என் மலர்
நீங்கள் தேடியது "Moon"
- திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக மனைவிக்கு வாக்குறுதி.
- லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10 ஆயிரத்திற்கு வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக சஞ்சய் தனது மனைவியிடம் வாக்குறுதி அளித்து இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதுபோன்ற பரிசை வாங்க வேண்டும் என்ற ஆசை, இந்தியா நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் தான் வந்தது என்று சஞ்சய் மேலும் தெரிவித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற பிறகு, தன்னால் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

நானும், எனது மனைவியும் நீண்ட காலம் காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டோம். நான் அவரிடம் நிலவை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தேன். ஆனால், என்னால் அப்படி செய்ய முடியவில்லை. தற்போது எங்களது திருமணத்திற்கு பிறகு வந்த அவளின் முதல் பிறந்தநாளில், நான் அவருக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளிக்க வேண்டும் என நினைத்தேன்," என்று சஞ்சய் மஹாட்டோ தெரிவித்து உள்ளார்.
தனது நண்பர் உதவியுடன், லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியதாக சஞ்சய் தெரிவித்தார். இதற்கான வழிமுறைகள் நடைபெற்று முடிய ஒரு ஆண்டுகாலம் ஆனதாக அவர் மேலும் தெரிவித்தார். நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றையும் சஞ்சய் மஹோட்டா தன்னிடம் வைத்திருக்கிறார்.
முன்னதாக 2020 ஆண்டு வாக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரை சேர்ந்த நபர் தர்மேந்திர அனிஜா, தனது மனைவிக்கு நிலவில் மூன்று ஏக்கர் நிலத்தை பரிசாக கொடுத்தார். தனது எட்டாது திருமண நாளை கொண்டாடும் வகையில், மனைவிக்கு நிலவில் நிலத்தை பரிசளித்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.
- திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம்.
- காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மகாட்டோ. இவர் காதல் திருமணம் செய்தவர். திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காதலியை கரம் பிடித்தார்.
இந்நிலையில் தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் சஞ்சய் தனது காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், திருமணத்துக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி பரிசளிக்க திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது நண்பர்களிடம் ஆலோசித்தேன். அவரது உதவியுடன் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கினேன். பின்னர் நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றை எனது மனைவியிடம் கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாக கூறினார்.
- சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.
- லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் உள்ளன.
சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும் போது, அவற்றின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள் நீடித்த சந்திர இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.
இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் அவற்றை உறக்க நிலைக்கு இஸ்ரோ கொண்டு சென்றது. இந்நிலையில், நிலவின் அடுத்த சூரிய உதயம் நாளை(வெள்ளிக்கிழமை) நிகழ்கிறது. இதையொட்டி லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதற்கான பணிகளை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். லேண்டர், ரோவர் மீண்டும் விழித்து ஆய்வில் ஈடுபடும் பட்சத்தில் நிலவின் தென் துருவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் உலகுக்கு இஸ்ரோ மூலமாக கிடைக்கும்.
- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ந் தேதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் 3 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆளில்லா பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை முடித்துக்கொண்டு வருகிற 2025-ம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் முதல் முறையாக இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்படுகிறது.
சூரியனின் மையப்பகுதி, சூரியனில் இருந்து வீசும் காற்று, சூரிய தீப்பிழம்புகள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலங்களை அளவிடுவது உள்பட சூரியனுக்குள் பொதிந்துள்ள மர்மங்களைக் கண்டறிவதற்காக, இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு பணியாக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் (15 லட்சம் கிலோ மீட்டர்) தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி (எல்.1) நோக்கி பயணித்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் ஹாலோ சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்படும்.
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ந் தேதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 14 புவி நாட்களில், இது நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து நிலவு குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது.
சிறிய செயற்கைகோள் ஏவுதல் வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி.), மறுபயன்பாட்டு ஏவுதல் வாகனம் (ஆர்.எல்.வி.) திட்டம், எக்ஸ்ரே வானியல் பணி எக்ஸ்போசாட் (எக்போசாட்- எக்ஸ்-ரே போலரி மீட்டர் (செயற்கைகோள்)), விண்வெளி டாக்ஸி பரிசோதனை மற்றும் லாக்ஸ்-மீத்தேன் எந்திரம் ஆகியவை இதில் அடங்கும்.
