search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Membership Camp"

    • சாயல்குடி அருகே நரிப்பையூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே நரிப் பையூர் கிராமத்தில் முதுகு ளத்தூர் சட்டமன்றத்தொ குதி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற் றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கி ணைப்பாளர் பசீர் அகமது தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், தொகுதி செய லாளர் வெங்கடேஷ், ஒன் றியச் செயலாளர் பழனி முருகன், பென்னகரம் ராஜ பாண்டி, ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    நாம் தமிழர் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு கட்சியில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டை வழங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் ராஜ பாண்டியன், ஒன்றிய தலை வர் விமல்ராஜ், தொகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருள் ராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் சக்திவேல், நரிப்பையூர் சிவா, கிளைச் செயலாளர் அந்தோணி ஜேசுபாலன், கிளைத்தலை வர் சேசு ரமேஷ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி கள் பங்கேற்றனர்.

    • சிந்துபூந்துறையில் தி.மு.க. மகளிர் தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் விஜிலா சத்தியானந்த் முன்னிலை வகித்தார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில் தச்சநல்லூர் பகுதிக்கு உட்பட்ட சிந்துபூந்துறையில் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் விஜிலா சத்தியானந்த் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.வி.சுரேஷ், கிரிஜா குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டி யன், தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணி யன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் நவநீதன், மாவட்ட பிரதிநிதி இசக்கி பாண்டியன், மாநகரத் துணைச் செயலாளர் அப்துல் கையூம், தொண்டரணி அமைப்பாளர் தொப்பி மைதீன், மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மகளிர் தொண்டரணி தலைவி பத்மா, மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் தேவிகா, விமலா, மகளிரணி துணை அமைப்பாளர்கள் வள்ளியம்மாள், சாகிரா, மாமன்ற உறுப்பினர்கள் கோகிலவாணி, ராஜகுமாரி, சகாய ஜூலியட் மேரி, வசந்தா, அமீர் பாத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா செய்திருந்தார்.

    • கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி மற்றும் ஐந்தாங்கட்டளை சிவகாமி புரத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் வேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி மற்றும் ஐந்தாங்கட்டளை சிவகாமி புரத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் வேல்ராஜ் தலைமை தாங்கி னார்.தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தர்மா, மாரியப்பன், கடையம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஜனதா காமராஜ், திப்பணம்பட்டி ராமசாமி, மேட்டூர் செல்வராஜ், காவூர் கிளைச் செயலாளர் மாரியப்பன், புங்கம்பட்டி கிளை செயலாளர் மாடசாமி , சங்கரலிங்கபுரம் நடராஜன், ராம நாதபுரம் கிளைச் செயலாளர் சரவணன், தெற்கு மடத்தூர் கிளை செயலாளர் பேச்சி முத்து, ஐந்தாங்கட்டளை சிவகாமிபுரம் கிளைச் செய லாளர் பந்தா முருகேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பால சுப்பிரமணியன் மற்றும் கருவேலம், வண்டிகாரன் செல்வராஜ், அப்பா குட்டி, செல்வராஜ் , சமுத்திரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும்.
    • தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார். முடிவில் வட்ட செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி நிர்வாகிகள் இம்மானுவேல், ரேவதி, கலா, பகுதி துணை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும். இதைப்பற்றி எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ, அமைச்சர் உதயநிதியோ மற்ற தி.மு.க.வினரோ சிந்திக்கவில்லை. இவர்களின் ஒரே சிந்தனை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். செந்தில்பாலாஜி எதையாவது சொல்லி விட்டால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என்று முதல்-அமைச்சர் பதற்றமாக உள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 53 ஆண்டுகால வரலாறு உண்டு. மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் வென்றுள்ளோம். எனவே யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. 1½ கோடி தொண்டர்களின் விருப்பம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதாகும். எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராகவும், கட்சியின் தலைவராகவும் ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான் உடனிருந்தார்.

    • ராதாபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உவரியில் நடந்தது.
    • உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் வழங்கினார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உவரியில் நடந்தது. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனி வாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல ராஜா, திசையன் விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
    • முகாமில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றியம், ராமநாதபுரத்தில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன், ராம நாதபுரம் கிளைச்செய லாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன் முன்னிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    இதில் அவைத்தலைவர் திருமலைச்சாமி, துணைச்செயலாளர் ராமராஜ், ஒன்றிய பிரதிநிதி சரவணன், தொழில் நுட்ப அணி மணிகண்டன், இந்திரஜித், செல்வராஜ், தங்கராஜ், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியை சிவந்திநகர் காந்தமதி ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார்.
    • குத்துக்கல்வலசை ரவுண்டானா முதல் தென்காசி ஹவுசிங் போர்டு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று லூர்து நாடார் பேசினார்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள சிவந்திநகரில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியை சிவந்திநகர் காந்தமதி ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார்.

    இதில் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பிப்போம். மேலும் தமிழக அரசு தென்காசி குத்துக்கல்வலசை ரவுண்டானாவில் இருந்து ஹவுசிங்போர்டு வரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்பொழுது காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக காணப்படுகிறது.

    இன்னும் சில வாரங்களில் குற்றாலம் சீசன் தொடங்க இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கூடுதலாக தென்காசிக்கு வந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிகமான சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் குத்துக்கல்வலசை ரவுண்டானா முதல் தென்காசி ஹவுசிங் போர்டு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில மாநில பொருளாளர் சுப்பிரமணியன், இசக்கிமுத்து நாடார், காந்திமதி ஜெயச்சந்திரன் கணேசன், சிவந்திநகர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எண் 13 முதல் 20 வரைக்கு உள்ள 8-க்கு உட்பட்ட பூத் கமிட்டி மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
    • புதிய உறுப்பினர்கள் சேர்த்து தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது குறித்து பேசினர்.

    குண்டடம் :

    குண்டடத்தில் தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குண்டடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்து பேசினார்.

    முகாமில் ருத்ராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட 101 தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாக எண் 13 முதல் 20 வரைக்கு உள்ள 8-க்கு உட்பட்ட பூத் கமிட்டி மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. கூட்டத்தில் தாராபுரம் சட்ட மன்ற தொகுதி பார்வையாளர் கே.எம். நாகராஜன், மாவட்ட பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, மாவட்ட ஐ.டி. விங் பொறுப்பாளர் ஆனந்தி ஆகியோர் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்த்து தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது குறித்து பேசினர். இதில் பேரூர் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    தமிழகம் முழுவதும் ஒரு கோடி திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வந்தவாசி தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக வந்தவாசி நகரத்தில் மட்டும் 5,500 உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம் தீயணைப்பு நிலையம் எதிரே நடந்தது நிகழ்ச்சிக்கு எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி நகராட்சி தலைவர் எச்சலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் எல்.அப்சர் லியாகத், முன்னாள் நகர செயலாளர் எஸ்.அன்சாரி, நகர அவை தலைவர் அ.நவாப் ஜான், முன்னாள் கவுன்சிலர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அ.தயாளன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் உறுப்பினர் சேர்க்கும் முகாமினை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டி.ராதா, கே.ஆர்.பழனி, மாவட்ட பிரதிநிதி எம்.டி.இப்ராகிம்சா, எம்.குடியரசு, இளைஞர் அணி நகர செயலாளர் கோமாதா சுரேஷ், கவுன்சிலர்கள் அன்பரசு, ஜெயபிரகாஷ், நூர் முஹம்மது, மருது சரவணகுமார், சந்தோஷ் குமார், முன்னாள் கவுன்சிலர்கள் வட்டச் செயலாளர்கள் சர்தார், ரவி, புருஷோத்தமன், ஜெகன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைச் செயலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

    வேலூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட தி.மு.க. இளைஞர் அணிக்கு இல்லம் தோறும் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் அருகே புது ஓட்டல் தெருவில் நடைப்பெற்றது.

    ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல் வரவேற்றார்.

    திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் கே.பி.ஆர்.ஜோதிராஜன், ஆ.சம்பத்குமார்,

    மாவட்டப் பொருளாளர் டி.ரகுநாத், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.கவிதாதண்டபாணி, மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர்கள் ஆர்.தசரதன், வி.வி.கிரிராஜ், எம்.சிங்காரவேலன், நா.பெ.பிரபு, நகர கழக நிர்வாகிகள் மகேந்திரன், இந்திரா பெரியார்தாசன், வசந்தகுமார், இனியன், சம்பத், சுரேஷ், பாஸ்கர், நகர இளைஞரணி து.அமைப்பாளர்கள் விக்டர், மணிகண்டன், இளவரசன், கபிலன், விஜயபிரபாகர் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    ×