என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Equipment"

    • உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகள் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர் வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகளை தனது சொந்த செலவில் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

    அவர் கூறும் போது, முதல்-அமைச்சரின் மகத்தான திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வயதான முதியவர்கள் மற்றும் நீரழிவு நோயாளிகள் பயன்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களின் தேவையற்ற அலைச்சலை குறைக்கும் பொருட்டு சாம்பவர் வடகரை பேரூராட்சி பொதுமக்களின் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தப் பரிசோதனை நிலையம் அமைக்கவும், கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியின் போது சாம்பவர் வடகரை பேரூர் செயலாளர் முத்து மற்றும் மருத்துவர் முத்து பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியினர் பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
    • இதன் முதல் கட்டமாக கோவில்பட்டி, விளாத்திக்குளம், புதூர் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு உபகரண பொருட்கள் கடந்த வாரம் வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலை யங்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியினர் பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    உபகரண பொருட்கள்

    வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவரணி சார்பில் முதல் கட்டமாக கோவில் பட்டி, விளாத்திக்குளம், புதூர் பகுதியில் உள்ள சுகா தார நிலையங்களுக்கு உப கரண பொருட்கள் கடந்த வாரம் வழங்கப் பட்டன.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கணேஷ் நகர் பகுதியில் உள்ள நகர்நல ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் எடை பரிசோதனை எந்திரம், போர்வைகள், நாற்காலிகள், ரத்தம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வைகள் பரிசோத னைக்கான உபகரண பொருட்களை ஆரம்ப சுகா தார மருத்துவ அலுவலர் ஆர்த்தியிடம் வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற் செல்வன், பகுதி செய லாளரும், கவுன்சிலருமான ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, பொன்னப்பன், கண்ணன், வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை தலைவர் ஜூடி ஜீவன்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் பெனில்டஸ், வட்ட செயலாளர்கள் சுப்பையா, மூக்கையா, சிங்கராஜ், மாநகர மருத்துவ அணி துணைத்தலைவர் மாரிமுத்து, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி பிரதிநிதி சாமுவேல் செல்வராஜ், தெற்கு மாவட்ட ம.தி.மு.க. இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 150 கர்ப்பிணி தாய்மார்கள் பயனடைந்தனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம், பேராம்பட்டு ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே. எஸ்.ஏ.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் தீபா, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய மாவட்ட மருத்துவர் அணி தலைவர் ரவி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    இதில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் மலர்மன்னன், மாவட்டம் மருத்துவர் அணி துணை தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
    • செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம் .எல். ஏ. தலைமையிலும் திருவையாறு ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை தொகுதி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ், தொகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார், பாட்ஷா, புவனேஸ்வரி, வெங்கடேசன், நிர்வாகிகள் டாக்டர் திருச்செ ல்வி, காயத்ரி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
    • கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் பெரும் சேதம் அடைந்ததால் இந்த ஆஸ்பத்திரி அருகிலேயே சுமார் ரூ.40 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    பழுதடைந்துள்ள ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ உபகரணங்கள் இந்த புதிய கட்டிடத்தில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் மருந்து பொருட்கள் எடுப்பதற்காக கால்நடை உதவி மருத்துவர் ஜானகிப்பிரியா சென்ற போது புதிய கட்டிடத்தின் பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • சிகிச்சையின் போது கவனக்குறைவாக மருத்துவ உபகரணத்தை வயிற்றில் வைத்து தைத்துள்ளனர்.
    • இதற்கு நஷ்ட ஈடு கேட்டு பிரபாவதி வழங்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பிரபாவதி, தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    கடந்த 2010 செப்டம்பர் 14-ந் தேதி வலி அதிகரித்ததால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து, மாத்திரை சாப்பிட்டார். வலி குறையாததால் புதுச்சேரி அரசு மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு, குடல்வால் பிரச்சினை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அறுவை சிகிச்சைக்காக வயிற்றுப் பகுதியை கிழித்த போது, அடிவயிற்றில் கிளிப் போன்ற மருத்துவ உபகரணம் (ஆர்ட்ரி பர்செப்ஸ்) ஒன்று இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பிரபாவதி மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வயிற்றில் இருந்த மருத்துவ உபகரணம் மற்றும் குடல் வால்வு அகற்றப்பட்டது. இதுகுறித்து பிரபாவதி, மருத்துவர்கள் கவனக் குறைவு காரணமாக தனக்கு ஏற்பட்ட பாதிப்பு, சேவை குறைபாட்டிற்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய தலைவர் முத்து வேல் மற்றும் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், பிரபாவதிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த போது கவனக்குறைவாக மருத்துவ உபகரணத்தை நோயாளியின் அடிவயிற்றில் வைத்து தைத்ததால், பல்வேறு தொல்லைகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாகி உள்ளார்.

