என் மலர்
நீங்கள் தேடியது "ministers"
- 12 ந்தேதி காலை 10.00 மணியளவில் தாராபுரம், என்.ஜி.மஹாலில், நடைபெற உள்ளது.
- சிறப்பு அழைப்பாளர்களாக செய்தித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 12 ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் தாராபுரம், என்.ஜி.மஹாலில், மாவட்டக் கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையிலும், எனது (இல.பத்மநாபன்) முன்னிலையிலும் நடைபெறஉள்ளது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழக செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறைஎன்.கயல்விழி செல்வராஜ் கலந்துகொள்ள உள்ளார்கள்.அதுசமயம், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழகத்திற்குட்பட்ட மாநில.
மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற நகர, பேரூர் கழக நிர்வாகிகள், இந்நாள் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்டக் கழக பிரதிநிதிகள், சார்பு அணிகளின் இந்நாள்- முன்னாள் நிர்வாகிகள். கழகத்தின் செயல் வீரர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- விருதுநகரில் புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
- சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என விழாவில் அமைச்சர்கள் பேசினர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதா னத்தில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது.
இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதலாவது விருதுநகர் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தக கண்காட்சியை தெடாங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திரு விழாக்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையா டுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.
- ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்தது.
- தென்காசி மாவட்ட செயலாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.
ராஜபாளையம்
தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, சொக்கநாதன் புத்தூர் விலக்கு வழியாக ராஜ பாளையம் வந்து சேர்ந்தார்.
ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிழ் ஓட்டலில் அவர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணி வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். தென்காசி மாவட்ட செய லாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், காந்தி கலை மன்ற விலக்கு, காந்திசிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.
தமிழக அமைச்ச ரவையில் மாற்றம் குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய ப்பட்டதாக தெரிகிறது.
- மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார்.
மதுரை
மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி உடல்நலம் குறித்து விசாரித்த அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தையும் அவர் பார்வை யிட்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை தூண்களாக அமைக்கும் பணிகள் மதுரை அருகே உள்ள பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
- சிம்லாவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
- கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கு 25 இடங்கள் கிடைத்தன.
இமாச்சல முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு கடந்த மாதம் 11ம் தேதி பதவியேற்றார். அவருடன் முகேஷ் அக்னி கோத்ரி துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்தநிலையில் இமாச்சல பிரதேச அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன்படி சிம்லாவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. 7 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
3 முறை எம்.எல்.ஏ.வான தானிராம் சண்டில், ஹர்ஷ்வர்தன் சவுகான், முன்னாள் துணை சபாநாயகர் ஜகத்சிங் நெகி ரோகித் தாகூர், விக்ரமாதித்யசிங் 3 முறை எம்.எல்.ஏ.வான அணிருதா சிங் சந்தர் குமார் ஆகிய 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதில் விக்ரமாத்திய சிங் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் ஆவார். இதன் மூலம் இமாச்சலபிரதேச அமைச்சரவை எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
முதலமைச்சருடன் சேர்த்து 12 பேர் அமைச்சராகலாம். இதனால் 3 பேர் இன்னும் அமைச்சரவையில் இடம் பெறலாம்.
- தமிழ்நாடு முதலமைச்சரே நேரில் சென்று இது போன்ற திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார்.
- வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் என்றார்.
குடிமங்கலம்
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிலையில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு, மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரே நேரில் சென்று இது போன்ற திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் என்றார்.
தொடர்ந்து 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.20,000 மதிப்பீட்டில் தொழில் கடனுதவிக்கான காசோலையையும், 8 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.70.20 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிக்கான காசோலையையும் என மொத்தம் ரூ.70.40 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாதிக் பாட்ஷா, சிவகுருநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதற்கட்டமாக ரூ.15.86 லட்சம் மதிப்பீட்டில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கைபேசி என மொத்தம் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அமைச்சர் பேசினர்.
- அனைத்து பிரிவு தி.மு.கவினரும் திரளாக கலந்து கொண்டனர்.
காங்கயம் :
குண்டடத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பேரூர் செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு சாவடி அமைத்தல், தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பேசினர். இதில் குண்டடம் ஒன்றிய, பேரூர் உட்பட அனைத்து பிரிவு தி.மு.கவினரும் திரளாக கலந்து கொண்டனர்.
- மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
- 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.
வீரபாண்டி :
பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன்படி கலெக்டர் மற்றும் சப்- கலெக்டர் ஆகியோர் ஆய்வின் முடிவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரி, வாடிவாசல் மற்றும் போட்டியில் கலந்து கொண்டபின் செல்லும் மாடுகளை பிடிப்பதற்கான இடம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. நாளை 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதையொட்டி மாடு பிடி வீரர்கள் முன்பதிவு தீவிரமாக நடைபெற்றது. இதில் சுமார் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதுகாப்புக்கான போலீசார் பற்றாக்குறை ஏற்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வைத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களினால் 23-ந் தேதி நடத்தப்படவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை வேறு ஒரு தேதியில் நடத்துவதற்கு ஏதுவாக மாற்று தேதி மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் என அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி தெரிவித்தார். போட்டியினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்குகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அல–கு–மலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
- சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கூறினர்.
- அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை சித்திரை பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் பி.மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பேசும்போது கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தின் அடை யாளங்களில் ஒன்றான சித்திரை பெரு விழா மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா வில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. தேரோட்டம் 3-ந்தேதி நடக்கிறது. கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர் சேவை 4-ந்தேதி நடக்கிறது. வைகை ஆற்றில் எழுந்த ருளல் 5-ந்தேதி நடக்கிறது.
கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்த ருளல் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலின் காரணமாக உயிரிழப்பு போன்ற வருந்தத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. இத்தகைய சம்பவங்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். அதற்கேற்றாற்போல் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையை அதிக ரித்து வாகன நிறுத்தம், மக்கள் கூட்டம் ஆகிய வற்றை முறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதிய சி.சி.டி.வி காமிராக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை செய்திட வேண்டும்.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்கு வழங்கப்படும் அனுமதி அட்டையை முறையே பரிசோதித்து அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.
மேலும் தேரோட்டத் தின்போது தேரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணித் துறையின் சான்றிதழ் பெற்றிட வேண்டும். தேர் செல்லும் வழி, கள்ளழகர் ஊர்வலம் வரும் வழிகளை முறையே கண்காணித்து தாழ்வான நிலையில் மின் விநியோக கம்பிகள் உள்ளனவா? என்பதை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.
மேலும் பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகிய வற்றை உறுதி செய்திட வேண்டும். அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய மருத்துவக் குழுக்கள் அமைத்திட வேண்டும். அரசு மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். உலகளவில் பெருமை வாய்ந்த சித்திரை பெருவிழாவை மிகச்சிறப் புடன் நடத்திட அனைத்துத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர், மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி பொன்வசந்த், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மதுரை மாநகராட்சி ஆணை யாளர் சிம்ரன்ஜித் சிங், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) , வெங்க டேசன் (சோழவந் தான்) , பூமிநாதன் (மதுரை தெற்கு) ,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் சூரியகலா கலாநிதி , துணை மேயர் நாகராஜன், மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் , கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
- திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் இருந்து நிதி உதவி பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்குவதற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரிடம் வழங்கினார். தி.மு.க. மாவட்ட நிர்வாகி திலகராஜ் உடனிருந்தார்.
விழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், சுப்பராயன் எம்.பி., புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் முருகநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார்.
- வரும் காலங்களில் சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறுமா என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.
சென்னை:
அ.தி.மு.க.வில் நீடித்து வந்த தலைமை பதவிக்கான அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவர் ஏகமனதாக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டு கதவை தட்டிய ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. தலைமை விவகாரத்தில் சாதகமான அம்சங்கள் எதுவுமே நடைபெறவில்லை.
தேர்தல் ஆணையத்தில் தொடங்கி கோர்ட்டு நடவடிக்கைகள் வரை அனைத்துமே எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்து உள்ளன. இப்படி அ.தி.மு.க.வில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
தேவைப்பட்டால் சசிகலாவையும் சந்திப்பேன் என்றும், அ.தி.மு.க.வை மீட்பதே எங்கள் லட்சியம் என்றும் கூறிக்கொண்டு ஓ.பி.எஸ். காய் நகர்த்தினார். அது எந்தவித தாக்கத்தையும் அ.தி.மு.க.வில் இதுவரை ஏற்படுத்தவில்லை.
இதனை சசிகலாவும் நன்றாக புரிந்து வைத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உடனடியாக ஓ.பி.எஸ்.சை சந்திக்க விரும்பாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கைப்பற்றியதை சசிகலா நன்கு உணர்ந்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் சசிகலாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்துள்ளார்.
இதன் காரணமாகவே அவரை சசிகலா முதல்-அமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தினார். தற்போது எடப்பாடி பழனிசாமி ஒரு சிலரை தவிர பிரிந்து சென்ற அனைவரும் அ.தி.மு.க.வில் வந்து சேரலாம் என்று கூறி வருகிறார்.
இதுபற்றி அ.தி.மு.க. வினர் கூறும்போது, சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரையும் மறைமுகமாக குறிப்பிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி கூறுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் சசிகலாவோ இதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து தூது விட்டுக் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார். இதன் காரணமாகவே அவர் எடப்பாடி பழனிசாமிக்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் துணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக பேச்சு நடத்தி எப்படியும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட வேண்டும் என்று சசிகலா கணக்கு போட்டுள்ளார்.
ஆனால் எடப்பாடியின் எண்ணமோ வேறு மாதிரியாக உள்ளது. சசிகலா குடும்பத்தினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் அவர்கள் சொல்கிறபடி தான் நாம் நடக்க வேண்டி இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
அ.தி.மு.க.வில் உள்ள பெரும்பாலானோரின் எண்ணமும் இதுவாகவே உள்ளது. எனவே வரும் காலங்களில் சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா? என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.
இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறும் போது, தற்போதைய சூழலில் சசிகலாவை வைத்து அ.தி.மு.க.வுக்கு எந்தவித செல்வாக்கும் வந்துவிடப் போவதில்லை.
எனவே எடப்பாடி பழனிசாமி தற்போது சசிகலாவின் இந்த தூது நடவடிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தமாட்டார். சசிகலா உள்ளிட்ட அவரது ஆட்கள் யாரை உள்ளே விட்டாலும் நமக்கு ஆபத்து என்பதை அவர் நிச்சயம் உணர்ந்துள்ளார். எனவே அது போன்று நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமியால் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.