என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammed Siraj"

    • நான் ஏழு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி இருக்கிறேன்.
    • எனது பந்துவீச்சிலும், எனது மனநிலையிலும் நான் நிறைய வேலைகளை செய்து இருக்கிறேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் ஒரு சமயம் எனக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்காதது ஜீரணிக்க முடியாததாக இருந்தது என சிராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது எனது சொந்த மைதானம். எனவே, எனக்கு இது சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது. இங்கு கூட்டத்தில் எனது குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அது எனது ஆட்டத்தை மேலும் உயர்த்த உதவியது. நான் ஏழு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி இருக்கிறேன். எனது பந்துவீச்சிலும், எனது மனநிலையிலும் நான் நிறைய வேலைகளை செய்து இருக்கிறேன். அது இப்போது சிறப்பாக எனக்கு உதவி செய்கிறது.

    ஒரு சமயம் எனக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்காதது ஜீரணிக்க முடியாததாக இருந்தது.ஆனால் நான் எனது மனநிலையை மாற்றிக் கொண்டு எனது உடல் தகுதி மற்றும் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேலை செய்தேன். நான் என்ன தவறு செய்திருந்தாலும் அதை முன்னேற்றிக் கொண்டு எனது பந்துவீச்சை அனுபவித்து வீசினேன்.

    ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் தொடர்ந்து நமக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எப்போதுமே இருக்கும். ஆனால் என்னை நானே தேற்றிக்கொண்டு ஐபிஎல் இல் விளையாட வந்தேன். நாம் என்ன பந்து வீச முயற்சி செய்கிறோமோ அதை சரியாக செய்தால் நாம் உச்சத்தில் இருக்கலாம். பந்தை இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் செய்தால் அது நிச்சயம் வேலை செய்யும். இது எனக்கு நல்ல அனுபவமாக உள்ளது.

    என்றார் சிராஜ்.

    • ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
    • குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்நிலையில், ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் 4 ஓவர் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும், இந்தப் போட்டியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையையும் படைத்திருக்கிறார்.

    மேலும், 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் தனது சிறந்த பந்துவீச்சையும் சிராஜ் பதிவுசெய்திருக்கிறார்.

    • என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார்.
    • இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முன்னாள் ஆர்சிபி வீரரும் தற்போது குஜராத் அணியின் வீரரான முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில் சிராஜ் உண்மையில் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை இந்திய அணிக்கு கொடுத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் அவர் மனதளவில் காயத்தைச் சந்தித்துள்ளார். அதனால் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. அந்த நெருப்பை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்.

    என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் தற்போது எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் அவர் தனது சாதனையைத் தக்க வைத்துக் கொண்டார். தனது முதல் 3 ஓவர்களில் அவர் 12 - 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் 4-வது ஓவரை வீசியிருந்தால் அவர் 4-வது விக்கெட்டை எடுத்திருப்பார். பிட்ச்சில் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார்.

    என சேவாக் கூறினார்.

    • 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார்.
    • நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

    பெங்களூர்:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் குஜராத் அணிக்காக முதல் முறையாக விளையாடிய சிராஜ் குஜராத் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். நான்கு ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    முன்னதாக ஆர்சிபி அணி பேட்டிங் செய்த போது முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சால்ட் ஒரு ரன் எடுத்தார். இதனையடுத்து விராட் கோலி ஸ்ட்ரைக்கு வந்தார். அவருக்கு எதிராக பந்து வீச ஓடி வந்த சிராஜ், பாதி வழியில் பந்து வீச முடியாமல் திரும்பினார். அப்போது சிராஜ் கையை அசைத்து மன்னித்து விடுங்கள் என்பது போல சைகை காட்ட பதிலுக்கு விராட் பரவாயில்லை என்பது போல சைகை காட்டினார். இருவரது முகத்திலும் ஒருவிதமான அன்பு வெளிப்பட்டது.

