என் மலர்
நீங்கள் தேடியது "M.l.A."
- புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
- முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதும க்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் மற்றும் வடகரை ஊராட்சி திருப்பனையூர் ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். திருமருகல் நாகை கோட்ட பொறியாளர் சேகர், திருமருகல் உதவி மின் பொறியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எரவாஞ்சேரி ரஜினிதேவி பாலதண்டாயுதம், வடகரை மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் மின் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
- மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
- காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம்
மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் 74-வது குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, கோரி க்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளை அழைத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார். தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். கோரவள்ளியில் கலை யரங்கம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளி த்தார்.
மண்டபம் ஒன்றிய ஆணையாளர் சண்முக நாதன், கோரவள்ளி ஊராட்சி தலைவர் கோகிலவாணி சிவஞானம் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஜே.பிரவின் ஏற்பாட்டில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரெட்டையூரணியில் புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார்.
காரான், வழுதூர், வாலாந்தரவை, சாத்தான் குளம் ஆகிய இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். அப்போது 500-க்கும் அதிகமான பொதுமக்களுக்கு வேட்டி,சேலை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர், வாலாந்தரவை ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜீவா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிய பஸ் சேவையை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் கள்ளிக்குடி கிராமம் உள்ளது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் முக்கிய அரசியல் பிரமு கர்கள் என பல்வேறு தரப்பினரை உருவாக்கிய இந்த கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் அந்த கிராம மக்கள் தங்களின் கிரா மத்துக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அங்கிந்து தேவகோட்டை நகருக்கு புதிய பேருந்து சேவையை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் முன்னி லையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்தானது தேவகோட்டையில் இருந்து புலியடிதம்மம் செல்லும் போது எழுவன்கோட்டை, ஈகரை வழியாக கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்து புதுக்கோட்டை பெரிய காரை மற்றும் வேலாயுத பட்டினம் வழியாக புலியடி தம்மம் செல்கிறது.
மேலும் இதே மார்க்கமாக தேவகோட்டைக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளில் செல்கிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பூமிநாதன், போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மேலாளர் சிங்காரவேல், வர்த்தக பிரிவு மேலாளர் நாகராஜன் கிளை மேலாளர் சொக்கலிங்கம், பொறி யாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
- கலைஞர் கோட்டத்தை பார்க்க பள்ளி மாணவ-மாணவிகளை எம்.எல்.ஏ. அழைத்து சென்றார்.
- அரசு குளிர்சாதன பஸ்கள் வர வழைக்கப்பட்டிருந்தது.
மானாமதுரை
திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பார்ப்பதற்காக தமிழரசி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மானாமதுரை தொகுதியை சேர்ந்த திருப்புவனம், இளை யான்குடி, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள், 100 மாணவிகளை அழைத்து செல்ல முடிவு செய்யப் பட்டது.
அதன்படி மாணவ-மாணவிகளை திருவாரூர் அழைத்துச் சொல்ல 4 அரசு குளிர்சாதன பஸ்கள் வர வழைக்கப்பட்டிருந்தது. மானாமதுரை சிவகங்கை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர் புறம் உள்ள தனியார் மகாலில் மாணவ- மாணவி களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அதன்பின் மாணவ- மாணவிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பஸ்களில் ஏறி அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ., திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், ஆகியோர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தமிழரசன், காங்கிரஸ் மாவட்ட மூத்த தலைவர் முருகேசன் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் ராஜாமணி, கடம்பசாமி, வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, ரவிச் சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள் முத்துசாமி, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே கிராமசபை கூட்டம் நடந்தது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூ ரில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தங்கபாண்டியன்
எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார். ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருடத்திற்கு 4 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 6 முறை யாக மாற்றியவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர். கிராமத்தின் அடிப்படை தேவை குறித்து பொது மக்கள் அளித்த கோரிக்கை கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். இதில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ராமமூர்த்தி, துணை சேர்மன் துரை கற்பகராஜ், கவுன்சிலர்கள் நவமணி, காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கடல்கனி, கிளை செயலாளர்கள் சின்னதம்பி, சீதாராமன், வைரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடம் முருகேசன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
- தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
பரமக்குடி
பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து பரமக்குடி ஒன்றியம், தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி மீனாட்சி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பரமக் குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, தெளிச் சாத்தநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் மங்களேஸ் வரி சேதுபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் கண்ணன், கதிர் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி மன்ற அலுவலகத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ முற்றுகையிட்டனர்.
