என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mall"
- தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார்.
- இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று அந்த பெண் கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவனுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்த நபர் ஒருவர், உனது ரேட் என்ன என்று கேட்டு , எங்க அப்பா, மாமா எல்லாமே டி.எஸ்.பி என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் கணவருக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட அழுதுகொண்டே தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். அதில், இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
- மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது.
- பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் மேற்கூரையில் சுமார் 1 வருடமாக 34 வயது பெண் வசித்து வந்ததை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அந்த மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது. மேலும் ஒரு சிறிய மேஜை, கம்ப்யூட்டர், காபி மேக்கர், அவரது உடை மற்றும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய சில பொருட்களையும் அங்கே வைத்து அவர் வசித்து வந்துள்ளார்.
மேற்கூரைக்கு செல்ல சரியான வழி இல்லாத நிலையில், பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வணிக வளாகத்தில் மேற்கூரைக்கு செல்லும் பாதையில் கம்பி இருப்பதை கண்டறிந்த ஒப்பந்ததாரர் அதுதொடர்பாக ஆய்வு செய்த போது தான் மேற்கூரை பகுதியில் இளம்பெண் 1 வருடமாக வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தங்குவதற்கு உரிய வீடு இல்லாததால் மேற்கூரையில் வசித்து வந்ததாக அவர் கூறி உள்ளார். பின்னர் போலீசார் அவரை எச்சரித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து செல்வதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.
இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் வணிக வளாகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணா வணிக வளாகம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.
- கீழ்தளத்தில் 17 கடைகளும், மேல் தளத்தில் 26 கடைகளும் உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி மார்க்கெட் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் பேரறிஞர் அண்ணா வணிக வளாகம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் இன்று அண்ணா வணிக வளாகத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
அண்ணா வணிக வளாகம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இங்கு கீழ் தளம் ,மேல் தளம் உள்ளது. தலா 9432 சதுர அடி பரப்பளவில் கீழ்த்தளம், மேல் தளம் அமைந்துள்ளன. கீழ்தளத்தில் 17 கடைகளும், மேல் தளத்தில் 26 கடைகளும் உள்ளது.
இந்த கடைகள் அனைத்தும் விரைவில் ஏலம் விடப்படுகின்றன.
இதைத் தவிர கழிப்பறை வசதிகள், சி.சி.டி.வி கேமராக்கள் உள்பட பல்வேறு வசதிகள் இந்த வளாகத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் அஞ்சுகம்பூபதி, உதவி பொறியாளர் ஆனந்தி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- ராமநாதபுரத்தில் மிளகாய் வணிக வளாகம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கூடுதல் வணிக வளாக கடைகள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கம் செய்யப்படும்.
ராமநாதபுரம்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், எட்டிவயல் கிராமத்தில் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ரூ.13 கோடி செலவில் 65 வணிக கடைகள் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி பேசும்போது கூறியதாவது:-
மிளகாய் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 வணிக கடைகள் மூலம் மாவட்டத்தில் உள்ள குண்டு மிளகாய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைவார்கள்.ஏற்கனவே இந்த வளாகத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மிளகாய் குளிர்பதன கிட்டங்கி செயல்பட்டுவருகிறது. மிளகாய் குளிர் பதன கிட்டங்கி மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் ஆகிய 2-ம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிப்படியாக இந்த வளாகத்தில் கூடுதல் வணிக வளாக கடைகள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கம் செய்யப்படும்.
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் உபரி நீர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நிரப்பப்பட்டு நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் ராஜா, வேளாண்மை விற்பனை குழு துணை இயக்குநர் மூர்த்தி, மாநில வேளாண்மை விற்பனை வாரிய உதவி செயற்பொறியாளர் நாகரத்தினம், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சத்திய குணசேகரன், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் அன்சாரி, எட்டிவயல் ஊராட்சி தலைவர் கனகசக்தி பாஸ்கரன், மிளகாய் வத்தல் வணிகர் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலியர்களை கத்தியால் குத்தியும், கார்களை கொண்டு மோதியும் தாக்குதல் நடத்துவதை பாலஸ்தீனர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்ற அரி புல்ட் (வயது 45) என்பவர் நேற்று முன்தினம் ஜெருசலேம் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வணிக வாளகத்தில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு பாலஸ்தீன வாலிபர் ஒருவர் அரி புல்ட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். எனினும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் அரி புல்ட் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து பாலஸ்தீன வாலிபரை சுட்டார்.
இதில் பாலஸ்தீன வாலிபரின் உடலில் குண்டுபாய்ந்து சுருண்டு விழுந்தார். பின்னர் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் சிலர் ஓடி சென்று அவரை மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த அரி புல்ட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கல்வி சம்பந்தமாக வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள அரி புல்ட் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IsraeliAmerican #StabbingAttack
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்