    இந்த உணர்ச்சிவசமான சம்பவத்தை ஆர்சிபி ரசிகர்கள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    நான் ஆர்சிபிக்கு எதிராக விளையாடும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். ஏனென்றால் நான் ஆர்சிபிக்காக 7 ஆண்டுகள் விளையாடிருக்கின்றேன். இதன் காரணமாக இன்று ஆட்டத்தில் நான் கொஞ்சம் பதற்றமாகவும் உணர்ச்சி வசப்பட்டேன் என போட்டிக்கு பிறகு சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    7 ஆண்டுகளாக ஆசிபி அணிக்காக விளையாடி சிராஜ்-ஐ ஆர்சிபி அணி தக்க வைக்காமல் அணியை விட்டு நீக்கியது. இதனால் கடுப்பான சிராஜ் தற்போது ஆர்சிபிக்கு எதிராக விளையாடிய போது தனது கோபத்தை பந்து வீச்சில் வெளிப்படுத்தினார் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

    தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல தன்னால் முடிந்ததை அவர் செய்தார் என்றும் பலர் கூறினர். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்கலாம் எனவும் அவரது அணி வெற்றி பெற அவர் உழைத்தார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.
    • 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ். 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் கூறியதாவது:

    நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். நான் 7 வருடங்கள் இங்கு இருந்தேன். ஜெர்சியை சிவப்பு நிறத்தில் இருந்து நீலமாக மாற்றினேன். உணர்ச்சிவசப்பட்டேன், ஆனால் பந்து கிடைத்ததும் எனக்கு நன்றாக இருந்தது. நான் ரொனால்டோவின் ரசிகன், அதனால் கொண்டாட்டம்.

    நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். இடைவேளையின் போது என் தவறுகளை சரிசெய்து, என் உடற்தகுதியை மேம்படுத்த முயற்சித்தேன்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி என்னை அழைத்துச் சென்றதும் நான் ஆஷிஷ் பாயிடம் பேசினேன். நெஹ்ரா எனது பந்துவீச்சை அனுபவிக்கச் சொல்கிறார். இஷாந்த் பாய் என்ன லைன் அண்ட் லென்த் பந்து வீசவேண்டும் என்று சொல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். பிட்ச் எனக்கு ஒரு பொருட்டல்ல என தெரிவித்தார்.

    • புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன்.
    • இந்த ஐபிஎல்லில் விஷயங்கள் எனக்கு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யாரும் எதிர்பாராத வகையில் முகமது சிராஜுக்கு இடம் கிடைக்கவில்லை.

    சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதேசமயம் சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய முகமது சிராஜ், "அணியின் தேர்வு என் கையில் இல்லை. என் கைகளில் ஒரு கிரிக்கெட் பந்து மட்டுமே இருக்கிறது, அதை வைத்து என்னால் முடிந்ததைச் செய்ய விரும்பினேன். நான் என் செயல்திறனில் கவனம் செலுத்த விரும்புவதால், தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. நான் சில வருடங்களாக விளையாடி வருகிறேன். பொதுவாக, எங்களுக்கு அவ்வளவு ஓய்வு கிடைப்பதில்லை.

    ஆனால் இப்போது எனக்கு சிறிது ஓய்வு கிடைத்ததால், எனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டேன். புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். மேலும் எனது மெதுவான பந்துகள் மற்றும் யார்க்கர்களில் வேலை செய்ய விரும்பினேன். இந்த முறை நான் அந்த பகுதிகளில் அதிகம் வேலை செய்துள்ளேன். இந்த ஐபிஎல்லில் விஷயங்கள் எனக்கு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.

    என்று தெரிவித்துள்ளார்.

    எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட முகமது சிராஜ் ரூ.12.25 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 6 விக்கெட்கள் கைவசம் உள்ளன.
    • இந்திய வீரர்களில் ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் வெற்றி பெற முடியும்.

    டாக்கா:

    இந்தியா வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் ஆடிய வங்காளதேசம், முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்தது.

    தொடந்து 2-வது இன்னிங்சை விளையாடிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தள்ளது.

    அக்சர் பட்டேல் 26 ரன்னுடனும், உனத்கட் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணியிடம் இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளது.

    இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இன்று வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெறுமா? அல்லது இந்திய அணியின் எஞ்சிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி வங்காளதேசம் வெற்றி பெறுமா என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளதாவது: நான்கு விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதும் பேட்டிங் செய்ய இன்னும் சிலர் இருக்கிறார்கள். அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

    அக்சர் ஏற்கனவே செட் ஆகி உள்ளார். அவர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துகிறார். ரிஷப் (பண்ட்) மற்றும் ஐயர் (ஷ்ரேயாஸ் ) இன்னும் இருக்கிறார்கள். நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இவர்களில் யாராவது ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் நாம் வெற்றி பெற முடியும். மேலும் இடது மற்றும் வலது கை பேட்டிங் கலவை வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவித்தார்.

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
    • கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோகித் 9 இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியை இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. இதன் மூலம் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தொடர முடிவடைந்த பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.


    இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 2 இடம் உயர்ந்து 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார். விராட் கோலி ஒரு இடம் இறங்கி 7 வது இடத்துக்கு வந்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோகித் 9 இடத்துக்கு முன்னேறினார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் முகமது சிராஜ் முத்ல் இடத்துக்கு முன்னேறினார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை . ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதல் இடத்திலு, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வான் டெர் டுசென், டிகாக் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.

    • ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் முகமது சிராஜ்.
    • சிராஜ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார்.

    மும்பை:

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான எஸ்.ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு மே மாதம் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக முன்னாள் சிஎஸ்கே அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதில் இருந்து பிசிசிஐ அதன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த நபர் ஒருவர், அணியின் உள் தகவல்களை பெற தன்னை நாடியதாக பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ஏசியூ) இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியின்போது, முகமது சிராஜை ஒரு நபர் அணுகியதாகவும், சிராஜ் உடனடியாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தைத் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் முகமது சிராஜ். மேலும், சிராஜ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் முன்பு புவனேஷ்வர் குமார் சார்பில் பர்ப்பிள் கேப் வாங்கினேன்.
    • அப்போது நானும் ஒருநாள் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என கனவு கொண்டேன்.

    மொகாலி:

    29 வயதான சிராஜ் கடந்த 2017 முதல் ஐபிஎல் அரங்கில் விளையாடி வருகிறார். முதல் சீசனை ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2018 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 71 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.

    இந்நிலையில் நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்பதற்கான அங்கீகாரமாக பர்பிள் கேப்பை அவர் பெற்றுள்ளார்.

    இது குறித்து சிராஜ் கூறியதாவது:-

    கடந்த ஐபிஎல் சீசன் நான் எதிர்பார்த்த அளவுக்கு எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. நான் செயல்படுத்த விரும்பியதை என்னால் செய்ய முடியாமல் போனது. இப்போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறேன்.

    மூன்று பார்மெட்டிலும் விளையாட விரும்புகிறேன். ஆனால், அது என் கைகளில் இல்லை. எனது எண்ணம் எல்லாம் சிறப்பாக செயல்படுவதில் மட்டுமே உள்ளது. அதை செய்கிறேன். பவுலிங்கில் எனது ரிதமில் கவனம் செலுத்தி வருகிறேன்.

    நான் முன்பு புவனேஷ்வர் குமார் சார்பில் பர்ப்பிள் கேப் வாங்கினேன். அப்போது நானும் ஒருநாள் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என கனவு கொண்டேன். அது இப்போது நடந்துள்ளது மகிழ்ச்சி.

    என சிராஜ் கூறினார்.

    • 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

    ஐதாரபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள முகமது சிராஜ் புதிய வீட்டிற்கு விராட் கோலி உள்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சென்றுள்ளனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியாகியுள்ளன. இதைவிட குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. கடந்த சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 42 ஓவர்கள் வீசி 327 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரேயொரு முறை மட்டும் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரையில் 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் தற்போது வரையில் 78 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

     

    இந்த நிலையில், ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த சிராஜ், ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு விராட் கோலி உள்பட மற்ற ஆர்சிபி வீரர்கள் அணிவகுத்து சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
    • சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது.

    அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கான பிஸியான அட்டவணையைக் கருத்தில் கொண்டு சிராஜ்க்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 

    ×