    எனவே பிரபாவதிக்கு ரூ. 7 லட்சம் நஷ்டஈடு, வழக்குத் தொகையாக ரூ. 20 ஆயிரம் என மொத்தம் ரூ. 7 லட்சத்து 20 ஆயிரம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், தீர்ப்பின் நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் வழங்கிட உத்தர விடப்பட்டது. தவறும் பட்சத்தில் 9 சதவீதம் ஆண்டு வட்டி மேற்படித்தொகை செலுத்தும் வரை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் சிகிச்சை முறையாகவே அளிக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.213 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள 7 மாடிகளை கொண்ட ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் ரூ.84 கோடியே 17 லட்சத்தை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இந்த நிதியை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்துக்கு வழங்கினார்கள்.

    பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் உதவி மையம், வழிகாட்டி தகவல் மையம், சிற்றுண்டி அறை, காத்திருப்போர் அறை என புதிய கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தரத்துக்கு உயர்த்தி உள்ளார். வடசென்னை வளர்ச்சி என்ற வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பல்வேறு வழிகளில் நிதி உதவி அளித்து வருகிறது.

    அந்த வகையில் இந்த மருத்துவமனையின் கட்டமைப்புக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் ரூ.84 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நிதி ஆதாரம் ஒரே பணிக்காக அளிக்கப்பட்டு உள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

    இதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மார்ச் 1-ந் தேதி முதலமைச்சரின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி வருகிற 28-ந் தேதி இந்த ஆஸ்பத்திரி பொது மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் சிகிச்சை முறையாகவே அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தனியார் வசம் ஒப்படைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லா பருவ காலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயற்கையானதுதான்.

    தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ச்சியாகவே கட்டுக்குள் உள்ளன.

    டெங்கு பாதிப்பு 2 முறை அதிக அளவில் இருந்தது. 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். இது தான் அதிகபட்ச உயிரிழப்பாகும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.

    வடசென்னைக்கான வளர்ச்சி திட்டம் அனைத்து துறைகளின் சார்பிலும் தொடர்ச்சியாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரி 860 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு மருத்து வமனையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இது வடசென்னை பகுதி மக்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். இந்த ஆஸ்பத்திரிக்கு 102 டாக்டர்கள், 236 நர்சுகள், 79 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 240 தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    மேயர் பிரியா, சுகாதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவ லர் சிவஞானம், தேசிய நல வாழ்வு குழும இயக்குனர் அருண், தம்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் காலிக்குடத்துடன் கலந்து கொண்டார்.
    • தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியம் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.

    மருத்துவ உபகரணங்கள்

    துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மாநகர பொறியாளர் அசோகன் மற்றும் செயற்பொறியாளர்கள், 4 மண்டல உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், 55 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ரூ.9.92 கோடி மதிப்பில் மாநகராட்சி பகுதியில் உள்ள 9 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    காலி குடத்துடன்...

    மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்கள், சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்வதற்கு சுயஉதவிக்குழுக்கள் மூலம் 645 நபர்களை நியமிக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பங்கேற்ற 32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் காலிக்குடத்துடன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது கடந்த ஒருவாரத்திற்கு மேலாக எங்களது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியம் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    பாலபாக்யா நகரில் விடுபட்ட இடங்களில் சாலை கள் அமைக்க வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தார்சாலைக்கு பதிலாக பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    26-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரபா சங்கரி, 30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன்நாதன் என்ற கணேசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 10 மணிக்கு வந்தனர். ஆனால் 10.25 மணி வரை கூட்டம் நடைபெறாததால் அவர்கள் கையெழுத்திட்டு சென்றனர்.

    ×