழுத்து பகுதிகளில் கத்தியால் அறுத்து இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அறை முழுவதும் இரத்தம் சிதறி கிடந்தது. உடனடியாக, ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது25) அக்ஷரா(25) ஆகியோர் என்பதும், இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காரைக்கால் வந்து திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும், அதற்குள், இருவரும் தங்கள் முடிவை மாற்றிகொண்டு, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் ஜோடிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து, தொடர் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்வம, காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
- பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது19) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (22) கூலி தொழிலாளி.
இளம்பெண்ணும் மோகனும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் வீட்டில் தெரிய வரவே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
- போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
குளச்சல்:
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிறாஸ் (வயது 29). என்ஜினீயரான இவர், துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பட்டதாரி பெண்ணுடன் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய இருவரும் கடந்த 3 வருடமாக காதலிக்க தொடங்கினர்.
லெனின் கிறாஸ் ஊருக்கு வந்தபோது, காதல் ஜோடியினர் பல்வேறு பகுதிகளில் ஒன்றாக சுற்றி வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்ற லெனின் கிறாஸ், காதலிக்கு செலவுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் இருவரும் தினமும் பேசி வந்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிறாஸ் ஊர் திரும்பினார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.
இந்த தகவல் காதலிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலன் லெனின் கிறாசை தேடி வந்தார். அப்போது தான் அவருக்கு திருமண தேதி பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக சைமன் காலனிக்கு விரைந்து சென்ற காதலி பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் 11-ந் தேதி லெனின் கிறாசிற்கு வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
திருமண நேரத்தில் ஆலயத்தில் சென்று காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். மனுவை பரிசீலித்த அவர், நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்ததால், காதலியை திருமணம் செய்யும்படி, லெனின் கிறாசுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து இருவரும் குளச்சலில் உள்ள ஒரு குருசடி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி 9 நாட்கள் போராட்டம் நடத்திய காதலியின் துணிச்சலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
- கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர்.
- சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் சுமார் 3000 அடிக்கு மேலே அடர்ந்த வனப்பகுதியில் மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த மலை கிராமத்தை சேர்ந்த சின்னான் - தனலட்சுமி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து காதலர்கள் தங்களது காதல் குறித்தும் பெற்றோர் எதிர்ப்பு பற்றியும் கிராம பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு, தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தனரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர். பின்னர் சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து பழங்குடியினர் முறைப்படி பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளரும், தளி பேரூராட்சி துணை தலைவருமான செல்வன், வன உரிமை குழு தலைவர்கள் முருகன், குப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து தேர்ச்சி பெற்று வீட்டில் உள்ளார். இவரும் அடியனூத்து பகுதியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் (23) என்ற இறைச்சி கடை வியாபாரியும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விபரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் மகளை காணாமல் பல இடங்களில் தேடிய மாணவியின் பெற்றோர் இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் காதல் ஜோடி தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்கும்படி வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த திருமணத்தை மாணவியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து தனது பெற்றோர் வாங்கிக் கொடுத்த தோடு, மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட அனைத்து தங்க நகைகளையும் போலீசார் முன்னிலையில் கழற்றி தனது தாயிடம் கொடுத்து விட்டு எனக்கு பெற்றோர் வேண்டாம். காதல் கணவர்தான் வேண்டும் என எழுதிக் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவரது தாய் கண்ணீர் மல்க இனிமேல் தன் முகத்தில் விழிக்க வேண்டாம் என கூறி அங்கிருந்து சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை மற்றும் காதலனின் குடும்பத்தினரிடம் அவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ்வதற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டனர். இதனையடுத்து காதல் கணவருடன் மாணவி புறப்பட்டுச் சென்றார்.