2023-2024-ம் ஆண்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள எக்போசாட் இந்தியாவின் முதல் அர்ப்பணிப்பு அறிவியல் பணியாகும். ஸ்பேடக்ஸ் (ஸ்பேஸ் டக்கிங் சோதனை) என்ற அறிவியல் பூர்வமான கருவிகளைப் பயன்படுத்தி பிரகாசமான வானியல் எக்ஸ்ரே மூலங்களை இது ஆராயும். இது ஜனவரி 3-வது காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
2035-ம் ஆண்டில் "இந்திய விண்வெளி நிலையம்" (பாரதிய அண்டாரிக்ஷா நிலையம்) தொடங்குவது மற்றும் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் இருப்பை மேலும் உறுதிப்படுத்த வெள்ளிக்கோளின் சுற்று வட்டப்பாதை ஆய்வு திட்டம் மற்றும் செவ்வாயில் ஆராய்ச்சி ஆகியவற்றைக் கொண்ட கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வது போன்ற லட்சிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி திட்டம் வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்ட தயாராக உள்ளது. தொடங்கப்பட்ட ஒவ்வொரு பணி மற்றும் ஒவ்வொரு கண்டுபிடிப்புடனும், இஸ்ரோ உலக அரங்கில் ஒரு சக்தியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தேசிய பெருமையைத் தூண்டுகிறது. அத்துடன் இந்தியாவின் தொழில்நுட்ப சாதனையை விரிவுபடுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது.
- இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது.
கடந்த 1969-ம் ஆண்டு அப்பல்லோ விண்கலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதல் காலடியை வைத்தார். இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என்று நாசா தெரிவித்தது.
இதன் முதல்கட்ட விண்கலத்தையும் ஏவி சோதனை செய்தது. இந்த நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2026-ம் ஆண்டு வரை தள்ளி வைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அந்த விண்கலம் ஏவப்படுவது அடுத்த ஆண்டுக்கு (2025) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்புவது 2026-ம் ஆண்டுக்கு தள்ளி போயிருக்கிறது.
- ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் லேண்டரை தரையிறக்கியது.
- லேண்டர் 100 மீட்டர் தொலைவில் இருந்து தரையிறங்கியது.
ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சித்தது.
தற்போது லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயல்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
- ஜப்பான் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்தின் லேண்டர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
- அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரையிறங்கி சாதனை புரிந்துள்ளது.
புதுடெல்லி:
ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.
இதன்மூலம் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரை இறங்கி சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில், நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு வாழ்த்துக்கள். விண்வெளி ஆராய்ச்சியில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதை இஸ்ரோ எதிர்நோக்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
- 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார்.
- நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.
வாஷிங்டன்:
நிலவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22 -ந்தேதி சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.
இதில் இருந்து பிரிந்த தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது.
சுமார் 3 ஆண்டு காலம் நிலவை சுற்றும் இந்த ஆர்பிட்டர் நிலவின் கரடு முரடான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.
54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார். இதன் மூலம் நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது அவர் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.
அந்த கருவி தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை தற்போது சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது.
பெங்களூரு:
நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஐ.ஐ.டி. கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் பிராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய (எஸ்.ஏ.சி.) இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. எனவே நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜெட் பிராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய (எஸ்.ஏ.சி.) இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது.
- தற்போது சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது.
- வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது.
பீஜிங்:
நிலவை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக சந்திரயான்-3 செயற்கைக்கோளின் லேண்டரை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது.
இந்தநிலையில் தற்போது சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது. இந்த செயற்கைக்கோள் நிலவில் 53 நாட்கள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். பின்னர் முதன்முறையாக நிலவில் இருந்து தூசி, பாறை உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வர உள்ளது.
இதற்காக சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-5 ஒய்-8 என்ற ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதேபோல் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நிலவு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது.
- ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அங்கு மனிதர்கள் தரையிறங்கக்கூடிய இடங்களை கண்டறிந்துள்ளது.
சந்திரனின் தென் துருவம் என்பது சூரியனில் இருந்து விலகி நிரந்தரமாக நிழலாக இருக்கும் ஒரு பகுதி. இங்கு மனிதர்கள் கால் பதிக்க வசதியான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 1969-ம் ஆண்டு நாசா தனது அப்போலோ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன்பின், தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவுசெய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது.
இந்நிலையில், நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை ஒன்றில், நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது.
52 ஆண்டுகளுக்கு முன் விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர். அப்போதிருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான் நேவிகேஷன் அமைப்புகள் போன்ற செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
- நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம்.
கோவை:
கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்த பள்ளியில் தான் அவர் பள்ளிப்படிப்பை படித்தார். பின்னர் மயில்சாமி அண்ணாதுரை 'தினத்தந்தி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
''நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்கமுடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதைத்தொடர்ந்து நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.