என் மலர்
நீங்கள் தேடியது "Manu"
- பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை விசாரித்து பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ஊன்று கோலினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது வண்ணாரப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து கழிவுநீர் பிள்ளையார்பட்டி எல்லைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை விரிவாக்கபணி செய்து வண்ணாரபேட்டை ஊராட்சி எல்லைவரை கொண்டு வந்துள்ளனர். இதனால் இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.
கழிவுநீர் வருவதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் உங்கள் கோரிக்கை குறித்து மனு அளியுங்கள் என்றனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு மனு அளித்தனர்.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் பூர்த்தங்குடி, தெ.நெடுஞ்சேரி ஊர் பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்க் அரு காமையிலும், காட்டு மன்னார்கோயில் நெடுஞ்சாலை ஒரத்திலும் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்துள்ளது. இங்கு வரும் மதுபான பிரியர்கள் சாலையிலேேய வாகனங்களை நிறுத்தி விடு கின்றனர். மேலும், குடித்து விட்டு மது போதையில் கூச்சலிடுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர். இதனால் டி.நெடுஞ்சேரி முதல் கந்தகுமாரன் வரை அதிகளவில் வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த மதுபான கடை டி.நெடுஞ்சேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது. இடப்பற்றாகுறை காரண மாக பூர்த்தங்குடி ஊராட்சி யில் முறை கேடாக இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையை நிரந் தரமாக எங்கள் ஊராட்சியில் இருந்து இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் மகனுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
- மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகனுடன் தாய் சாலையில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் பண்ருட்டி திடீர் குப்பத்தை சேர்ந்த சக்தி (வயது 42). என்இபது தெரிய வந்தது இவரது பாட்டனாருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் இருந்து வந்தது . இதனை எனது தந்தை பராமரித்து வந்த நிலையில் அவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த 5பேர் நிலத்தை அபகரித்து போலி பத்திரம் தயாரித்து அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டு பறித்து கொண்டனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என சக்தி தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
- மனுகொடுக்க வந்த மகேந்திரன் என்பவர் டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட நேரமாக திறந்து இருப்பதால், பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது என கோஷமிட்டார்.
கடலூர்,:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். கடலூர் மாவட்டம் கிள்ளையை சேர்ந்த மகேந்திரனும் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது அவர் டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட நேரமாக திறந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது என கோஷமிட்டார். அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அழைத்து உங்களது கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடமோ அல்லது மாவட்ட நிர்வாகத்திடமோ மனு அளிக்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இப்படி பேசக்கூடாது என எச்சரித்தனர். அதன் பின்னர் மகேந்திரன் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வக்பு விதிகளுக்கு எதிராக செயல்படும் ஜமாத் தலைவரை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
- 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்ட வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஜமாத்திற்கு தேர்தல் நடத்தி 9 வருடங்கள் ஆகியும், தற்போது வரை எந்தவித வரவு-செலவு அறிக்கையும் பள்ளிவாசலில் ஒப்படைக்கவில்லை. இதுவரை பல லட்ச ரூபாய் வசூல் செய்து ஜமாத் தலைவர் தன்னிச்சையாக வைத்துள்ளார். அது பற்றி வக்பு வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக வக்பு வாரிய தலைவர் தேர்தல் நடத்தி முறையான வரவு-செலவு கணக்கை செயல்படுத்த வேண்டும். வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத்தை நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர தேர்தல் நடத்த வேண்டும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் மனு கொடுத்தனர்.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.
- மாணவி ஒருவருக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நட வடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 மாணவிக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ. 50,000 காசோலையினை மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 13 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கும்பரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரக் கோரி மேலாண்மைக்குழுவினா் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
- 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா, துணை தலைவர் தீபா ஆகியோர் முன்னிலையில் மாண வர்களின் பெற்றோர் ராமநாதபுரத்தில் கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளியில் 180 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போ தைய அரசு, மாண வர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள், சலுகைகளால் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்து தற்போது 400 மாணவர் படித்து வருகின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்களே இன்னும் உள்ளது.
மேலும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்கள் நடத்தப்ப டுவதால் தனித்தனியாக கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது. இடநெருக்கடியால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மரத்தடியில் பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
- ஓமன் நாட்டு சிறையில் வாடும் கணவரை மீட்டு தரவேண்டும்.
- கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரசிங்கம். இவரது மனைவி கண்மணி. இவர் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனி டம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வீரசிங்கம் (வயது39). ஓமன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அரபு முதலாளியிடம் 6 மாத வேலை செய்தார். அவர் எனது கணவருக்கு சம்பளமும் எதுவும் கொடுக்காததால் நாங்கள் இந்தியாவில் இருந்து பணம் அனுப்பி அவர் சொந்த ஊருக்கு வர ஏற்பாடு செய்தோம்.
தொடர்ந்து எனது கணவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத் தில் ஓமன் நாட்டில் மீன்பிடி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 12-ந்தேதி ஓமன் நாட்டில் இருந்து விடுமுறைக்காக இந்தியா புறப்பட்டார்.
அப்போது எனது கண வரின் முன்னாள் முதலாளி கொடுத்த புகாரின்பேரில் ஓமன் ஏர்போர்ட்டில் ஓமன் போலீசார் அவரை கைது செய்ததாக ஊர் திரும்பிய அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தற்ேபாது வேலை பார்க்கும் முதலாளியை தொடர்பு கொண்டோம். அவரும் எனது கணவரை சிறையில் இருந்து மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார். ஆனால் மாதங்கள் பல கடந்த பின்னரும் கணவரை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை மீண்டும் தொடர்பு கொண்ட போது அலட்சியமாக பதில் அளித்தார்.
எங்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எனது கணவரை இந்தியா மீட்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுக்கடைமேடு கிராம மக்கள் 6 தலைமுறையாக வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டு காலமாக வீட்டுமனைகள் இல்லை எனக்கோரி கடந்த 2020-ம் ஆண்டும் 2022-ம் ஆண்டும் பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் குழு அமைத்து பட்டா தருவதற்கான முகாந்திரம் உள்ளதால் பட்டாதாரர்களுக்கான பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடம் தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளார்.
ஆனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் இனிவரும் மழை காலங்களில் தங்குவதற்கான இட வசதி இல்லாத காரணத்தினால் கடந்த 10-7-2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவச பட்டாக்கள் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதை உடனடியாக செயல்படுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் ஏற்கனவே தயார் செய்த பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடத்தை கொண்டு உடனடியாக பயனாளிகளை தற்காலிக குடிசைகள் அமைக்க அனுமதி வழங்க உத்தரவிடும் படியும் வலியுறுத்தி உள்ளனர்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன்.
- வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று குறைகேட்பு கூட்டம் நடை பெற்றது. குறிஞ்சிப்பாடி கருங்குழி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி ஆகியோர் மனு அளிக்க வந்தனர். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை வேலையில் அமர்த்திய ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர். மேலும் ராஜேந்திரன் சில்வர் பாத்திரம் மற்றும் மண்வெட்டி ஆகியவற்றை மாலையாக கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இதுநாள் வரை என் மனைவிக்கு இந்த திட்டத்தில் வேலை தர மறுக்கின்றனர். பலமுறை இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மேலும் வேலை அட்டை பதிவு செய்யவில்லை. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த வேலை திட்டத்தில் சேர்த்து முறைகேடு செய்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சமமாக வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
- குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
- மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்பு டைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் 452 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு 3சக்கர கை மிதிவண்டியினை கலெக்டர் பழனி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.