என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Machinery"
- ரூ.24 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
- இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் பயனாளிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் மற்றும் விசைகளை எடுப்பான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார்.
முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு 13 பயனாளி களுக்கு எந்திரங்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
விவசாயிகள் வேளாண்மை பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக குறு, சிறு விவசாயிகளுக்கு 75 சதவீதம் முதல் 100சதவீதம் வரை மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது. வேளாண் விற்பனை மையம் மூலம் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. அதில் விவசாயிகள் இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் பொழுது விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சோலார் மின்மோட்டார் இணைப்புகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொடுத்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களுக்கு தேவையான திட்டங்களை மானியத்தில் பெற்று கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய ஒன்றிங்களில் உள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண நிதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வங்கிகள் வழியாக வழங்கும் பணி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், வேளாண்மை துறை இணை எக்குநர் (பொறுப்பு) தனுஷ்கோடி, பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், திவ்யநாதன், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் மிகவும் சேதமடைந்து தாழ்வாக செல்கிறது.
- அறுவடை எந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் சாலையோ ரமாகவும், வயல் வெளிகள் நடுவிலும் மின்கம்பங்கள் அமைக்க ப்பட்டு வாழ்ம ங்கலம் பூலாப்பள்ளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் இயக்கு அறைக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் சேதம டைந்து தாழ்வாக செல்கிறது.
இதனால் விவசாயிகள் விவசாய பணிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாக னங்கள் கொண்டு செல்ல முடியாமல் அவதிக்கு ள்ளாகின்றனர்.
மேலும் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்ய அறுவடை இயந்திர ங்களை கொண்டு செல்ல முடியாமல் குறுவை நெற்பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை எனவும் விவசா யிகள் விவசாய பணிகளை செய்ய சேதமடைந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்கிறது.
- 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதுடன், பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் நிட்ஷோ கண்காட்சி விளங்கி வருகிறது. 21-வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர்-காங்கயம் மெயின் ரோட்டில் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் அருகே டாப்லைட் மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் நவீன எந்திரங்களை காட்சிப்படுத்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வருகிறது.
இதுகுறித்து நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:-
கண்காட்சி அரங்கம் முற்றிலும் குளிரூட்டப்பட்டது. 6 பெரிய அரங்குகளில் 450 ஸ்டால்கள் இடம்பெறும் வகையில் திட்டமிட்டுள்ளோம். பின்னலாடைத்துறையினருக்கு வரப்பிரசாதமாக அமையும் வகையில் இந்த கண்காட்சியில் நிட்டிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட அனைத்து வகையான எந்திரங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக பிரிண்டிங் துறையில் அதிநவீன எந்திரங்கள் அதிகம் இடம்பெறுகிறது. ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, சீனா, தைவான் நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் நவீன எந்திரங்கள் இடம்பெறுகிறது. 25 தையல் எந்திர நிறுவனங்கள், 15-க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள், டேப், ரோல், எலாஸ்டிக் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 12-க்கும் மேற்பட்ட நிட்டிங் எந்திர நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும். டிஜிட்டல் பிரிண்டிங் எந்திரங்கள் இடம்பெறுகிறது.
இத்தாலியில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சி இடம்பெற்ற நவீன எந்திரங்கள் நிட்ஷோ கண்காட்சியில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
- அதில், காலாண்டுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டரால் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப் படுகிறது.
நாமக்கல்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
அதில், காலாண்டுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டரால் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப் படுகிறது. அதன்படி, கலெக்டர் உமா, காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு அறையில் வைக்கப்
பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு கருவிகள் இருப்பில் உள்ளதை ஆய்வு செய்தார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 250 வாக்குப்பதிவு எந்திர கட்டுப்பாட்டு கருவிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன், தனி தாசில்தார் திருமுருகன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
- தனியாா் எண்ணெய் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா்.
- பருப்பு உலர வைக்கும் கலனில் சிக்கி அவா் காயமடைந்தாா்.
காங்கயம் :
மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் பப்லு பிரமானிக் (வயது 21). இவா் காங்கயம் அருகே, சத்திரவலசு பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக பருப்பு உலர வைக்கும் கலனில் சிக்கி அவா் காயமடைந்தாா்.இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- ரேசன்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்கு–திறதா?
- புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாய–விலைக் கடையினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அனைத்து நியாய விலைக்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்கு–திறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
அதில் தண்டலை ஊராட்சி, விளமல் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பதனை கண்டறியப்பட்டு ரூ.26 ஆயிரத்து 250 அபாரதம் விதித்தார்.
இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இவ்ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, தாசில்தார் நக்கீரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
- கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த கூட்டம்.
- விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த வடகாடு கோவிலூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா ரவி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் (வே.பொ) முருகதாஸ், தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கால்நடை மருத்துவர் மகேந்திரன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் திவ்யா, வேளாண்மை அலுவலர் சு.திவ்யா, உதவி விதை அலுவலர்கள் விஜய் கதிரேசன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் தொழில்நுட்ப தகவல்களை தெரிவித்து பேசினர்.
மேலும், இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி மற்றும் பாரத பிரதமரின் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் கதிரவன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டது. விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.
- ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.
அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.
திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.
ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.
அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.
- குளத்தின் வட பகுதியில் மண்ணை தோண்டி எடுக்கும் போது கற்சிலை ஒன்று தென்பட்டது.
- உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் உள்ள ருக்குமணி குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது குளத்தின் வட பகுதியில் மண்ணை தோன்றிய எடுக்கும் பொழுது கற்சிலை ஒன்று தென்பட்டது. அதனை பாதுகாப்பாக தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர்.
அம்மன் சிலை போன்று தோற்றமளித்த இந்த சிலையானது ஒரு பெண் தனது இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்று இருந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எடுத்துச் சென்றனர்.
முந்தைய காலத்தில் தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம் எனவும் இந்த சிலையும் அது போன்ற ஒரு சிலையாக இருக்கும் எனவும் பெரியோர்கள் தெரிவித்தனர்.
- அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.
கும்பகோணம்: மீது போலீசார் வழக்கு
கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரம் பகுதி சதாம்உசேன் தெருவை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 52). இவருக்கு சொந்தமான நஞ்சை நிலம் மருத்துவகுடி கிராமத்தில் உள்ளது.
இதில் நிஜாமுதீன் விவசாயம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்து வந்தார். தற்போது குறுவை நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று காலை வயலுக்கு சென்ற நிஜாமுதீன் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதை கண்டு அதற்கான பணிகளில் ஈடுபட்ட நினைத்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று மதியம் மேலமருத்துவக்குடி பட்டவெளி தெருவை சேர்ந்த பழனிச்சாமி(38) என்பவர் சிலருடன் அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுபற்றி நிஜாமுதீனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.
அங்கு எந்திரத்தை கொண்டு தனது வயலில் தன் உழைப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெல்லை பழனிசாமி மற்றும் சிலர் மும்முரமாக அறுவடை செய்தது தெரியவந்தது.
இதுபற்றி நிஜாமுதீன் பழனிச்சாமி யிடம் சென்று எப்படி என் வயலில் நீங்கள் அறுவடை செய்யலாம் என்று தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது பழனிசாமி மற்றும் அவருடன் வந்த கும்பல் நிஜாமுதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் செய்வதறியாது தவித்த நிஜாமுதீன் உடனடியாக சென்று திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார்.
இதுபற்றி போலீசார் பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்றொருவர் உழைப்பில் விளைந்த நெல்லை ஒரு கும்பல் அறுவடை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்