என் மலர்
நீங்கள் தேடியது "members"
- நெற்குப்பை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மன்ற அலுவலகத்தில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.
சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். செயல் அலுவலர் உமா மகேஸ்வ ரன் முன்னிலை வகித்தார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் மாதாந்திர வரவு-செலவு கணக்குகளை மன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு மன்ற உறுப்பி னர்களுக்கு உயர்த்தியுள்ள அகவிலைப்படிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் நகர்ப்புற திட்டத் தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைத்தல், நகரில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான குடிநீர் ஊரணிகளான நல்லூரணி மற்றும் செட்டி ஊரணி ஆகியவற்றை சீரமைத்தல், மாநில நகர்புறத் திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சார சிக்கனத்தை ஏற்படுத்தும் விதமாக புதிய எல்.இ.டி. விளக்குகளை ஏற்படுத்துதல், பள்ளத்து பட்டியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பணி தொடங்குதல் போன்ற 28 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திருப்புவனம் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
- கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மானாமதுரை
திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள், சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா மற்றும் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்துக்கு நீண்டகாலமாக பால் வழங்காத உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.
- தற்போது இந்த இயக்கத்த்தில் 2 கோடி உறுப்பினர்களை எட்டி உள்ளோம்.
- தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், ராம்குமார், சேகர், ரெத்தினசாமி, இளமதி சுப்பிரமணியன், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் அனைவரை யும் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகரங்களில் அ.தி.மு.க. மகளிரணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யும் பணியை வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதிக்குள் முடித்து படிவஙக்ளை ஒப்படைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசி நமக்கு உள்ளதால் தான் தற்போது இந்த இயக்கத்த்தில் 2 கோடி உறுப்பினர்களை எட்டி உள்ளோம்.
நாடாளுமன்ற தேர்த லோடு, சட்ட மன்ற தேர்தலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. சம்பா சாகுபடி செய்ய முடியுமா? என விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் எப்போது வந்தாலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தான் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், மதியழகன், கோவி.இளங்கோ, கோவி.தனபால், முருகானந்தம், இளங்கோவன், பாரதிமோகன், அசோக்குமார், சாமிவேல், கலியமூர்த்தி, இளம்பெண்கள், இளைஞர் பாசறை செயலாளர் துரை.சண்முகபிரபு மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 51-வது வட்ட செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.
இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் ஆலோசனையின் பேரில் தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டா குளத்தில் மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் கொட்டாகுளம் கணேசன், மாவட்ட செயலாளர் முருகன், தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கொட்டாகுளம் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோவிலில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் கணேசன் நாடார், சங்கரலிங்க நாடார், சுப்பிரமணிய நாடார், நல்லமுத்து ராசையா நாடார், சுவாமிதாஸ் நாடார், அருணாச்சலம் நாடார், பழனிச்சாமி நாடார், இசக்கி நாடார், துரைராஜ் நாடார், முத்தையா சாமி நாடார், காளிதாஸ் நாடார், முருகையா நாடார் மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.
- அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை கடநத ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.
நெல்லை:
தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பேணி காக்கும் பொருட்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.
மேற்படி நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியிடத்து விபத்து மரணம் போன்றவற்றுக்காக நிவாரண உதவி, நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்படி அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை கடநத 19-6-2020 முதல் இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளும் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.
நலவாரியங்களில் உறுப்பினராக சேர்வதற்கு பணிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் போன்ற ஆவணங்களுடன் http://www.tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு கோரி விண்ணப்பித்து கொள்ளலாம்.
ஏற்கனவே கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்கள் தங்களது பதிவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இணையதளம் வழியாக புதுப்பித்து கொள்ள வேண்டும்.
எனவே நெல்லை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் மேற்கண்டவாறு நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.
இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம், கூடுதல் பொறுப்பு) குலசேகரன் தெரிவித்துள்ளார்.
- புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
- தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நத்தபள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி அருகில் இச்சிப்பாளையத்தில் அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நேற்று இரவு 9.30 மணிக்கு சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் (51) எழுத்தர் வைத்தி(45) இருவரும் சங்கத்தின் ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.
அப்போது அங்கு அருகில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து இரவு நேரத்தில் சங்கத்தை திறப்பதன் அவசியம் என்ன என்று சங்கத்தை முற்றுகை இட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் விரைந்து வந்து சங்க செயலாளாளர் பரமேஸ்வரனிடம் விசாரனை நடத்தினர்.
ஈரோடு கூட்டுறவு துணைப்பதிவாளர் இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்திட சில ஆவணங்களை உடனடியாக கொண்டு வரச் சொல்லி உள்ளார் அதற்காக தான் வந்தோம் என்று கூறியதை உறுதி செய்த பிறகு சங்க உறுப்பினர்களிடம் கூறி ஆவணங்களை எடுத்துக் செல்ல அனுமதித்தனர்.
இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் கடந்த 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 18 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் இதுவரையிலும் வழங்கப்படவில்லை எனவே தான் இந்த நிலையில் இரவு நேரத்தில சங்கம் திறக்கப்பட்டதால் எங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது அதனால் தான் அனைவரும் ஒன்று திரண்டோம் என கூறினார்கள்.
இதனால் அந்தப் பகுதியில் கமர் 3 மணி நேரம் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. #tamilnews
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது;-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.
18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு, இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்விக்குழுவின் செயல்பாடுகளை தொடர்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்து குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வுகள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தேர்தல் தாசில்தார் நாகராஜன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பள்ளிக்கல்லூரி தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மேல்சபையில் உள்ள 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.
காலியாகும் மேல்சபை பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த ரவிகுமார், தேஜஸ்வினி கவுடா, ரகுநாத் ராவ் மல்காபுரே, கே.பி.நஞ்சுன்டி, ருத்ரே கவுடா ஆகியோர் இந்த தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் சி.எம்.இபுராகிம், கே.கோவிந்தராஜ், அரவிந்த் குமார், ஹரிஷ் குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் எப்.எம்.பாரூக், எஸ்.எல்.பைரே கவுடா ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மேற்கண்ட 11 பேரும் கர்நாடக மாநில சட்டமன்ற மேல்சபைக்கு இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று தேர்வாகியுள்ளவர்களில் ரகுநாத் ராவ் மல்காபுரே, சி.எம்.இபுராகிம் மற்றும் கே.கோவிந்தராஜ் தற்போது மேல்சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர். இந்த தேர்தலின் மூலம் இவர்களின் பதவிக்காலம் இன்னும் ஆறாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.