என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "manager"
- மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக உள்ள அனிதா ஆனந்த் என்பவரை அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி என்பவரின் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் பணியாற்றும் செயலாட்சியர் தேவகிக்கு ஒப்பந்த முறையில் கார் ஓட்டும் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதோடு அலுவலகத்தில் இருந்தபோது தன்னை ஒருமையில் பேசி, "என்னை ஒன்றும் செய்ய முடியாது நான் நினைத்தால் உன்னை கோயம்புத்தூருக்கு பணி மாற்றம் செய்துவிடுவேன்" என மிரட்டினார்.
மேலும், " பெண் என்றும் பாராமல் தன்னை அசிங்கமாக பேசியது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே கோகுல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி கோகுல்ராஜ் மீது ஆபாசமாக பேசியது, பெண்ண அவமதிப்பு செய்வது, மிரட்டல், பெண் வன்கொடுமை என 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே சாதாரண ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு ஊழியரை மிரட்டும் அளவிற்கு அவருக்கு தைரியம் கொடுத்தது யார் என சக அரசு ஊழியர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் செயலாட்சியர் தேவகியும், கைது செய்யப்பட்ட கோகுல்ராஜும் ஜூஸ் குடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
இதைதொடர்ந்து, ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு பணியில் மேலாளராக உள்ளவரை மிரட்டுவதற்கு அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.
- டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார்.
2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அப்பொழுது அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்டீவ் டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் மஸ்க்- ஐ டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் நாம் தரும் சம்பளத்திற்கு தகுதியானவர்களா? என்று ஆராய கூறினார்.
அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார். இந்த முடிவு காரணமாக ப்ராடக்ட் அண்ட் டிசைன் பிரிவில் பணியாற்றி வந்த பலர் பாதிக்கப்பட்டனர்.
உலகின் பெரிய நிறுவனமான டுவிட்டர் தனது பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது, மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களையும் இது குறித்து பரிசீலனை செய்ய வைத்தது. இந்நிகழ்வை தொடர்ந்து வேலை வாய்ப்பு எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.
இதே ஃபார்முலாவை பெரும்பான்மையான நிறுவனங்கள் கையில் எடுத்தனர். கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற பிரபல நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு மட்டும் 1.5 லட்சத்திற்கு அதிகமானோரை பணி நீக்கம் செய்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் மிட்டில் மேனேஜர்ஸ் எனப்படும் ஊழியர்கள் மற்றும் தலைமை பொறுப்புகளில் வகிப்பவர்களுக்கு இடையில் பணியாற்றும் மேலாளர்கள் தான். ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கி, உடனடியாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்த எலான் மஸ்க்-இன் நடவடிக்கை தொழில்நுட்ப துறையில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், எலான் மஸ்க்-இன் இந்த நடவடிக்கை காரணமாகவே தொழில்நுட்ப துறையில் இயங்கி வரும் இதர முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த காரணமாக அமைந்தது என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
- நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூரு நகரில் பட்டப்பகலில் நபர் ஒருவரை நான்கைந்து பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் யார், அவர் ஏன் பொது வெளியில் அப்படியான தாக்குதலுக்கு ஆளானர் என்ற காரணங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில், இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான நபர் சுரேஷ் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே இவர் அதே நிறுவனத்தை சேர்ந்த உமாசங்கர் மற்றும் வினீஷ் என்ற இரு ஊழியர்களிடம் அதிவேகமாக வேலை செய்ய வலியுறுத்தி வந்துள்ளார்.
இதன் காரணமாக உமாசங்கர் மற்றும் வினீஷ் இணைந்து வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் கோபமுற்ற இவர்கள் மேலாளரை அடியாட்கள் வைத்து தாக்குதல் நடத்துவதென முடிவு எடுத்தனர். அப்படியாக இருவரும் இணைந்து மேலாளரை தாக்குவதற்கு அடியாட்களை தேர்வு செய்துள்ளனர்.
இருவரின் வலியுறுத்தலின் பேரிலேயே சம்பவத்தன்று பொது வெளியில் மேலாளரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ அதே பகுதியில் வந்த கார் ஒன்றின் டேஷ் கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சிகளே சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
வீடியோவை வைத்து விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்திய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Frustrated with work pressure & being constantly pulled up by a senior colleague, few employees of a private firm hired goons to beat up their senior
— Nabila Jamal (@nabilajamal_) April 7, 2024
Victim, an auditor at Heritage Milk Product Company in #Bengaluru was attacked in Kalyan Nagar outer ring road
Cops have… pic.twitter.com/udM3BgUrdO
- குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
- சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
- தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35).
இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து இடுப்புலிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எர்ணாபுரம் சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கீழபுலியூர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த காரில் மர்மமான முறையில் தனியார் நிறுவன மேலாளர் இறந்து கிடந்தார்
- உடலை கைப்பற்றி மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் அருகேயுள்ள கீழப்புலியூர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரில் இறந்து கிடந்தவர் சித்தலி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் நல்லுசாமி (வயது 40) என்பதும், இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிய நிலையில் இவரது மனைவி இறந்து 9 ஆண்டுகள் ஆவதும், இதனால் இவர் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்தது. மேலும் பெரம்பலூரில் உள்ள நான்கு ரோடு அருகே அரியலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நல்லுசாமி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தெற்கு ெரயில்வே தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் பொறுப்பேற்றார்.
- பல்வேறு பயிற்சிகளை பெற்றுள்ளார்.
மதுரை
தெற்கு ெரயில்வே முதன்மை தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1989-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியான ஸ்ரீகுமார் மெட்ராஸ் ஐ.ஐ.டி, காரக்பூரில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தெற்கு ெரயில்வே மற்றும் தென்மேற்கு ெரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.
முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளராக சேர்வதற்கு முன்பு, பிலாஸ்பூ ரில் உள்ள தென்கிழக்கு மத்திய ெரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக இருந்தார். அதற்கு முன், தெற்கு ெரயில்வேயின் தலைமை போக்குவரத்து திட்ட மேலாளராகவும், தெற்கு ெரயில்வேயின் தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளராகவும், தென் மண்டலத்தின் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் தலைமை பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து, பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமு கத்தில் சரக்கு போக்குவரத்து குறித்த பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் கடனுக்கு 50 சதவீத மானியம் வழங்க, குமாரிடம் மாவட்ட மேலாளர் பொறுப்பு சாந்தி ரூ.15,000 லஞ்சமாக கேட்டார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் சீலநா யக்கன்பட்டியில் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. அங்கு ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெத்தநாயக்கன்பா ளையம் மணியார் குண்டத்தை சேர்ந்த குமார் (வயது 39) என்வர் டிராக்டர் வாங்க விண்ணப்பம் அளித்தார். அதற்கு குமாரிடம் நேர்காணல் நடந்தது. தொடர்ந்து 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் கடனுக்கு 50 சதவீத மானியம் வழங்க, குமாரிடம் மாவட்ட மேலாளர் பொறுப்பு சாந்தி ரூ.15,000 லஞ்சமாக கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை போலீசார் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் நோட்டுகளை மாவட்ட மேலாளிடம் கொடுக்க குமார் வந்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் லுங்கி அணிந்து அலுவலகத்திற்கு வந்தனர். குமார் மாவட்ட மேலாளர் சாந்தியிடம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றார். ஆனால் அவர் அந்த பணத்தை அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தியிடம் வழங்க அறிவுறுத்தினார்.
அதன்படி குமார் கொடுத்த பணத்தை உதவி யாளர் பெற்றுக் கொண்டார். அப்போது போலீசார் கையும் களமாக பிடித்து மாவட்ட மேலாளர் சாந்தி மற்றும் உதவியாளர் சாந்தியை கைது செய்தனர்.
தொடர்ந்து இரவு முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்று அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதைனிடையே, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சேலம் பெண்கள் கிளை சிறையில் அவர்களை அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது.
- மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள். அரசு கேபிள் டி.வி.வாரியம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம், கிராம தொழில் முனைவோர் சார்பில் நடக்கும் இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.
மாவட்ட மின்னாளுமை முகமை மேலாளர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார். கூட்டத்தில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் இ-சேவை மையம் அதிகரித்து வருவதால் போட்டியும் அதிகரித்துள்ளது. இ-சேவை மையத்தினர் அதற்கு தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அனைத்து மையங்களிலும் இரண்டு திரைகளை கொண்ட கணினியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விண்ணப்பதாரர் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, இ-சேவை மையத்தினர் தட்டச்சு செய்யும்போது, அதை எதிர்புறம் உள்ள விண்ணப்பதாரர் பார்த்து தவறு இருந்தால் அதை கூறி திருத்த முடியும். சான்றிதழுக்கான கட்டண பட்டியலை இ-சேவை மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.
- கொண்டலாம்பட்டியில் உறவினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு துணிக்கடை மேலாளர் தற்கொலை செய்தார்.
- இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புகார வீதி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21). கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு துணிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று தனது உறவினருக்கு செல்போனில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு கோபாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று கோபாலகிருஷ்ணN உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் கோபாலகிருஷ்ணன் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் பாண்டி பஜாரில் உள்ள பிரபல தங்க நகை கடையில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
பணி முடிந்து வீட்டுக்கு வந்த ரவிக்குமார் மன வேதனையில் இருந்தார். இதுபற்றி மனைவி கேட்டபோது கடையில் பிரச்சினை என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் அறைக்குள் சென்ற ரவிக்குமார் திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கூச்சலிட்டார். தகவல் அறிந்ததும் குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களாக கடையில் உள்ள பிரச்சினை குறித்து ரவிக்குமார் மனைவியிடம் கூறி புலம்பி வந்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவிக்குமாரின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? அவருக்கும் கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே மோதல் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்