- உசிலம்பட்டி சந்தை திடலில் உள்ள நூலகம் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் மழைநீர் தேங்கியுள்ளது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடலில் அமைந்துள்ள நூலகம் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் மழைநீர் தேங்கி பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. அய்யப்பனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை அடுத்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பல முறை நகராட்சி அதிகாரிகளிடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நூலகத் தில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையிலான நிர்வாகிகள் சந்தை திடலில் இருந்து நடைபயணமாக பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை முற்றியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
- புத்தகம் வாசிப்பதால் மட்டுமே முழுமையான அறிவு பெருகும் என தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
- காமராஜர் பிறந்த விருதுநகருக்கு பெருமை சேர்த்துள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 2ம் ஆண்டு புத்தக திருவிழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டி யன் கலந்து கொண்டு புத் தக கண்காட்சியை பார்வை யிட்டார்.
புத்தக விழாவில் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருவாய்த்துறை, நிதித்துறை அமைச்சர்களின் ஆலோசனை படி சிறப்பாக புத்தக திருவிழா நடை பெற்று வருவது கல்விகண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருது நகருக்கு பெருமை சேர்த் துள்ளது.
பேரறிஞர் அண்ணா கூற்றுப்படி ஒரு நூலகம் திறந்தால் நூறு சிறைச் சாலைகள் மூடப்படும் என்பதை உணர்ந்து முன்னாள் முதல்- அமைச் சர் கருணாநிதி மிகப்பெரிய ளவில் அண்ணா நூலகம் திறந்து வைத்தார்.
அவர்வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்தி புத்தகத்தின் முக்கியத்துத்தை இளை ஞர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். எத்தனை தொழில்நுட்பம் கணிணி செல்போனில் படித்தாலும் புத்தகத்தை படித்தல் மட்டுமே முழுமையான அறிவு பெருகும்.
ராஜபாளையத்தில் பெண்களுக்கென தனியாக நூலக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தற்போது சட்ட மன்ற நிதியிலிருந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சி நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் தொகுதியில் வேறெங்கும் நூலக வசதி தேவைப்படுமேயானால் சட்ட மன்ற நிதியிலிருந்து செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் சேத்தூர் பேரூர் சேர்மன்கள் ஜெய முருகன், பாலசுப்பிர மணியன், சேத்தூர் செட்டி யார்பட்டி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 50-வது வார்டிற்கு தேவையான ஆரம்ப சுகாதார நிலையம், கழிவு நீர் ஓடை, அனைத்து தெருக்களிலும் சாலை அமைத்திட வேண்டும், கன்னிமார்குளம் கரையில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல்,
குளத்தில் கலக்கும் கழிவுநீர் ஓடையை தனி கால்வாய் கட்டிவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வார்டு உறுப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் எடுத்து கூறினர்.
அதற்கு கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ., மேயர், துணை மேயர் ஆகியோர் வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் பஜார் திடல் அருகே பள்ளிக்கு செல்ல திண்ணையில் காத்திருந்த மாணவர்களிடம் சென்று அருகில் அமர்ந்து அவர்களிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.
மேலப்பாளையம் ஹாமீம்புரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற ஆய்வுக் குழுவினர் பள்ளிக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து தனியார் கல்லூரி பகுதியில் தூய்மைப்பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரசூல் மைதீன், ரம்ஜான் அலி, ஆமினா பீவி, மாநகர செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் அந்தோணி, மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அவினாசியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் உள்ளது.
- தெக்கலூரில் ஒரு சில பஸ் தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை.
அவினாசி:
அவினாசி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., தனபால் தொகுதி மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். அப்போதுஅவினாசி ஒன்றியம் கருவலூரில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும். வளர்ந்து வரும் கருவலூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.வஞ்சிபாளையம்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். வஞ்சிபாளையத்திலிருந்து முருகம்பாளையம் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.சின்ன ஒலப்பாளையம் கானாங்குளம், குப்பான்டம்பாளையம், வடுகபாளையம்,பிச்சான்டம்பாளையம், ஆலாம்பாளையும் ஆகிய பகுதி எ.டி.காலனி மக்கள் மயானத்திற்கு சாலைவசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்.
அவினாசியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் உள்ளது. இப்பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் அவினாசி. திருப்பூர், நியூ திருப்பூர் ஆகிய பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கும், விசைத்தறி கூடங்களுக்கும் தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாவை, மாணவியர் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் தெக்கலூரில் ஒரு சில பஸ் தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா.எனவே தெக்கலூரில் அனைத்து பஸ்களும் நின்று பயனிகளை ஏற்றி இறக்கி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ.தனபாலிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிகூறினார்.